செவ்வாய், 26 அக்டோபர், 2010

தொழிலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வன்முறை பேச்சு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனே விடுவிக்க வலியுறுத்தி முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்


தமிழக அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனின் வன்முறைப் பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத லமைச்சர் கருணாநிதியை மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலி யுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக முதலமைச் சருக்கு ஜி.ராமகிருஷ்ணன் திங் களன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தொழிலாளர் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு தினமலர் நாளிதழில் (25.10.2010) வெளிவந்துள்ளது.

“நாங்கள் நினைத்தால் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டம் போட முடியுமா? ரோட்டில் நடக்க முடியுமா? அடக்கி வாசியுங்கள். ஜாக்கிரதை.” என்று கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார். அமைச் சரின் இந்த அச்சுறுத்தல் பேச்சு கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, நடவடிக்கைக்கும் உரியதாகும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக வன்முறையை தூண்டும் செயலாகும் என்றும் கருதுகிறோம்.

அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் பகிரங்கமாக வன்முறையைத் தூண்டி பேசுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூர் வட்டாரத்தில் ஃபாக்ஸ்கான், நோக்கியா, பி.ஒய்.டி. தொழிற் சாலை உள்ளிட்டு பல பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரம் தொழிலாளர்கள் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, தொழிற்சங்க உரிமை போன்ற கோரிக்கைகளுக்காக போராடி வருகிற சூழலில், அமைச்சரின் இந்தப் பேச்சு தொழிலாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சியினரை தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கு- தொழில் அமைதியை சீர்குலைக் கும் செயலாகாதா? தொழி லாளர்களின் போராட்டத்திற்கு தலைமை ஏற்று செயல்படும் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ. சவுந்தரராசன், சிஐடியு காஞ்சி புரம் மாவட்டச் செயலாளர் இ. முத்துக்குமார் மற்றும் தொழி லாளர் தலைவர்களின் உயிருக்கு ஆபத் தான சூழலை ஏற்படுத்துமல் லவா? இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அமைச் சர் பேசினாரா என்பதை தமிழக முதல்வர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

கூட்டம் நடத்தும் உரிமை இந்திய ஜனநாயகத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமை. அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிற உரிமை. இது தங்களுக்கும் தெரியும். அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவேன் என்று உறுதிமொழியேற்று செயல்படும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் எப்படி அரசியல் அமைப்புச் சட் டத்தையும், ஏற்றுக்கொண்ட உறுதி மொழியையும் துச்சமென தூக்கி யெறிந்து வன்முறையை தூண்டி பேசி உள்ளார். இதை எப்படி அனுமதிக்க முடியும். தமிழகஅர சும், தமிழக ஆளுநரும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

எனவே, சட்ட விதிகளுக்கும், ஜனநாயக நெறிகளுக்கும் புறம்பாக வன்முறையைத் தூண்டி பேசி, கம்யூனிஸ்ட்டுகளுக்கு அச் சுறுத்தல் விடுத்துள்ள தொழி லாளர் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டு மென்றும், அமைச்சர் பொறுப்பி லிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் போராடும் தொழிலாளர்களுக்கு உரிய பாது காப்பு அளித்திட வேண்டும் என் றும் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்துகிறோம்

தீக்கதிர்

கருத்துகள் இல்லை: