சனி, 31 அக்டோபர், 2009

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் - மதுரை முன்னாள் மக்களவை உறுப்பினர் தோழர் பொ.மோகன் காலமானார்

இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பொ.மோகன் இந்திய மாணவர் சங்கத்தில் தம்மை இணைத்து கொண்டு தனது அரசியல் பணியை துவக்கினார். 1973ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மேலப் பொன்னகரம் காஸ்ட்ரோ கிளை யில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.


சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் செயல்துடிப்பு மிக்க ஊழியராக செயல்பட்ட பொ. மோகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நகரச் செயலாளராகவும் பின்னர் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளராகவும் பணியாற்றியுள் ளார்.

பொ.மோகன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற் றினார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் முழுநேர ஊழி யராக பணியாற்றினார். மதுரை அரசு மருத்துவமனையில் வசதி களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக பிரம் மாண்டமான மறியல் போராட் டத்தை நடத்தி காவல்துறையின் கொடூர தடியடி தாக்குதலுக்கு உள்ளானார். மேலும் மக்களின் பல்வேறு அடிப்படைப் பிரச்ச னைகளுக்கான போராட்டங் களில் பங்கேற்று 52 நாட்கள் சிறையில் அவர் இருந் துள்ளார். கடந்த 1999ம் ஆண்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பொ. மோகன், 2004ம் ஆண்டும் தொடர்ந்து மதுரை மக்களின் நல்லாதரவுடன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டார்.

மதுரை மாவட்டம் உசிலம் பட்டி அருகே உள்ள பூச்சிபட் டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி-மீனாட்சி ஆகியோரின் மகனான பொ.மோகன் பி.ஏ.பட்டதாரி யாவார். இவர் 30.12.1949ம் ஆண்டு பிறந்தார்.

இவரது மனைவி பூங் காவனம் மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வரு கிறார். இவர்களுக்கு பகத்சிங், வைகைராஜ், நேதாஜி என்ற மூன்று மகன்களும், பாரதி, கங்கா ஆகிய இரண்டு மகள்களும் உள் ளனர்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த பொ.மோக னின் உடல்நிலை மோசமடைந்த தையொட்டி அப்பல்லோ மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்தார். அங்கு சிகிச்சை பல னின்றி அவர் வெள்ளியன்று மாலை காலமானார். அவரது உடல் சென்னையிலிருந்து மது ரைக்கு கொண்டு வரப்படுகிறது. பொ.மோகன் உடல் பொதுமக் கள் அஞ்சலிக்காக காலை மதுரை மகபூப்பாளையம் சர் வோதயா சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்படுகி றது. அங்கிருந்து மாலை 5 மணிக்கு பொ.மோகன் உடல் ஊர்வலமாக தத்தனேரி மயானத் திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு இறுதி நிகழ்ச்சி நடை பெறுகிறது

நாடாளுமன்றத்தில் தனது கன்னிப்பேச்சிலேயே தமிழ் மொழியை உயர்தனிச் செம் மொழியாக அறிவித்திட வேண்டு மென முழக்கமிட்ட பொ.மோகன், சமஸ்கிருதம் மொழி ஆண்டாக அறிவிக்கப்பட்டதைப் போல தமிழ் மொழிக்கான ஆண்டு அறிவிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வாதாடினார்.

சென்னை-கன்னியாகுமரி இரட்டை அகலப்பாதை ஏற் படுத்திட வேண்டும். மதுரை-ராமேஸ்வரம் அகலப்பாதைக்கு முழுமையாக நிதி ஒதுக்கிட வேண்டுமென்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த பத்தாண்டுகளாக நாடா ளுமன்றத்தில் இவர் குரலெழுப் பியது குறிப்பிடத்தக்கது.

முதல்வர், தலைவர்கள் அஞ்சலி

தோழர் பொ.மோகன் காலமான செய்தியறிந்தவுடன் சென் னையில் அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தோழர் பொ.மோகன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.ரா.வரதராசன், ஜி.ராமகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், என்.சீனிவாசன், ஏ. லாசர், பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத் தினர்.

பிரகாஷ்காரத்

கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, கே.வரதராசன் ஆகியோர் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தனர்.

செங்கொடி தாழ்த்தி

மாநிலக் குழு அஞ்சலி

தோழர் பொ.மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினரும், மதுரை மக்களவைத் தொகுதி முன் னாள் உறுப்பினருமான தோழர் பொ.மோகன் அவர்களின் அகால மரணத்திற்கு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்த்தி ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது.

மாணவ பருவத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்ட தோழர் பொ.மோகன் கட்சியின் மதுரை நகர்க்குழு செயலாளராகவும், பின்னர் மாவட்டக் குழுவின் செயலாளர் பொறுப்பை ஏற்றும் சிறப்பாக செயல்பட்டவர். 1999ம் ஆண்டு மதுரை மக்களவை தொகுதியில் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற தோழர் பொ.மோகன் மீண்டும் 2004 தேர்தலிலும் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்று தொடர்ந்து 10 ஆண்டுகள் தமிழக மக்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர். தனது எளிமையான வாழ்க்கை முறை கார ணமாக மக்களின் நேசத்திற்குரிய தலைவராக பரிணமித்த வர். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் கட்சி யின் வேட்பாளராக போட்டியிட்ட நேரத்திலேயே அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற நேரிட்டது. அதைத் தொடர்ந்தும் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஒரு மாத காலமாக முதலில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அப் பல்லோ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வெள்ளியன்று (30.10.2009) அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மாலை 6.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 60. அவரது மரணம் கட்சிக்கும், ஏழை -எளிய உழைப்பாளி மக்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி பூங்கா வனத்திற்கும், குழந்தைகளுக்கும், குடும்பத்தாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறோம்.

தோழர் பொ.மோகன் இறுதி ஊர்வலம் 31.10.2009 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக் குழு அலுவலகத்திலிருந்து (10, சர்வோதயா மெயின்ரோடு, மகப்பூப் பாளையம், மதுரை -10) புறப்பட்டு தத்தனேரி மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: