வெள்ளி, 15 அக்டோபர், 2010

உங்கள் வங்கிக் கணக்கை பாதுகாப்பது எப்படி?

இன்றைய நவீன விஞ்ஞான உலகத் தில் அனைத்து துறைகளிலும் ஏதாவது ஒரு விதத்தில் கணினியின் பயன்பாடு அவசியமாகிறது. நாளுக்கு நாள் கணி னியை பயன்படுத்துவோரின் எண்ணிக் கையும் அதிகரித்துவருகிறது. துறை சார்ந்த பணிகளையோ, அல்லது சொந்த பணிகளையோ கணினி மூலம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண் டிய அவசியம் அதிகரித்து வருகிறது.

பொதுவாக கணினி மையங்கள், மற்ற அலுவலகங்களில் உள்ள கணினி கள், வாடகை கணினிகள் மற்றும் மற்ற வருடைய கணினிகளை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இன்று நமது ரகசியத்தை திருடுவதற்கு என்று மென் பொருட்கள் பல வந்துவிட்டன. குறிப் பாக பணம் சம்பந்தமான விஷயங்கள், பாது காக்கப்பட்ட ரகசிய ஆவணங்கள், நமது கடவுச் சொற்கள் (ஞயளளறடிசன) மற்றும் எண்களை நமக்கு தெரியாமலேயே நகல் எடுத்து அடுத்தவருக்கு (கட்டளையிடுவோருக்கு) அனுப்பிவிடும். இதற்கு ஸ்பைவேர் மற்றும் ஆட்வேர் என்றழைக்கப்படும் கணினி நிரல்கள் (மென் பொருட்கள்) பயன்படுத்தப்படுகின்றன.

இது தவிர கீ லாக்கர் என்ற மென் பொருள் இன்னும் ஆபத்தான பல விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. நாம் ஒரு கணினியை பயன்படுத்தும் போது அந்த கணினியில் ஏற்கனவே கீ லாக்கர் மென்பொருள் இணைக்கப்பட்டி ருந்தால் போதும். நம்முடைய அனைத்து அசைவுகளும் நமக்கு தெரியாமல் பதிவு செய்யப்பட்டுவிடும். உதாரணமாக நம்மு டைய மின்னஞ்சல் தளம் அல்லது இணைய வங்கிக் கணக்கில் நுழைந்து நமது வேலை முடிந்ததும் இணைப்பை துண்டித்துவிட்டு சென்று விடுவோம். ஆனால் அக்கணினியில் கீ லாக்கர் மென் பொருள் நிறுவப்பட்டிருந்தால், நாம் எத் தனை மணிக்கு எந்த ‘கீ’ யை அழுத்தி னோம் என்பதிலிருந்து நமது பாஸ்வேர்ட் மற்றும் கீ போர்டில் இயக்கிய அனைத்து அசைவுகளையும் வீடியோ எடுத்தது போன்று வரிசையாக பதிவு செய்து வேர்ட் பைலாக மாற்றி வைத்துக்கொள்ளும்.

பின்னர் அந்தக் கணினிக்கு சொந்த மானவர் கீ லாக்கர் மென்பொருளுக்குரிய பாஸ்வேர்டை கொடுத்து திறந்து பார்த்தால் நாம் டைப் செய்த அனைத்து எழுத்துக் களும் அப்படியே பதிவாகியிருக்கும். அவர் நினைத்தால் நமக்கு தெரியாமல் நமது மின்னஞ்சல் கணக்கிலிருந்து மற்றவர் களுக்கு மின்னஞ்சல்களை அனுப்ப முடியும். நமது கடவுச்சொல்லை மாற்றி யமைக்கலாம். நாம் மின்னஞ்சல் கணக்கில் சேமித்து வைத்திருக்கும் நமது சொந்தத் தகவல்களை எடுத்துத் தவறாகப் பயன்படுத்தமுடியும். இணைய வங்கி வசதியை பயன்படுத்தியிருந்தால் அதன் ரகசிய எண்ணைப் பயன்படுத்தி பணமோசடியும் செய்யமுடியும்.

எனவே வெளி இடங்களிலோ அல்லது மற்றவர் கணினி மூலமோ பணப் பரிவர்த்தனை, முக்கிய கோப்புகளைப் பகிர்வது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. இல்லையேல் மற்றொரு வழி இருக்கிறது.

நமது கணினியாக இருந்தாலும் அடுத்தவர் கணினியாக இருந்தாலும் நமது பயனர் பெயர், கடவுச்சொல் விபரங் களை கீபோர்டில் நேரடியாக டைப் செய்யாமல் விசுவல் கீபோர்டு உதவியு டன் பதிவு செய்யலாம். இது ஓரளவிற்கு நம்பகமானது. உங்கள் விண்டோஸ் கணினியில் விசுவல் கீபோர்டைப் பெற சென்று ஆன் -ஸ்கிரீன் கீபோர்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மவுஸ் மூலமாக பயனர் பெயர், கடவுச்சொல் எழுத்துக்களை கிளிக் செய்வதன் மூலமாக பாதுகாப்புடன் இணையக்கணக்கில் நுழையமுடியும்.

கருத்துகள் இல்லை: