செவ்வாய், 2 நவம்பர், 2010

பிரேசில் ஜனாதிபதித் தேர்தல் டில்மா ரூசெப் அபார வெற்றி




பிரேசிலின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க தொழிலாளர் கட்சி வேட்பாளரான டில்மா ரூசெப்பை அந்நாட்டு மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

பிரேசிலில் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல் சுற்று அக்டோபர் 3 அன்று நடைபெற்றது. அதில் போட்டியிட்ட வேட்பாளர்களில் யாரும் 50 விழுக்காடு வாக்குகளைப் பெறாத தால் முதலிரண்டு இடங்களைப் பெற்றவர்கள் இரண்டா வது சுற்றில் மீண்டும் போட்டியிட்டனர். இந்த சுற்றிற்கான வாக்குப்பதிவு அக்டோபர்

31 அன்று நடைபெற்றது. இந்த சுற்றில் தொழிலாளர் கட்சியின் வேட்பாளரான டில்மா ரூசெப் 56 விழுக்காடு வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட வலது சாரி கூட்டணியின் வேட்பாள ரான ஜோஸ் செர்ரா 44 விழுக் காடு வாக்குகளும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் ஜனவரி 1, 2011 அன்று பொறுப் பேற்றுக் கொள்ளவிருக்கும் டில்மா, பிரேசிலின் முதல் பெண் ஜனாதிபதி என்கிற பெருமை பெறுகிறார். வெற்றிச் செய்தி கிடைத்தவுடன், 2 கோடி பிரேசிலியர்கள் வறு மைக் கோட்டுக்குக் கீழ் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் களை அதிலிருந்து வெளிக் கொண்டு வருவதே எனது முதல் மற்றும் பிரதானப் பணி யாக இருக்கும். பிரேசில் மக் கள் பட்டினியால் துயரப்படும் போது நாம் ஓய்வெடுத்துக் கொண் டிருக்க முடியாது

என்று அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே லூலா தலைமையிலான அரசு கடைப்பிடித்து வரும் இடது சாரிக் கொள்கைகள் இவரது தலைமையிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர் கட்சியில் சேரு வதற்கு முன்பாக, 1960களின் இறுதிப்பகுதியில் தலை மறைவு வாழ்க்கையை ரூசெப் மேற்கொண்டிருந்தார். ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட் டத்தில் அவர் ஆயுதமேந்திப் போராடியவர். 2003 ஆம் ஆண் டில் லூலா தலைமையிலான ஆட்சியில் எரிசக்தித்துறை அமைச்சராகப் பொறுப்பேற் றார். இவரது தந்தை பல்கேரி யாவைச் சேர்ந்தவர். அங்கு 1930களில் கம்யூனிஸ்ட் கட்சி யில் தீவிரமாகப் பணியாற்றிய வர் அவர். ரூசெப்பின் வெற்றி குறித்து பல்கேரியாவின் ஊட கங்கள் மகிழ்ச்சியோடு செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் ஏழாவது பெரிய பொருளாதார நாட்டிற்கு பல்கேரியாவைச் சேர்ந்தவர் பொறுப்பேற்கிறார் என்பது மகிழ்ச்சியளிப்பதாக அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தோல்வியுற்ற வலதுசாரிக் கூட்டணியின் வேட்பாளரான ஜோஸ் செர்ரா, லூலாவுக்கு எதிராக கடந்த தேர்தலில் போட்டியிட்டவர். லூலாவின் இடதுசாரிக் கொள்கைகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை: