வியாழன், 21 மே, 2009

அறிவியல் மனப்பான்மை என்பது என்ன?

பேராசிரியர் கே.ராஜு

அறிவியல் கதிரிலும் தீக்கதிரின் பிற பக்கங்களிலும் பல அறிவியல் தக வல்களைப் படித்து வருகிறீர்கள். வேறு பல நூல்கள் மூலமாகவும் இணையதளத் தின் மூலமாகவும் உங்களுக்குப் பல அறிவியல் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அறிவியல் தகவல் வேறு, அறி வியல் மனப்பான்மை என்பது முற்றிலும் வேறு. இந்த வித் தியாசத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பேராசிரியர் ஜயந்த் விஷ்ணு நர்லிகர் புனேயில் உள்ள வானவியல் மற்றும் இயற்பியல் பல்கலைக் கழகங்களுக்கான மையத்தின் முன்னாள் இயக்குநர். மக் களிடையே அறிவியலைப் பரப்பும் பணி யைச் சிறப்பாகச் செய்தமைக்காக கலிங்கா விருது பெற்றவர். அகில இந் திய அறிவியல் இயக்கம் நடத்தும் `ட்ரீம் 2047’ மாத இதழில் அறிவியலைப் பற்றி யும் படித்தவர்களே கூட மூடநம்பிக்கைக ளுக்கு ஆட்படுவதைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். அறிவியல் மனப்பான்மை யைச் சரியானபடி புரிந்து கொள்ள அக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக் கிறது.

அவர் சொல்கிறார் :

அறிவியல் வளர்ச்சியில் மூன்று படிகள் இருக்கின்றன.

1) பரிசோதனையில் சில புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தல்

2) கண்டுபிடித்தவைகளுக்கான அறிவியல் விளக்கம்

3) அவற்றின் அடிப்படையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலுதல்

ஆகிய மூன்றும்தான் அவை.

அறிவியல் உலகு நிர்ணயிக்கும் தகுதிகள்

ஒருவர் சோதனைச்சாலையில் சில பரிசோதனைகள் செய்தோ அல்லது இயற்கை நிகழ்வுகளைக் கவனித்தோ அவற்றுக்கான அறிவியல்பூர்வமான விளக்கத்தைத் தருகிறார் என்று வைத் துக் கொள்வோம். அவரது முயற்சி வெற்றி பெறுமானால் வேறு சில புதிய எதிர்காலக் கண்டுபிடிப்புகள் பற்றிய தன் ஊகங்களை அவர் வெளியிடவும் செய்யலாம். ஆனால் அவை பரிசோத னைகள் மூலமாக அவர் காலத்தில் இல் லாவிடினும் எதிர்காலத்திலாவது நிரூபிக் கப்பட வேண்டும். அவர் தந்திருக்கும் விளக்கங்கள் தொடர்ந்து ஏற்கக் கூடிய வையாக இருக்குமானால் மட்டுமே அவர் உருவாக்கிய கொள்கை அறிவியல் உலகின் நம்பிக்கையைப் பெறும். அதே சமயம், அறிவியல் உலகம் எவருக்கும் - அவர் எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் சரி - அவர் வகுத்த கொள் கை காலாகாலத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும் என்ற சான்றிதழைக் கொடுத்து விடாது ! எதிர்காலத்தில் வேறொரு பரி சோதனை அவரது விளக்கத்துடன் பொருந்தாமல் போனால் ஒன்று அது கை விடப்படும் அல்லது திருத்தியமைக்கப் படும்.

நியூட்டனும் ஐன்ஸ்டீனும்

நியூட்டன் கண்டுபிடித்த இரு பொருட்களுக்கிடையான ஈர்ப்பு விசை பற்றிய விதிகள் சில நூற்றாண்டு களுக்கு வெற்றிகரமாகத் தொடர்ந்தன. சென்ற நூற்றாண்டில் சூரியக் குடும்பத் தில் சில புதிய பரிசோதனைகள் செய்யப் பட்டபோது அவற்றுக்கு நியூட்டன் விதிகளால் விளக்கம் தர முடியவில்லை. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் அவற் றுக்கு திருப்திகரமான விளக்கத்தைத் தந்தவுடன் அது ஏற்றுக் கொள்ளப்பட் டது. அதற்காக நியூட்டனை யாரும் குறை கூறுவதில்லை. அவருடைய காலத்தில் அறிவியல் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைய அவரது விதிகள் உதவி செய்தன என்பது உண் மை. அதே சமயம் பிற்காலத்தில் நியூட் டன் விதிகளைத் திருத்தியமைக்க அறி வியல் உலகம் தயங்கவில்லை. அறிவியல் முன்னேறுவது இப்படித்தான்.

இன்று யாராவது ஒருவர் ஐன்ஸ்டீன் தத்துவத்தைவிட மேலான தத்துவத் தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறி னால் அறிவியல் உலகம் அதை உடனே ஏற்றுக் கொண்டுவிடாது. அவர் தரு கின்ற விளக்கத்திற்குத் தகுந்த ஆதா ரங்கள் இருக்க வேண்டும். பரிசோத னைகள் மூலமாகவோ கணித சூத்திரங் கள் மூலமாகவோ அவை உறுதி செய் யப்பட வேண்டும்.

`ராமர் பெட்ரோல்என்ன ஆனது?

அறிவியல் மனப்பான்மை அறிவியல் வளர்ச்சியின் இந்த அம்சத்திலிருந்து உருவாகிறது. புதிய தகவல்கள் மற்றும் பிரகடனங்கள் நிரூபிக்கப்பட்ட உண்மை யுடன் உரசிப் பார்க்கும்போது சரியாகப் பொருந்த வேண்டும். இந்தத் தேர்வில் அவை தோல்வியுறுமானால் அவை தயவு தாட்சண்யமின்றி நிராகரிக்கப்படும். (சில ஆண்டுகளுக்கு முன் கிராமத்து இளைஞர் ஒருவர் உருவாக்கியதாகச் சொல்லப்பட்ட `ராமர் பெட்ரோல்’ இப்ப டித்தான் நிராகரிக்கப்பட்டது).

கருத்துகள் இல்லை: