அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூன்று நாள் பயணம் அவர் சென்ற இடங்களிலெல்லாம் கோலாகலக் கொண்டாட்டங்களுடன் நடை பெற்றுள்ளது. அவருடைய பயணத்தை பயங்கர வாத எதிர்ப்பு, வர்த்தகம், தீபாவளிக் கொண்டாட் டம், ஜனநாயகம் பற்றி கருத்துரை, தில்லி நிகழ்ச் சிகள் என்று ஐந்து கூறுகளாகப் பிரித்துவிடலாம். மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத் தவர்களுடனான சந்திப்போடு தனது இந்தியப் பயணத்தைத் துவக்கினார் அதிபர் ஒபாமா.
வர்த்தகம் பற்றி அமெரிக்க-இந்திய வர்த்தகக் கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் அவர் எதற் காக வந்தாரோ அதில் தெளிவாக இருந்திருக் கிறார். வார்த்தைகளைத் தேவையில்லாமல் கொட்டவில்லை. இந்திய அரசு எத்தகைய கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். அண்மைக்காலங்களில் இந்தக்கவுன்சில் நீட் டும் காகிதத்தில் கையெழுத்திட்டு பல கொள் கைகளை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகத்துறையில் ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அணுமின் சக்தித் துறைக்கான சாதனங்கள், ராணுவ மற்றும் சிவில் விமானங்கள், பாதுகாப்புத்துறை தளவாடங்கள் போன்றவற்றை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொள்வது என்பது இந்த ஒப்பந்தங்களில் குறிப் பிடத்தக்கவையாகும். அமெரிக்காவில் ஏராள மான வேலைவாய்ப்புகளை இந்த ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும் என்று ஒபாமாவே வெளிப்படை யாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் 50 ஆயிரம் என்று அடக்கமாகக் குறிப்பிட்டாலும் சுமார் ஏழு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நமது வேலைகளைக் கபளீகரம் செய்யும் இந் தியாவில் போய் என்ன செய்தீர்கள் என்று மக் கள் கேட்பார்கள். இதோ இவ்வளவு வேலை வாய்ப்புகளைக் கொண்டு வந்திருக்கிறேன் என பதிலளிப்பேன் என்று ஒபாமா தன்னைத்தானே தோளில் தட்டிக் கொடுத்துக் கொண்டு சொல் லியிருக்கிறார். அதாவது, இந்தியாவின் வேலை களைக் கபளீகரம் செய்து விட்டேன் பார்த்தீர் களா... என்று நம்மைப் பார்த்து நமது சொந்த மண்ணிலேயே வீராவேசமாகப் பேசிச் சென்றுள் ளார். அவரை கைதட்டிப் பாராட்டி வழியனுப்பி வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.
சுதந்திரம் அடைந்தவுடன் அணிசேரா அமைப்பில் இந்தியா இருந்ததையும், அப்போது இரு நாடுகளும் வடக்கும் தெற்குமாக இருந்தன என்றும் ஒபாமா நாடாளுமன்றப் பேச்சில் குறிப் பிட்டுள்ளார். தற்போது அமெரிக்காவுடன் நெருங்கி வந்துள்ளது என்பதையே அந்தக்காலம் முடிந்து விட்டது என்கிறார். நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று அனைத்து காங் கிரஸ் பிரதமர்களும் மார்தட்டிச் சொன்ன அணி சேராக் கொள்கை தகர்ந்துவிட்டதாக ஒபாமா கூறுகிறார். அருகிலே அமர்ந்து சோனியா காந்தி யும், மன்மோகன்சிங்கும் கைதட்டிக் கொண்டி ருக்கிறார்கள்.
மற்றபடி இவர் பேசியது எதையும் நடை முறையில் செய்யப்போவதில்லை. பாகிஸ்தா னுக்கு சன்மானம், பல நாடுகளில் ஜனநாயகப் படுகொலை, தனக்கு என்றால் வர்த்தகக் கட்டுப் பாடுகள் என்கிற அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகள் தொடர்கின்றன. இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அன்றாடம் வெடிவெடித்து தீபாவளி கொண்டாடுகிறது அமெரிக்கா. இவற்றில் “மாற்றம்” கொண்டு வருவது பற்றி அவர் பேசவேயில்லை.
சனி, 20 நவம்பர், 2010
ஒபாமா பயணத்தால் யாருக்கு லாபம்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக