ஞாயிறு, 9 ஜனவரி, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலை விழுங்க முயற்சிக்கும் கபில்சிபல்


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதை பிரதமரே ஒப்புக்கொண்டு, பொதுக் கணக்குக்குழு முன்பு ஆஜராகத் தயார் என்று ஆவேசமாக நாடகமாடிய நிலையில், அப்படி ஒரு ஊழலே நடைபெறவில்லை என்று கபில்சிபல் தடாலடியாக கூறியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் நடந்துள்ள அளவில்லாத முறைகேடுகளால் இந்திய நாட்டின் கருவூலத்திற்கு ரூ.1 லட்சத்தி 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய தலைமை கணக்கு மற் றும் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் அனைத்து விபரங் களையும் குறிப்பிட்டு கூறியுள் ளார். ஆனால் இந்திய அரசியல மைப்புச்சட்டத்தின் கீழ் அமைக் கப்பட்ட, நாட்டின் மிக உயர்ந்த தணிக்கை அமைப்பான மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையகம் கொடுத்த இந்த அறிக்கையை மோசடியானது என்று கபில்சிபல் சற்றும் கூசா மல் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக மோசமான ஊழ லாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை எதையாவது தடா லடியாக கூறி திசைதிருப்பி, அத் துடன் மூடி மறைக்குமாறு காங் கிரஸ் மேலிடம் அளித்த உத்தர வுக்கிணங்க கபில்சிபல் மேற் கண்டவாறு கூறியிருக்கிறார். கபில்சிபலின் இந்தக்கருத்துக் கள் தொடர்பாக தில்லியில் சனிக் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய் தித்தொடர்பாளர் சகீல் அகமது, கபில்சிபலிடம் அனைத்து விப ரங்களும் உள்ளன என்றும், எனவே அவரது கருத்துக்கள் நம் பகத்தன்மை வாய்ந்தவை என் றும் அதை கேள்விக்குள்ளாக் கும் பேச்சே இல்லை என்றும் கூறினார்.

காங்கிரஸ் மேலிடத்தின் ஆத ரவுடன், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழ லை முற்றிலும் மூடி மறைக்க கபில் சிபல் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி , இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரி கட்சிகளும், பாஜக கூட் டணியும், தமிழகத்தில் மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.

இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் நியாயப்படுத்தி இருப்பது மிகவும் கேவலமானது. இந்த ஊழல் தொடர்பாக முழுமை யான விசாரணையை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி மீது முன்னெப்போதும் பார்த்திராத அளவிற்கு அமைச்சர் கபில் சிபல் கடும் தாக்குதலை தொடுத் திருப்பதன் மூலம், இந்த ஊழல் தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு விசாரணைகளை சிறு மைப்படுத்த முயற்சித்திருக்கி றார்; விசாரணையில் ஈடுபட் டுள்ள பல்வேறு அதிகாரப்பூர்வ அமைப்புகளிடம் தனது கருத் தை திணித்து திசைதிருப்ப முயற் சித்திருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளவே முடியாதது.

கபில்சிபல் விடுத்த அறிக்கை யின் மூலம், இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்தும் நம்பகத்தன்மையை மத்திய அரசு முற்றிலும் இழந்து விட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவ காரத்தை கபில்சிபல் நியாயப் படுத்தியிருப்பதன் மூலம், இந்த ஊழலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மிகவும் ஆழ மான முறையில் சம்பந்தப்பட்டி ருக்கிறது என்பது மேலும் தெளி வாகிறது. இதில் இத்துறையின் முன்னாள் அமைச்சராக இருந்த ஆ.ராசாவின் செயல்பாடுக ளோடு மட்டும் இந்த ஊழல் விவகாரத்தை சுருக்கிவிட முடி யாது என்பதும் தெளிவாகிறது. எனவே முழுமையான விசார ணைக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு உடனடியாக அமைக்கப் படவேண்டியது அவசியமா கிறது.

மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களின் மதிப் பை கணக்கிடும்போது 2008ம் ஆண்டில் ஏலமிடப்பட்ட 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை களுக்கான 2010ம் ஆண்டு கட்ட ணத்தின் அடிப்படையில் கணக் கிட்டுவிட்டார் என்றும், 2001ம் ஆண்டு கட்டணங்களை கணக் கிடாததால் அவரது அறிக்கை தவறானது என்றும் கபில்சிபல் கூறியுள்ளார். கபில்சிபலின் இந்த கண்ணோட்டம் தவறானது. 2008ம் ஆண்டில் சந்தாதாரர் களின் எண்ணிக்கையும் ரூபா யின் மதிப்பும் மாறிவிட்டது. தனது வாதத்திற்கு இந்த தர்க் கத்தை அவர் பொருத்திப்பார்க்க வில்லை. 2001ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 மில்லியன் (40 லட்சம்) சந்தாதாரர்களே இருந் தனர்; 2008ம் ஆண்டு உரிமம் வழங்கும்போது நாடு முழுவதும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 300 மில்லியன் (30 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி மட் டுமல்ல; இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (டிராய்) கூட 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக் கற்றைகளின் மதிப்பை 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை கற் றைகளுக்கான கட்டணத்தின் அடிப்படையில் கணக்கிடலாம் என்று கூறியுள்ளது; அதுமட்டு மன்றி, தொழில்நுட்ப ரீதியாக இது எப்படி சரியானது என்று முறையான விளக்கத்தையும் அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.

1999ம் ஆண்டு பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, தொலைத் தொடர்பு அலைவரிசைகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது என்ற முறையிலிருந்து, அதில் கிடைக் கும் வருமானத்தை பகிர்ந்து கொள்வது என்ற நடைமுறைக்கு கொள்கையை மாற்றியதால் கருவூலத்திற்கு இழப்பு ஏற்பட் டது என்று கபில்சிபல் வாதிடு கிறார். மிகமிகத் தாமதமாக அமைச்சர் கபில்சிபல் இதைக் கண்டுபிடித்துவிட்டார் போலும்; அதைச்சொல்லி தற்போதைய மிகப்பெரிய ஊழலை நியா யப்படுத்த முயற்சிக்கிறார்.

தொலைத்தொடர்புத்துறையில் தொடர்ச்சியாக ஊழல்கள் நடந்துவருவது குறித்து இந்த நாட்டில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது சாரிக் கட்சிகளும் மட்டுமே. ஒவ்வொரு வழக்காக இதை நாம் காண முடியும். 1999ல் வரு மானப்பகிர்வு கொள்கையைக் கொண்டுவருகிறோம் என்ற பெயரில் பாஜக கூட்டணி அர சின் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த சுக்ராம் நடத்திய ஊழல்; தற்போது 2ஜி மெகா ஸ்பெக்ட்ரம் ஊழல்.

முந்தைய காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி களின்போது நடந்த ஊழல்களை முன்வைத்து, தற்போதைய 2ஜி ஊழலை நியாயப்படுத்திவிட முடியாது என்பதை கபில்சிபல் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த ஊழலில் நாட்டின் கருவூ லத்திற்கு மிகப்பெரும் இழப்பு ஏற்பட யாருடைய நடவடிக் கைகள் காரணமாக இருந்தன என்ற கேள்வியை மட்டும் இடதுசாரிகள் எழுப்பவில்லை; இந்த ஊழலால், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நட வடிக்கைகளால் மிகப்பெரும் கொள்ளை லாபத்தை அடைந்த பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களிடமிருந்து அந்த இழப்பை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் இடதுசாரிகள் வலியு றுத்தி வருகிறார்கள்.

கபில்சிபலின் அறிக்கை, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை மிகக்குறைவான கட்டணத்திற்கு கைப்பற்றியதன் மூலம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடைந்த சட்டவிரோதமான கொள்ளை லாபத்தை பாதுகாக் கும் நோக்கத்துடன் கூடியதே.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது

கருத்துகள் இல்லை: