சனி, 26 ஜூன், 2010

தோழர்கள் குமார்-ஆனந்தனுக்கு வீரவணக்கம்




மாபெரும் சபைகளில் நீ நடந்தால்

உனக்கு மாலைகள் விழ வேண்டும் - ஒரு

மாற்றுக் குறையாத மன்னவன்

இவனென்று போற்றிப் புகழ வேண்டும்!....

என்கிற கவிஞனின் வரிகள், பொதுவாழ் வில் எப்படி இருக்க வேண்டுமென்பதை எடுத்துரைக்கின்றது. அந்த வரிகளுக்கு ஏற்ப மாற்றுக் குறையாமல் போராடியதால் உயிர்த் தியாகம் செய்தவர்கள் தோழர்கள் குமார் - ஆனந்தன். அவர்கள் என்றும் எங்கள் இதயங் களின் மா மன்னர்கள். தான் வாழும் பகுதி மக் களை பாதுகாக்க போராடியவர்கள். கள்ள சாரா யத்தால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்பதற்காக தன்னுயிரை துறந்த தியாகச் செம்மல்கள். சமூக விரோதக் கும்பலுக்கு துணைபோயிருந்தால் ஏதோ வாழ்ந்து மடிந்திருக்கலாம். மாறாக, அதில் துளி கூட குறைவில்லாமல் கொண்ட கொள்கையில் உறுதியுடன் நின்று மடிந்த இளம் வீரர்கள்....

ஆம். 1999ம் ஆண்டு ஜூன் 26 அன்று போதை கலாச்சாரத்திற்கும், சமூக விரோதக் கும்பலுக்கும் எதிராக போராடியதால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்கள் தோழர்கள் குமார் - ஆனந்தன். அவர்கள் நம்முடன் இருந்து பிரிந்து இன்றோடு 11 ஆண்டுகள் உருண் டோடிவிட்டன. கடலூர் புதுப்பாளையம் பகுதி யில் குமார் - ஆனந்தனை தெரியாத நபர்கள் இல்லை. ஏன், தமிழகம் முழுவதும் ஈரமுள்ள இதயங்களில் இன்றும் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அதே தினம் ஜூன் 26 உலகப் போதை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

எதிர்காலத் தலைமுறையை வளர்த் தெடுக்கும் பங்கு அந்நாட்டின் அரசுக்கு மிகப் பெரும் கடமை. அதற்கு உந்து சக்தியாகத் திக ழும் துறைகள் கல்வியும், சுகாதாரமும் தான். இது முழுக்க நம் நாட்டில் தனியார் கைகளில் கொள்ளைக் கூடமாக உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிபந்தனை விதித்தால் அதனை ஏற்க மறுக்கும் அள வுக்கு இன்று தனியார் முதலாளிகளின் கரங் கள் வலுப்பெற்று உள்ளது. ஒவ்வொரு மனித னும் தன் பிள்ளைகளை சிறந்த மாணவனாக தலைநிமிர்ந்து சமுதாயத்தில் வாழ வேண்டும் என நினைப்பது சரியே. அதனையே காரணம் காட்டி மிக அதிக அளவில் வசூல் வேட்டை நடத்திடுவது என்ன நியாயம்.

கடந்த பல ஆண்டுகளாக புதுப்பாளையம் பகுதி மக்களின் வளர்ச்சிக்காக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இணைந்து பல வழிகளில் செயல்பட்டு வருகின்றன. 20வது வார்டு நக ராட்சிப் பணிகளை மக்களின் துணையோடு செய்து வருகிறார்கள். மேலும் பல வழிகளில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.

11வது ஆண்டு நினைவு தினத்தில் குமார் - ஆனந்தன் படிப்பகத்தில் இரவு நேர இல வச பாடசாலை துவக்கவிழா நடைபெறவுள் ளது. 3ம்வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயி லும் மாணவ - மாணவிகளுக்கு தினமும் மாலை நேரத்தில் டியூசன் நடத்திட உள்ள னர். இதற்கு பொறியியல் மற்றும் உயர் கல்வி படித்த இளைஞர்கள் ஆசிரியர்களாக பணி யாற்ற முன்வந்துள்ளது பாராட்ட வேண்டியதா கும். கல்வி வியாபாரமாகியுள்ள இச்சூழ் நிலையில் இலவச பாடசாலை அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும் என்பது திண்ணம்.

நம் வாழ்வில் தடைகள் பல வந்தாலும் அதனை தகுந்த வழியில் தகர்த்தெறிந்து மக்கள் பணிகளில் முழுக் கவனம் செலுத்தி, சமூக மாற்றத்தை முன்னெடுத்துச் செல் வதே நாம் தோழர்கள் குமார் - ஆனந்தனுக்கு செலுத்தும் வீரவணக்கம்!

ஆர்.தாமோதரன், நெய்வேலி

கருத்துகள் இல்லை: