வியாழன், 10 பிப்ரவரி, 2011

ராஜாவுக்கு 88 ,000 வருடம் சிறை

கேரளாவில் 1982-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி நடந்த போது மின்துறை மந்திரியாக இருந்தவர் பாலகிருஷ்ணன் பிள்ளை. அப்போது இடமலையாறு அணையில் நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கான சுரங்கம் அமைக்கும் காண் டிராக்டு பவுலோஸ் என்பவருக்கு விடப்பட்டது.

விதிமுறைகளை மீறி இந்த காண்டிராக்டு விடப்பட்டதுடன் அதிக தொகைக்கு காண்டிராக்டை கொடுத்து பாலகிருஷ்ணன் பிள்ளை முறைகேடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் 1991-ம் ஆண்டு தான் வெளியே தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர் மீது கேரள சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து பாலகிருஷ்ணன் பிள்ளை கேரளா ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அவரை ஐகோர்ட்டு விடுதலை செய்தது.

இதை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் இப்போதைய முதல்-மந்திரியுமான அச்சுதானந்தன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதை நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்தது. பாலகிருஷ்ணன் பிள்ளை ஊழல் செய்தது விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து அவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பாலகிருஷ்ணன் ஊழல் வழக்கை கேரள ஐகோர்ட்டு சரியாக விசாரிக்க தவறி விட்டது. அவர் முறைகேடு செய்து இருப்பதை எதிர் தரப்பு உறுதி செய்துள்ளது. அரசியல் தலைவர்கள் ஊழல் செய்வது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று கூறினார்கள்

அப்பாடா உலக அதிசயம் நடந்துவிட்ட மாதிரி இந்தியாவில் உச்ச நீதிமன்றம் ஒரு மாபெரும் தீர்ப்பை வழங்கி உள்ளது 2 கோடி திருடுனா ஒரு வருசம் தன்டனையாம் நல்ல தீர்ப்புதான் சாமீயோ இந்த பாழாழைப் போன நாட்டில் இந்த தீர்ப்பே பெரிசுதான் என்ன பன்றது நாம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் குடிமக்கள் என்பதில் பெருமை கொள்வோம் .

இதுமாதிரி கேவளமான தீர்பாக இருந்தாலும் பாரவில்லை நம்ம ராஜாக்கும் கணக்கு பன்னி
வெறும் 2 கோடிக்கே 1 வருடம் சிறை என்றால் 1 .76 லட்சம் கோடிக்கு 88 ,000 வருடம் தயவு செஞ்சி கொடுத்துடுங்க எசமான்களே

கருத்துகள் இல்லை: