மற்றொரு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர் கொல்லப்பட்டார் என்ற தலைப்புடன் பெட் டிச் செய்தியொன்றை அண்மையில் இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. தலைப்புச் செய்திகளை மட்டும் படித்துவிட்டு அடுத்த செய்திக்குத் தாவும் வாசகருக்கு இச்செய்தி யின் உண்மையான பின்னணி புரிந்திருக் காது. இரண்டு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார் போலும். அரசியலில் இது சகஜம் தானே என்று கூட அவர் இச்செய்தியை அலட்சியப்படுத்தியும் இருப்பார். ஆனால் இது கட்சி மோதலின் போது ஏற்பட்ட மரணம் அல்ல. மாறாக கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்குவங் கத்தில் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் நூற் றுக்கணக்கான படுகொலைகளில் இதுவும் ஒன்று. இப்போது கொல்லப்பட்டுள்ளவர் ஒரு ஓய்வுபெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர், மார்க் சிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருப்பதே இவர் செய்த குற்றம். இவர் தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது ஒரு மாவோயிஸ்ட் கும்பலால் வழிமறித்துக் கொல் லப்பட்டார்.
மேற்குவங்கத்தின் நந்தி கிராமத்தில் பெட்ரோலிய கெமிக்கல் வளாகம் அமைக்கப் படப்போவதில்லை. நிலங்கள் எவையும் அங்கே கையகப்படுத்த மாட்டாது என்ற திட்டவட்டமான அறிவிப்பை மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெளிவாக அறிவித்த பின்னரும், முஸ்லிம் பள்ளிவாசல் உள்ளிட்ட பல இடங்களையும் வலுக்கட் டாயமாக கையகப்படுத்துவதற்கான சதி நடக் கிறது என்ற பீதியைக் கிளப்பிவிட்ட மம்தா-மாவோயிஸ்ட் கும்பல், அப்பகுதியைச் சேர்ந்த 2000க்கு மேற்பட்ட மக்களை -அவர் கள் இடது முன்னணியை ஆதரிப்பவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அண்டை கிரா மங்களுக்கு அகதிகளாக விரட்டியடித்தனர். அதே மாவோயிஸ்ட்டுகள் தான் மேற்குவங்க முதலமைச்சர் சென்ற காரை குண்டுவைத்து தகர்த்து அவரைக் கொல்ல முயற்சித்தனர். அந்த படுகொலை முயற்சியில் ஈடுபட்டவர் களைத் தேடும் வேலையில் காவல்துறை ஈடுபட்டவுடன் மேற்கு மிட்னாப்பூர், புருலியா மற்றும் பங்குரா ஆகிய மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் ஊழியர்களைத் தேர்ந்தெடுத்துக் கொல்லும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் சீனத்தின் மகத்தான புரட்சிக்கார ரான மாசேதுங்கின் பெயரை இவர்கள் கெடுத்து வருகின்றனர். நூறு பூக்கள் மல ரட்டும், நூறு சிந்தனைகள் மோதட்டும் என் றார் அம்மாமனிதர். மார்க்சிய வழியைப் பின்பற் றும் ஒவ்வொரு அமைப்பின் லட்சியமும் சமூக மாற்றமே. இதில் எத்தகைய கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. அந்த சமூக மாற்றத்துக்கான பாதை தொடர்பாகத்தான் மாறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியும். இந்தியாவின் முதற் பெரும் மார்க்சிய இயக்க மான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தி யாவில் புரட்சிக்கான பாதையைப் பற்றிய தெளிவான கருத்தைக் கொண்டுள்ளது. நாடா ளுமன்ற நடவடிக்கைகளையும், அதற்கு வெளியே நடத்தும் மக்கள் இயக்கங்களையும் இணைத்து, இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை அரங்கேற்றும் சிந்தனையோடு அது செயல்பட்டு வருகிறது.
இன்றைய மாவோயிஸ்ட்டுகளின் முன் னோடிகளான நக்சலைட்டுகள் கலகக்கொடியை உயர்த்திவிட்டு, மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து 1967ல் வெளியேறினர். இந்தியாவின் ஆளும் வர்க்க மாக தரகு முதலாளிகள் இருந்து வருகின் றனர். அவர்களுக்கென்று சமூக அடித்தளம் இல்லை. எனவே மக்களை ஆயுதபாணி களாக்கி மக்கள் யுத்தத்தை நடத்தி புரட்சியை நடத்தப்போகிறோம். இதற்காக வர்க்க விரோ திகளை ஒழித்துக்கட்டும் கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகிறோம் என்று கூறி விட்டு அவர்கள் கட்சியை விட்டு, வெளியேறி னார்கள். ஆனால், வர்க்க விரோதிகளை ஒழித் துக் கட்டுவதற்கு பதிலாக, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களைக் கொன்று குவித்தனர். அவர் களது தவறான கொள்கைக்கு எதிரான தத்து வார்த்தப் போராட்டம் மேற்குவங்கத்தில் நடத் தப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக கட்சி நடத்திய தத்துவார்த்தப் போராட்டம் கார ணமாக தனிமைப்பட்டுப் போன நக்சலைட் டுகள் காணாமல் போய்விட்டனர். இப்போது நக்சலைட்டுகளின் புதிய அவதாரமான மாவோயிஸ்டுகள் மம்தா பானர்ஜியின் கை யைப் பிடித்துக்கொண்டு மேற்குவங்கத்தில் நுழைந்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் வனப்பகுதிகளிலும், மலைகளிலும் ஒளிந்து வாழும் இவர்கள் மேற்கு மிட்னாப்பூர், புருலியா மற்றும் பங்குரா மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிவாசி மக்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு மே மாதம் முதல் இவர்கள் கொன்று குவித்த தோழர் களின் எண்ணிக்கை 175ஐ தாண்டிவிட்டது. இவர்களெல்லாம் ஏன் கொல்லப்பட்டார்கள்? ஏழை ஆதிவாசி விவசாயிகளையும், தொழி லாளர்களையும், ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் ஏன் இவ்வாறு கொன்று குவிக்கிறீர்கள்? அவர்கள்தான் உங்கள் வர்க்க விரோதிகளா?
‘நாடாளுமன்றம் பன்றித்தொழுவம். தேர் தல் பாதை திருடர் பாதை’ என்று கூக்குர லிடுகிறீர்கள். ஆனால் ஒரு முதலாளித்துவக் கட்சியாகிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யின் தலைவியாகிய மம்தா பானர்ஜியை தேர் தல்கள் மூலம் மேற்குவங்க முதல்வராக்குவ தற்குத் துடிக்கிறீர்களே? இதுதான் மார்க்சிய, லெனினிய, மாவோயிச அரசியலா? இதற்கா கத்தான் ஆயுதம் ஏந்திப்போராடி வருகிறீர்களா?
ஆதிவாசி மக்களின் நலன்களைப் பாது காக்கத்தான் போராடுவதாக கூறிக்கொள்கிறீர் கள். ஆனால் ஆதிவாசி நலன்களை பாதுகாப் பதில் முன்னணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியை ஒழித்துக்கட்டுவது தான் இதற் கான பாதையா? மக்கள் தொகையில் 30 சதத் துக்கு மேல் ஆதிவாசி மக்களைக்கொண்ட மாநிலம் திரிபுரா மாநிலம். அந்த திரிபுரா மாநில ஆதிவாசிகளின் நிலங்களை அவர்களுக்கு மீட்டுத் தந்தது யார்? அவர்களுக்காக ஆதி வாசி சுயாட்சி மாவட்டக் கவுன்சில்கள் உரு வாவதற்குக் காரணமானவர்கள் யார்? பல் வேறு வளர்ச்சித்திட்டங்களை உருவாக்கி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உரு வாக்கியது யார்? பொதுவிநியோக முறையை பலப்படுத்தி மலிவு விலையில் தானியங்கள் வழங்கப்பட காரணமானவர்கள் யார்? சாலை கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற வற்றை உருவாக்கி ஆதிவாசி மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வரும் கட்சி எந்தக்கட்சி? அந்தக் கட்சியை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் நீங்கள் ஆதிவாசி நலன் களை பாதுகாக்கப்போகிறீர்களா?
ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங் களை உள்ளடக்கிய மத்திய இந்தியாவின் கனிமச்சுரங்கங்களை இந்திய மற்றும் அந்நிய முதலாளிகளின் வேட்டைக்காடாக உலகமய வாதிகளின் தலைமையில் இயங்கிவரும் மத்திய அரசு மாற்றியுள்ளது. ஆதிவாசி மக்க ளின் நிலங்களைப் பறித்தல், அவர்களுடைய வாழ்விடங்களிலிருந்து அவர்களை அப்புறப் படுத்துதல், தங்கள் அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக வனப்பொருட்களை ஆதிவாசி கள் பயன்படுத்துவதைத் தடைசெய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ஆதிவாசிகளின் வாழ்க்கையை மத்திய ஆட்சியாளர்கள் சூறையாடி வருகின்றனர். சுரங்க முதலாளிகளும், அவர்களின் கையாட் களாக இயங்கிவரும் மாபியா கும்பலும் மத்திய-மாநில காங்கிரஸ், பாஜக அரசுகளின் காவல்துறையும் ஆதிவாசிகளுக்கு எதிராக இழைத்து வரும் கொடுமைகளை சொல்லி மாளாது. அந்த மத்திய அரசில் அங்கம் வகிக் கும் மம்தா கும்பல் மேற்குவங்க மாநில அர சாங்கத்தையும் கைப்பற்றத் துடிக்கிறது அந்த முயற்சிக்குத் துணைபோவதன் மூலம் தான் ஆதிவாசி நலன்களை பாதுகாக்கப் போகிறீர் களா?
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் களைக் கொல்வதன் மூலம் அதனை ஒழித் துக்கட்டிவிடலாம் என்று பகற்கனவு காணா தீர்கள்.1970களில் மேற்குவங்க காங்கிரஸ் கட்சியின் அரைபாசிச அடக்குமுறையை தவிடு பொடியாக்கி முன்னேறிய கட்சி தான் மார்க்சிஸ்ட் கட்சி. அப்போது பல்லாயிரம் தோழர்களை பறிகொடுத்தபோதும் துவண்டு போகாமல் மீண்டும் கம்பீரமாக எழுந்து நின்ற கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநில மக்களின் பேராதரவோடு மீண்டும் மீண்டும் ஆட்சியைக் கைப் பற்றி வரும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. திரிபுராவில் உபஜாதி சமிதி என்ற கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டாக ஏவிவிட்ட வன்முறை வெறியாட்டங்களை எதிர் கொண்டு, நெருப்பாற்றில் நீந்தி முன்னேறிய இயக்கம்தான் மார்க்சிஸ்ட் இயக்கம். அரசி யல் விழிப்புணர்வுமிக்க மேற்குவங்க மக்கள், திரிணாமுல், மாவோயிஸ்ட் கூட்டத்தின் சாகசங்களை முறியடித்து, இடதுமுன்னணியை வலுப்படுத்துவார்கள் என்பது உறுதி.
கி.இலக்குவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக