வெள்ளி, 20 மார்ச், 2009

பணமூட்டைகளின் ஆட்சியா? மக்களின் குரலா?


வே. மீனாட்சிசுந்தரம்

தோழர்களே ஒழுங்கான வருகையுடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட்டனர் -இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஆன்லைன் 27-2-09). முடிவடைந்த 14வது நாடாளு மன்ற செயல்பாடு பற்றி இப்படி ஒரு தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டது. 14வது நாடாளுமன்றத்தின் நல்லதையும் கெட்டதையும் பட்டியல் போட்ட அச் செய்திக் குறிப்பு வாசிப்போரை நிச்சயம் சிந்திக்கதூண்டும். அமைய இருக்கிற நாடாளுமன்றம் பெரும்பான்மை மக்க ளின் கருத்துக்களை மதித்து நடக்க செய்ய வேண்டியதை சுற்றி அந்த சிந் தனை ஓடும்.

60 ஆண்டுகளாக கம்யூனிஸ்டுகள் பின்னர் மார்க்சிஸ்ட்டுகள் கீறல் விழுந்த பிளேட்டைப் போல திரும்ப திரும்ப சொல்லிவந்ததாக மீடியாக்கள் வசை பாடிய திட்டங்களில் ஒன்றாகவும், எல்லா அரசியல் தலைவர்களின் தேர்தல் வாக் குறுதியாக மட்டுமே இருந்துவந்த வேலை உறுதிச்சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகிய இரண்டு சட்டங் களும் நிறைவேற்றப்பட்டன. இந்த சட் டங்கள் நிறைவேறுகிற பொழுது மார்க் சிஸ்ட் கட்சியின் திருத்தங்களால் அவைகள் ஓரளவு செயல்படும் சட்டங்க ளாகின என்பது தனி வரலாறு. அதனை செல்வாக்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இடதுசாரிகளின் உயர்வு
நாடாளுமன்ற அமர்வில், வருகையில் முதலிடம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு. விவா தத்தில் பங்குபெற்றதில் முதலிடம் மார்க் சிஸ்ட் கட்சிக்கு. மசோதாக்கள் மீது திருத்தங்கள் கொடுத்து விவாதிப்பதில் முதலிடம் மார்க்சிஸ்ட்டு கட்சிக்கு. பொது வாக விவாதங்களில் பங்குபெற்றதில் முதலிடம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு. எல்லா உறுப்பினர்களும் விவாதத்திலும் தலை யிடுவதிலும் பங்களித்த ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கட்சி.

பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் அலட்சியம்
வருகையில் பா.ஜ.க. கடைசி இடம். மிகக் குறைவாக விவாதங்களில் பங்கு பெற்றதில் முதலிடம் காங்கிரஸ். இரண்டாவது இடம் பா.ஜ.க. முக்கிய எதிர்க்கட்சி யான பாஜக-வில் 13 சத உறுப்பினர்கள் மன்றத்திற்குள் பேசுவதற்காக வாயைத் திறக்கவே இல்லை. இந்த இரு கட்சிக ளும் வாக்களித்த மக்களை மதிக்காத கட்சிகள் என்பதை நாடாளுமன்ற ஆவ ணங்கள் பேசுகின்றன. இந்த இரு கட்சி களும் செல்வந்தர்களின் கைப்பாவை மட்டுமல்ல, அரசியல் செல்வாக்கை பணமூட்டைகளாக்கும் ரஸவாத கட்சி கள். சொத்துக் குவிப்பில் இந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களோடு வேறு வட்டார கட்சிகள் போட்டி போட முடி யாது. கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர் கள், செய்கிற ஊழலை பங்கு போடுவார் களே தவிர “காட்டிக்” கொடுக்கமாட் டார்கள். ஆனால் பிளாக் மெயில் செய்ய பயன்படுத்துவார்கள். சிபுசோரன், டி.ஆர். பாலு, ராசா ஆகியோர் மீது ஊழல் புகார் எழுந்தன. ராசா மீது முன்னாள் தி.மு.க அமைச்சரே குற்றம் சாட்டினார். பிரதமர் அசராமல் அவர்களை காப்பாற்றினார்

அவப்பெயர்
13வது நாடாளுமன்றத் தொடரை விட குறைவான நாட்களே 14வது நாடாளுமன் றம் கூடியது.மொத்தம் சபை கூடிய நேரம் 1738 மணி நேரம். இதில் 423 மணி நேரம் கூச்சல் குழப்பத்தில் வீணாகியது (24 சதம்). பிரதான எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க உறுப்பினர்கள் சபைக்கு வருவது அரிது. வந்தால் கூச்சல் போட்டு சபையை கெடுக்காமல் போவது மிக அரிது. இடதுசாரி அல்லாத கட்சிகளை சார்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய குற்றத் திற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடைசி கட்டத்தில் யு.பி.ஏ அரசை காப்பாற்ற கட்சி தாவியதால் பதவி இழந்தனர். சில கட்சிகள் விலைபோனதாகவும், ஆளும் காங்கிரஸ் விலைகொடுத்து வாங்க முயற்சித்ததாகவும், பணமூட்டையோடு பா.ஜ.க அரங்கேற்றிய குற்றச்சாட்டு கூத்து நாடாளுமன்றத்தை குலுக்கியது. (இது ஒன்றும் புதிதல்ல! மைனாரிட்டி அரசை பெரும்பான்மையாக காட்டிய பிரதமர் நரசிம்மராவின் காங்கிரசும் டெகல்கா படம்பிடித்துக் காட்டிய பா.ஜ.கவும் பண மூட்டைகள் பெற்றெடுத்த கட்சிகள் என்பதை விவரம் தெரிந்தோர் அறிவர். சமீபத்தில் தி.மு.கவையும் பணமூட்டை தத்தெடுத்துக் கொண்டதால் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது).

ராமர் சேனாவை ஆதரிக்கும் பா.ஜ.க வின் ஒரு உறுப்பினர் வெளிநாடு செல் லும் போதெல்லாம் தனது மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறு ஒரு பெண்ணை அழைத்துச் செல்லுவது வாடிக்கை. இறு தியில் மாட்டிக் கொண்டதால் பதவியை இழந்தார்.

சிபுசோரன் என்ற அமைச்சர் 2004-ஆம் ஆண்டில் கிரிமினல் குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப்படுவதி லிருந்து தப்பி தலைமறைவாகி சாதனை படைத் தார். இது தவிர கொலை, கடத்தல், கஞ்சா கடத்தல் போன்ற குற்றங்களை செய்த நபர்கள், எவ்வளவு பேர் தயவில் இவ்விரு கட்சிகளும் இருக்கின்றன என்ற விப ரத்தை தொகுக்க இடம் போதாது. பா.ம.க. கட்சியின் மொத்த உறுப்பினர் களில் சரிபாதி அமைச்சர்களாக ஆகி பிளாக் மெயில் அரசியல் கலாச்சாரத்திற்கு கவர்ச்சி ஊட்டினர். சபையை மதிக்காத அமைச் சர் என்று நிறைவு நாளன்று சபாநாயகர் குறிப்பிடும் அளவிற்கு பா.ம.க அன்புமணி யின் தயாரிப்பு இல்லாத பங்கேற்பு இருந் தன. நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட நபரான சிவராஜ்பாட் டீல் மிக முக்கிய உள் துறை அமைச்சராக, மும்பை குண்டு வெடிப்பு வரை பதவியில் இருந்தார். 252 மசோதாக்கள் தாக்கல் செய்ததில் சில மசோதாக்களே விவாதத் திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேறின. பல மசோதாக்கள் விவாதிக்கப்படாமலே நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டன. (தமிழகச் சட்டமன்ற மும் விவாதிக்க அனுமதிப்பதில்லை)

பழைய பல்லவிகள்

“நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்பது சங்க கால வரிகள். காங்கிரஸ் பா.ஜ.க இரு கட்சிகளும் நல்லது செய்ததுமில்லை. நல்லது செய்ய முன்காலத்திய மாற்று அரசு களை விட்டதுமில்லை. விடுதலை பெற்ற திலிருந்து சிலவற்றை தேன்தடவிய வார்த்தைகளாகவே வைக்கும் இவர்களின் சாமர்த்தியம், 14வது நாடாளுமன்றத்தை யும் விடவில்லை. பெண்கள் இடஒதுக் கீட்டு மசோதாவை கடத்தியது. கல்வி பெறும் உரிமையை உத்தரவாதப்படுத்தா மல் தள்ளிவிட்டது.கண்ணீர் விட்டுக் கொண்டே நிதி ஒதுக்க தவறுவது. ஜனநா யக உரிமைகளை பறிக்கும் சட்ட ஷரத் துக்கள் மாநில நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரத்தை கைப்பற்றுதல் (நிலம் கையகப்படுத்துதல், கல்வி போன்ற மாநில உரிமைகள்) நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்ட வகை செய்யும் ஷரத் துக்கள் ஆகியவைகளை மாநில சுயாட் சியை மூச்சாக கொண்ட கட்சிகளை கொண்ட அமைச்சரவையின் முடிவாகி நாடாளுமன்றம் விவாதிக்காமலே நிறை வேற்றிய சாமர்த்தியம்.

அரசியல் காரணங்களுக்காக சி.பி.ஐ விசாரணையை உயிர்ப்பித்தல் (கேரள இடது ஜனநாயக முன்னணி முன்னாள் அமைச்சர் மீது போன நூற்றாண்டில் தொடுத்தது ஒன்றுமில்லை என்று அவர் களே மூடியது) அல்லது சி.பி.ஐ விசார ணையை சாகடித்தல் (முலாயம் சிங் பாதுகாப்புத்துறை அமைச் சராக இருந்த பொழுது செய்த ஊழல்) அதன் விளைவாக உச்சநீதிமன்றத்திடம் குட்டுவாங்குதல். நாடாளுமன்ற பெரும்பான்மையை பணமூட்டை கொண்டு ஆக்கிட முடியும் என்ற திமிரில் மக்கள் அங்கீகரிக்காததை செய்தல். வாக்குறுதிகளை மீறுதல். கூட்டணிக் கட்சிகளோடு போட்ட ஒப் பந்தங்களை மீறுதல் போன்ற ஆண் டாண்டு கால பல்லவிகள் இதிலும் தொடர்ந்தன. மிகவும் ஆபத்தான இந் திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் நமது சுதந்திரத்தையே பறிகொடுக்கும் நிலை யை உருவாக்கிவிட்டது.

பணமூட்டைகள்தான் ஆளமுடியும்; மக்கள் குரல் எடுபடாது என்ற நிலையை மாற்ற முடியாதா என்று கேட்டால், மாற்ற முடியும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது .

காங்கிரஸ் அணி, பா.ஜ.க அணி இரண்டையும் மக்கள் முதலில் ஒதுக்க வேண் டும். அவர்கள் பாஷையில் சொல்வ தென்றால் மூன்றாவது அணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். குறைந்த பட்ச திட்ட அடிப்படையில் அக்கட்சிகளின் அணி ஆட்சியில் அமர்ந்தவுடன் நாடாளுமன்ற அமைப்பை சீரழிப்பதை தடுக்கவும் அரசாங்க அமைப்பு மக்களை அடக்கும் கருவியாக இருப்பதை மாற்றிடவும், மக் களுக்கு சேவைசெய்யும் கருவியாக ஆக் கிடவும் தேர்தல்முறையில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை வேண்டும். தொகுதியில் 51 சதவீதம் வாக்கெடுத்த வரே வெற்றி பெறமுடியும் என்ற நிலை வேண்டும். இல்லையெனில் பெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை நிர்ண யிக்க வேண்டும். இப்பொழுதைய முறை வாக்களித்த மக்களை கேலி செய்வது போல் உள்ளது. 2004 தேர்தலில் 85 லட் சம் வாக்குகளை பெற்ற அதிமுகவிற்கு ஒரு பிரதிநிதியும் கிடையாது. 71 லட்ச வாக்குகள் பெற்ற தி.மு.கவிற்கு 16 நாடாளு மன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர். 1989ல் 70 லட்சம் வாக்குகள் பெற்றும் திமுகவிற்கு ஒரு பிரதிநிதி கூட இல்லை. எனவே விகி தாச்சார அடிப்படையில் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதை ஜன நாயக உணர்வு கொண்டோர் எதிர்க்க மாட்டார்கள். இன்று சுமார் 80 நாடுகளில் வெவ்வேறு முறைகளில் விகிதாச்சார அடிப்படை உள்ளது.

அர்ஜென்டினா, பிரேசில், பொலிவியா, வெனிசுலா போன்ற நாடுகள் (முன்னாள் அமெரிக்க கைப்பாவைகளாக இருந்த ராணுவ சர்வாதிகாரத்தில் அவதிப்பட்ட மக்கள்) மீண்டும் எந்த வடிவிலும் அடக் குமுறை ஆட்சி தலையெடுக்கவிடாமல் இருக்க விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்வு என்பதை நடைமுறைப் படுத்திவிட்டனர். பல ஐரோப்பிய நாடுகள் ஜப்பான் நாட்டிலும் இந்த முறை உள்ளது. சொந்த அனுபவமும் நமது நாடாளுமன்றம் பணமூட்டைகளின் கையில் சிக்காமல் இருக்கவும், சிக்கினால் மீட்கவும் இது தான் வழி என்பதாலும் இன்றைய சூழ லில் வட்டார கட்சிகளின் துணையோடு நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாம் என்பதாலும் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையில் இதனை முன் மொழிகிறது. உண்மையில் மக்கள் ஜனநாயகம் மலர வேண்டுமானால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை வாபஸ் பெறும் உரிமை மக் களுக்கு இருக்க வேண்டும். இக்கருத்து மக்களை கவ்விப் பிடிக்காமல் நடை முறைக்கு வராது. சோவியத் புரட்சியைப் பற்றி ஆயிரம் குறை காண்பவர்கள் கூட இந்த உரிமையை முதலில் நடைமுறைக்கு கொண்டு வந்தது அந்த அமைப்பு என் பதையும் அரசியல் விழிப்புணர்வு பெற்ற பாட்டாளி வர்க்கமே இதனை நேர்மை யாக செயல்படுத்த முடியும் என்பதையும் மறுக்க இயலாது.

கருத்துகள் இல்லை: