செவ்வாய், 20 ஏப்ரல், 2010

பினராயி விஜயன் குற்றமற்றவர் : சிபிஐ லாவ்லின் வழக்கு அரசியல் தூண்டுதல் என்பது நிரூபணமாகிவிட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பினராயி விஜயனை, லாவ் லின் வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) குற்றவாளியாகச் சேர்த்தது அரசியல் தூண்டுத லாகும் என்று கட்சி கூறியது.

கட்சியின் இந்தக் கருத்து சரிதான் என்பதையே சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ புதிதாக தாக்கல் செய்துள்ள அறிக்கை தெளிவாக்குகிறது என்று கட்சியில் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

மாநிலச் செயலாளர் மீதே வழக்குத் தொடரப்பட்டிருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதோடு தகர்ந்து போகும் என்று கனவு கண்டவர்களுக்கு சிபிஐயின் புதிய வாக்குமூலத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கடந்த இரண்டு ஆண் டுகளாகலாவ்லின் பிரச்சனையில் பினராயி விஜயனையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் கட்சியின் விரோதிகள் வேட்டை யாடினர்.

கட்சியின், இடதுசாரி இயக்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தகர்ப்பதே இவர்க ளின் லட்சியமாக இருந்தது. அவர் களின் கனவுதான் இப்போது தகர்ந்துவிட்டது என்றும் யெச் சூரி கூறினார்.

லாவ்லின் வழக்கு இனி நிற்காது : கிருஷ்ணய்யர்

மத்திய புலனாய்வுத் துறையின் புதிய பிரமாண வாக்குமூலத்தைத் தொடர்ந்து லாவ்லின் வழக்கு இனி நீடிக்காது என்று முன்னாள் உச்சநீதின்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறினார். இனியும் வழக்கு நீடித்தால் நீதியின் பேரில் அநீதியே அமலாகும் என்றும் கிருஷ்ணய்யர் கூறினார்.

வழக்கில் ஒன்றும் இல்லை என்று சிபிஐ-யே ஒப்புக்கொண்டுள்ளது. இனி அதை முடித்துக் கொள்ளலாம். சட்டம், மனி தர்களை துன்புறுத்துவதற்காக அல்ல; நீதி கிடைக்கச் செய்வதற்காகத்தான் என்றும் கிருஷ்ணய்யர் கூறினார்.

லாவ்லின் வழக்கில் பினராயி விஜயன் ஊழல் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்திருப்பது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை: