சனி, 12 பிப்ரவரி, 2011

சிறந்த ஜால்ரா திலகம்: பீட்டர் அல்போன்ஸ்(காங்கி ரஸ்)


தமிழக 13வது சட்டப் பேரவையின் கடை சிக் கூட்டம் வியாழனன்று நிறைவடைந் துள்ளது. இந்த சட்டப்பேரவையின் சிறந்த ஜால்ரா திலகம் என்ற பட்டத்தை பெறுவ தற்கு பலரும் போட்டிப்போட்டாலும் காங்கி ரஸ் கட்சியின் கொறடா பீட்டர் அல் போன்ஸ் முதலிடத்தைப் பெறுவது உறுதி.

சட்டமன்றத்தில் திமுகவினரே பின்வாங் கும் அளவுக்கு திமுகவின் புகழ்பாடியவர் இவர். புகழ்பாடுவது இவருக்கு புதிதல்ல. 1989ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சட்டப் பேரவையில் திமுகவுக்கு குங்குமம் சுமக்கிற கழுதைகள் நாங்கள் என்று கூறியவர் இவர்.

அண்மையில் கலைஞர் தொலைக்காட் சியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கலை ஞரின் ஆட்சித் திறத்தால்தான் 1967ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை என்று சொந்தக் கட்சிக்கே ஆப்பு வைத்த கொறடா இவர்.

இவர் சட்டமன்றத்தில் பேசும்போது, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை பார்த்து “உங்களை இன்னமும் நாட்டில் உலவ விட்டிருப்பதுதான் காங்கிரஸ் செய்த ஒரே குற்றம்” என்று கூறியுள்ளார். இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் உலவிக் கொண்டிருப்பது காங்கிரசாரின் தயவில் அல்ல. கோடிக் கணக்கான உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஒளிர்கிறது கம்யூனிஸ்ட் டுகளின் ஜீவித சூத்திரம்.

அவசர நிலை காலத்தை பிரகடனப்படுத்தி நாட்டின் ஜனநாயக தீபத்தை அணைக்க முயன்ற எதேச்சதிகார வக்கிரப் புத்தி காங்கிரசாரின் அடிமனத்திலிருந்து இன்னமும் அகலவில்லை என்பதையே பீட்டரின் பேச்சு உணர்த்துகிறது. அந்தக் காலத்தில் மேற்குவங்கத்தில் காங்கிரசாரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரைப்பாசிச அடக் குமுறையை வீழ்த்தி, மக்கள் துணையோடு அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இன்றுவரை அங்கு காங் கிரசாரால் தலையெடுக்க முடியவில்லை.

மதவெறி பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே கடந்த முறை ஐக் கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு இடது சாரிக் கட்சிகள் ஆதரவு அளித்தன. இல்லையென்றால் மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.

காங்கிரஸ் செய்த குற்றம் என்ன என்று கேட்டு, நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தது குற்றமா? ஐந்தாண்டு திட்டங்களை நிறை வேற்றுவது குற்றமா? என்றெல்லாம் ‘மனோ கரா’ பட பாணியில் பேசியிருக்கிறார் பீட்டர்.

காங்கிரசாரின் குற்றங்களை பட்டிய லிட்டால் நாட்டில் காகிதப் பஞ்சமே வந்து விடும். விடுதலைப் பெற்றவுடன் காங் கிரசை கலைத்துவிட வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். அதை செய்யாமல் விட்டது காங்கிரசார் செய்த முதல் குற்றம்.

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயரி டக் கோரி உண்ணாவிரதம் இருந்த தியாகி சங் கரலிங்கனாரின் உயிரை பறித்தது பெருங்குற்றம்.

ஐந்தாண்டு திட்டம் என்ற பெயரில் நாட்டில் வறுமையையும், வேலையின்மையையும் வளர்த்துவிட்டது காங்கிரசாரின் குற்றம் தானே. முந்த்ரா ஊழல் துவங்கி இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல், இஸ்ரோ ஊழல் வரை வளர்த்துவிட்டு, ஊழல் கரையான் தேசத்தை அரித்து தின்பதற்கு காரணமாக இருப்பது காங்கிரசாரின் குற்றம்தானே!

அந்நிய நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப் புப் பணத்தை கண்டுபிடித்து தேசத்திற்கு கொண்டு வர வக்கின்றி, அந்த கறுப்புப் பண பேர்வழிகளின் பெயர்களை கூட வெளியில் சொல்லமாட்டோம் என்று சாதிப்பது குற்ற மில்லையா?

60 ஆண்டு காலமாக தேர்தல் நடை பெறுவது காங்கிரசாரின் பெருந்தன்மை யால் அல்ல. இந்திய அரசியல் சாசனத்தின் வலிமையான அடிப்படை கட்டமைப்பால் தான்.

இவ்வளவு வித்தாரம் பேசும் பீட்டர் அல்போன்சுக்கு ஒரு எளிய கேள்வி. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் நடத்தி, ஜன நாயக முறைப்படி தேர்வு செய்ய உங்களால் முடியுமா? பேச்சுவார்த்தைக் குழுவில் பெய ரில்லை என்பதற்காகவே சத்தியமூர்த்தி பவனில் ஒரு கோஷ்டி உண்ணாவிரதம் இருப்பதுதான் காங்கிரசின் லட்சணம். இந்த நிலையில் இவருக்கு வாய் காதுவரை ஏன் நீள் கிறது?

- மதுரை சொக்கன்

கருத்துகள் இல்லை: