
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தின் போது சங்கரராமன் கொலை வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரி யார்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த போதும், இந்த ஒரு வழக்கில் மட்டுமே முறையாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
அதிமுக ஆட்சி மாறி திமுக ஆட்சி வந்தவுட னேயே சங்கரராமன் கொலை வழக்கும் திசை மாறத் துவங்கியது. நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்ட 189 பேரில் 80பேர் பிறழ் சாட்சிகளாக மாறி பல்டியடித்தனர். இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய ரவிசுப்பிரமணியம் கூட தனது வாக்கு மூலத்தை மாற்றிக் கொண்டார். விசாரணை அதி காரிகள் கூட வழக்கில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதற்கேற்ப நடந்து கொண்டதாக தெரியவில்லை.
சங்கரராமன் குடும்பத்தார் உள்பட சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதற்கான மர்மத்தை புரிந்து கொள்வது கடினமல்ல. வழக்கை தொடுத்த அதிமுக ஆட்சி மீண்டும் வந்துள்ள நிலையில், வழக்கு சரியான திசையில் செல்வதை உறுதிப் படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட கொடுமை களில் ஒன்றான தினகரன் நாளிதழ் எரிப்பு, 3 ஊழியர்கள் உயிருடன் கொல்லப்பட்ட அந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை மேல் முறையீடு செய்வதற்கானஅனுமதியை தற்போது பெற்றுள்ளது. இந்த வழக்கு நடந்தபோது புகார் கொடுத்தவரில் துவங்கி விசாரணை அதிகாரிகள் வரை பல்டியடித்தனர். இந்த வழக்கில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. தினகரன் நாளிதழ் எரிப்பு வழக்கில் உரிய முறையில் மேல் முறையீடுசெய்து தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தினகரன் நாளேடு மீதான தாக்குதல் வழக்கு மற்றும் தா.கிருஷ்ணன் கொலை வழக்கு போன்றவை மறு விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மக்க ளுக்கு உறுதியளித்தார்.
இப்போது தினகரன் மீதான தாக்குதல் வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ள நிலையில், தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் உரிய முறையில் மேல் முறையீடு செய்து குற்றவாளிகள் தண்டனை பெற தமிழக அரசு ஏற்பாடு செய்வது அவசியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக