வியாழன், 22 ஜனவரி, 2009

நிகரில்லா கொள்ளைக்கோ நிகர்நிலை பல்கலை.?

‘’நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றன.ஆனால் தரமான கல்வியை தருவதில் தோல்வியடைந் துள்ளன. இந்த நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்’’


- சென்னைப் பல்கலைக்கழகத்தின் 151-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய உத்தரப்பிரதேச ஆளுநர் டி.வி.ராஜேஷ்வர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 2004-ம் ஆண்டில் 15 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் இருந்தன; 2007 மற்றும் 2008 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 24 நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்று வியப்பு தெரிவித்துள்ள அவர், சில தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனி நபர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நடைமுறைகள் அந்த பட்டங்களின் மதிப்பைக் குறைப்பதாக இருக் கின்றன என்றும் கூறியுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னைப் பல் கலைக்கழகத்தின் விழாவில் அவர் குறிப்பிட்ட இந்த வார்த்தைகள் பொருள் பொதிந்தவை.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகமயக் கொள்கைகள் அமலாகத் துவங் கியது. அதன் பின்னணியில், மூலைக்கு மூலை நர்சரி பள்ளிகள் என்ற பெயரில் ஆரம்பித்த கல்வி வியாபாரம் தனது ஆக்டோபஸ் கரங்களை அகலப்பரப்பியது. தனியார் சுயநிதி ஐடிஐகள், பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகள் என விரிந்து இன்றைக்கு தனியார் சுயநிதி நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் கொள்ளை வியாபாரமாக மாறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்த கல்விக் கொள்ளை எவ்வித தடையுமின்றி நடக்க மாநில அரசும் துணை போகிறது. கடந்த ஆண்டு கோவை பி.எஸ்.ஜி கல்லூரியையும், மதுரை தியாகராஜர் கல்லூரியையும் நிகர்நிலைப் பல்கலைக் கழக மாக்க தமிழக அரசு முயற்சித்தது. ஆனால், இம் முயற்சியை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற் றோர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

அந்த எதிர்ப்பையும் மீறி திமுக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர், யாருக்கும் கட்டுப் படாத தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங் களாக அந்த கல்லூரிகளை மாற்ற தீவிரமாக முயற்சித்தார். மாணவர்கள் மீது அடக்கு முறை ஏவி விடப்பட்டது. கருத்துக்கேட்பு என்ற பெயரில் கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டது.

படிப்படியாக தமிழக உயர் கல்வித் துறையை தனியார் பல்கலைக்கழகங்களிடம் ஒப்படைத்து விட்டு அரசு தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதற்கான ஏற்பாடே இத்தகைய முயற்சி.

தேசிய அளவிலும், கல்வி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இத்தகைய நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களை கட்டுப்படுத்த ஒருங் கிணைந்த சட்டம் ஏதுமில்லை. அப்படியொரு சட்டத்தை இயற்ற வேண்டுமென இந்திய மாண வர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்பா டின்றி அனுமதித்ததன் விளைவாக, காசுள்ளவர் களுக்கே கல்வி என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி, நிலை மையை மேலும் மோசமாக்கும்; ஏழைகளின் அறிவை புறந்தள்ளும்.

இந்த எச்சரிக்கையையே டி.வி.ராஜேஷ்வரின் பேச்சு உணர்த்துகிறது.

கருத்துகள் இல்லை: