அவர்கள் அதை எப்போதும் நிறுத்துவ தாய் இல்லை... அது எழுதப்படுகிற அல்லது அச்சடிக்கப்படுகிற எந்தவொரு எழுத்தாக இருப்பினும்.. அதற்கான ‘மை’ களில் வன்மத் தையும் கலந்தே பயன்படுத்துவதை வழக்க மாகக் கொண்டிருக்கிறார்கள். கண்மூடித்தன மான கம்யூனிச எதிர்ப்பை கையாண்டுக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் ஊடகங்கள் குறித்து பேசுகிற போது, அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வியாபாரத்திலும், இன்னபிற விஷயங்களிலும், அவர்களுக்குள் போட்டியிருந்தாலும் இதில் மட்டும் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்பது அம்பல மான உண்மையே. உலகிலேயே 14 மொழி களில் அச்சாகும் இதழ் என விளம்பரத்தோடு வெளிவரும் அந்த மாதமிருமுறை இதழில், அச்சாகும் அனைத்து மொழிகளிலும் வெளி யிடப்பட்டிருக்கும் ஒரு பிரத்யேக கட்டுரை யில் தான் அந்த ஆரூடம் சொல்லப்பட்டிருக் கிறது.
‘பிரணாப் முகர்ஜி தில்லியின் வடக்கு பிளாக்கிலிருந்து கொல்கத்தாவின் ரைட் டர்ஸ் கட்டிடத்திற்கு செல்லக்கூடும். மம்தா இதற்கு மறுப்புச் சொல்ல மாட்டார்..” என்ற பூடக வார்த்தைகளோடு துவங்கும் அந்த கட்டுரை, தனது உள்ளார்ந்த எதிர்பார்ப்பைத் தான் ‘அலசல்’ என்ற பெயரால் சில பக்கங் களுக்கு நிரப்பியிருக்கிறது. ‘மற்றவர்களோடு அனுசரித்துப்போவதில் தயக்கம் காட்டிய மம்தா, தற்போது மிகவும் முதிர்ச்சியடைந்து விட்டதாகவும், அதனால்தான் மேற்குவங்க முதல்வர் நாற்காலிக்கு பிரணாப் முகர்ஜி ஆசைப்பட்டால், அதற்கு வழிவிட அவர் தயாராகிவிட்டதாகவும் அரசியல் அலசலை கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது அந்த ஏடு. மேற்குவங்க முதல்வர் நாற்காலிக்கு பிரணாப் முகர்ஜி ஆசைப்படுவதாலோ, அதற்கு வழிவிட மம்தா தயாரானாலோ மட்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடாது என்பது எந்தவொரு பாமரனுக்கும் புரிந்த விஷயமே... அது மேற்குவங்க மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.. அது சரி, சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டிற்கு அதிகமான காலம் இருப்பினும், ஏன் இத் தகைய தொலை...நோ...க்கு.... பார்வை(?). அது தான் இத்தகைய ஊடகங்களின் திரை மறைவு அசைன்மெண்ட். அதாவது கருத்துரு வாக்கத்திற்கான முயற்சி. யாராவது ஒருவர் முதலில் துவங்குவதும், மற்றவர்கள் அதை பின்பற்றுவதும் என்கிற ஏற்பாடு.
மேலும் கட்டுரையில் ‘எத்தகைய பதவி யையும் நான் லட்சியமாக வைத்திருக்க வில்லை. எனது ஜோல்னா பையைத் தவிர எந்த சொத்தும் எனக்கு கிடையாது... மக்களுக் காக சேவை செய்யவே நான் அரசியலில் இருக்கிறேன்.. என்பதான மம்தாவின் வார்த் தைகளை போட்டு, அவருக்கு பின்னால் ஒரு ஒளிவட்டத்தையும் ஏற்படுத்த முயல்வதிலும் தவறவில்லை அந்த ஏடு.. மம்தாவின் எளி மையை புகழ்ந்து துதிபாடுவது அந்த ஏட்டின் உரிமை. ஆனால் அதே மண்ணில் மிக மிக எளிமையாக வாழ்ந்து, அதிகாரத்தின் உச் சத்தை தொட்ட பின்னும் மக்களோடு ஊடா டிய தோழர் ஜோதிபாசு மறைவிற்கு பிறகு வெளிவந்த அதே ஏட்டின் ஒரு கட்டுரையில், மிகவும் தரம் தாழ்ந்த முறையில் அவரை விமர்சித்திருந்ததற்கும், இப்போது மம்தாவிற் காக உருவாக்கப்படும் ஒளிவட்டத்திற்கும் பின்னணியில் ஓர் ஆழமான காரணம் உண்டு என்பது தெளிவாகிறது.
கட்டுரையாளரின் வற்றாத கற்பனைக்கு சான்றாக சொல்லப்பட்டிருக்கும் மற்றொரு விஷயம்.. ‘சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மம்தா தலைமையில் ஆட்சியமைந்தால் மார்க் சிஸ்ட் கட்சியினர் வரலாறு காணாத வன் முறைகளை கட்டவிழ்த்து விடுவர். எனவே அதை சமாளிக்கவும், அவர்களோடு சமரசம் பேசி சரிக்கட்டவும் பிரணாப்தான் சரியான தேர்வாக இருப்பார். எனவே அவரை தேர்ந் தெடுப்பது தான் சரி’ என்றொரு கண்ணோட் டத்தையும் கட்டுரை படம்பிடித்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுகளும், மம்தா கூட்டத்தாலும் படுகொலை செய்யப்படும் பட்டியலில் உள்ள வர்கள் அனைவருமே மார்க்சிஸ்ட்டுகள்தான் என்பதும், இத்தகைய கொடூரத்தாக்குதலை அரசியலாகவே எதிர்கொள்ள கட்சி தயாராக இருக்கிறது என வெளியிடப்பட்ட அறிவிப்புக ளும், ஏனோ இவர்களை இன்னும் சென்ற டையவில்லை. உங்களுக்கு ஒன்று சொல் லிக்கொள்ள ஆசைப்படுகிறோம்.
முதலாளித்துவம் தனது எதிர்ப்பை சூழ்ச்சிகளால் வெளிப்படுத்துகிறது. அதி தீவிரவாதம் படுகொலைகளால் வெளிப் படுத்துகிறது. நீங்களோ வார்த்தைகளால், எழுத்துக்களால் வெளிப்படுத்துகிறீர்கள்.. அவ்வளவே. மக்கள் இதையும் நிச்சயம் எதிர் கொள்வார்கள்
-ஆர்.பத்ரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக