வியாழன், 2 செப்டம்பர், 2010

அரசுக்கு ஐஎன்டியுசி தலைவர் கேள்விக்கணை

ஐஎன்டியுசி தலைவர் ஜி.சஞ்சீவ ரெட்டிவிறு விறுப்பான கேள்வி களுக்கு, சுடச்சுட பதில் அளிக் கிறார்-

“எங்கள் கடமையை நிறை வேற்றுகிறோம்... அவ்வளவு தான்...”

“முறைசாராத் தொழிலாளர் களுக்கு உதவ, அரசு, செல்வந்தர் கள் மீது தனி வரி விதிக்க வேண் டும்” என்று சுபத்ரா சாட்டர்ஜியிடம் கூறினார் சஞ்சீவ ரெட்டி.

கேள்வி: சுதந்திரத்திற்குப் பின் வர லாற்றில் முதன் முறையாக ஐஎன்டி யுசி ஒரு அகில இந்திய வேலை நிறுத் தத்தில் பங்கேற்கிறது. நீங்கள் இடது சாரிகளுடன் கை கோர்த்துள்ளீர்கள். இதற்கு என்ன காரணம்?

பதில்: தொழில் அதிபர்கள் தற்போது மிகுந்த வலுவடைந்து வருகிறார்கள். இது தொழிலாளர்களுக்கு மேலும் பல பிரச்ச னைகளை ஏற்படுத்தி வருகிறது. அர சாங்கமும், தொழில் அதிபர்களும் உழைக் கும் வர்க்கத்தின் கோரிக்கைகளையும், முறையீடுகளையும் காது கொடுத்து கவனிப்பதில்லை. இதுவே நாங்கள் ஒன்றுபட கட்டாயமானது.

கேள்வி: ஆனால் இந்த முடிவு உங்கள் ஐ.மு.கூட்டணி அரசுக்கு எதிரான முடிவில்லையா? ஏன் இந்த நிழல் யுத்தம்?

பதில்: ஒருவருடைய சொந்த அரசாங் கத்தையே எதிர்ப்பது என்ற கேள்வி இங்கே எழவில்லை. இந்த கூட்டு இயக் கத்திற்கு அரசியல் நோக்கம் கிடையாது. எங்களுடைய இயக்கங்களில் இருந்து அரசியலை விலக்கி வைத்துள்ளோம். குறிப்பிட்ட பொருளாதார கோரிக்கை களுக்காக திட்டமிட்டு நடத்தப்படும் இயக்கம் இது. அண்மையில் இரண்டு முறை நாங்கள் பிரதமரை சந்தித்து இந்த கோரிக்கைகளை தெரிவித்தோம். அர சுடன் விவாதம் தொடர்கிறது.

பிரச்சனை அடிப்படையிலான வேலை நிறுத்தம் இது. தொழிற்சங்க இயக்கம் மீதும், உழைக்கும் வர்க்கத்தின் கோரிக்கைகள் மீதும் அரசின் அணுகு முறையை எதிர்த்துத் தான் இந்த போராட் டமே தவிர, அரசில் இருந்து செயல் படுபவர்களை எதிர்த்து அல்ல.... காங் கிரஸ் கட்சியின் ஒரு அங்கம் என்ற முறை யில் பிற விஷயங்களில், அரசுடன் நாங் கள் ஒத்துழைத்து தான் வருகிறோம்.

ஆனால் பொருளாதார கொள்கைக ளில் கருத்து மோதல் உள்ளது. அரசின் பொருளாதார கொள்கைகள் உழைக்கும் தொழிலாளர்களின் குரலை நசுக்குவதா கவே உள்ளன. இதை எதிர்த்து ஓரளவே நாங்கள் செயல்பட முடியும். இது ஒரு பொருளாதார போராட்டமே அன்றி அரசி யல் இயக்கம் அல்ல.

கேள்வி: முக்கிய பிரச்சனையாக விலைவாசி உயர்வு உள்ளது. இடது சாரிக்கட்சித் தலைவர்கள் விலைவா சியை கட்டுப்படுத்துவதில் உங்கள் அரசாங்கம் முழுவதும் தோல்விய டைந்து விட்டதாக குற்றம்சாட்டுகின் றனர். இக்கருத்துடன் தாங்கள் ஒத்துப் போகிறீர்களா?

பதில்: ஏழைகளுக்கு நிவாரணம் தரும் எந்தக் கொள்கையும் அரசிடம் இல்லை. விலை உயர்வு சர்வதேச பிரச்சனை என்கிறது அரசு. ஆனால் இதற்காக ஏதும் செய்ய வேண்டாமா? கடைசியாக நாங்கள் பிரதமரை சந்தித்த போது அவர் எங்க ளிடம் “இதற்கு என்ன தீர்வு?” என்று வினவினார். அதற்கு நான், ஏழை மக்க ளுக்கும், உழைப்பாளிகளுக்கும் நிவா ரணம் தரும் வகையில் நியாய விலைக் கடைகளை திறக்க வேண்டும் என்று கூறினேன்.

கேள்வி: “முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்” என்பது வேலை நிறுத்தத்திற்கான மற்றொரு கோரிக்கையாக தொழிற்சங்கங்க ளால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பட்ஜெட்டில் இதற் காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளதே... இதில் உங்களுக்கு திருப்தி இல்லையா?

பதில்: இது மிக மிகச்சிறு தொகை. இதை வைத்துக்கொண்டு நிதி அமைச்சர் எதுவும் செய்ய முடியாது. 35 கோடி யிலிருந்து 40 கோடி பேர் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரம் கோடி ரூபாயை இவர்களுக்கு பிரித்தால் தலைக்கு எவ்வளவு கிடைக்கும்? இது சமூக பாதுகாப்பு திட்டம் அல்ல! முறை சாரா தொழிலாளர்களுக்கு உதவ அரசு, செல்வந்தர்கள் மீது வரி விதிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை கூறுகிறோம்.

அரசு, முறைசாரா தொழிலாளர் களுக் காக பெருமளவு நிதி திரட்ட வேண்டும். இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய தொழி லாளர்களின் நிலையை கவனித்தீர்களா? இவர்களால் விலை கூடுதலான மருந்து களை வாங்க முடியுமா? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியுமா? இவர்கள் பணி இழந்தால் பென்சன் கிடைக்கிறதா... அல்லது நஷ்ட ஈடு தரப்படுகிறதா? சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்களால் இந்த நாட்டு உழைப் பாளி மக்களுக்கு உணவு தர முடிய வில்லை. குடிநீர் தர முடியவில்லை என்றால் அரசாங்கத்தில் இருந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்?

அரசு 8 சதவீதம், 9 சதவீதம் பொரு ளாதார வளர்ச்சி என கூக்குரல் போடு கிறது. இது உண்மையானால் இதில் கொஞ்ச பலனாவது ஏழைத் தொழிலா ளிக்கு கிடைத்திருக்க வேண்டாமா? இந்த நாட்டின் சொத்து முழுவதும் ஒரு சில தொழில் அதிபர்களின் பாக்கெட்டு களில் முடங்கிவிட்டால், இந்த நாட்டை எப்படி நிர்வகிப்பது? ... கொள்கைகளுக்கு இடையிலான போராட்டம் இது. எங்கள் கட்சிக் குள்ளேயே இவை பற்றி நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதிகாரத் தில் இருப்பவர்கள் ஒரு திசையில் யோசிக்கிறார்கள்; என்னைப் போன்ற பலர் வேறு விதமாக யோசிக்கிறோம். தற்போது இந்த போராட்டம் வெளிப்படையாக வந்துவிட்டது. இது உயிர் வாழ்வதற்கான - இருத்தலுக்கான போராட்டம். தேசத் தின் செல்வம் முறையாக பங்கிடப்பட வேண்டும் என்பதற்கான போராட்டம் இது.

தமிழில் : ஆர். இயேசுதாஸ், தஞ்சாவூர்

(பிஸினஸ் ஸ்டான்டர்டு பத்திரிகையில் வெளிவந்த பேட்டியின் தமிழாக்கம்

கருத்துகள் இல்லை: