வியாழன், 13 அக்டோபர், 2011

வால் ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்!அமெரிக்காவின் நியூயார்க் நிதி மாவட்டத்தில் துவங்கிய பெரு நிறுவன ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகம் முழுவதும் 1,400 நகரங்களுக்குப் பரவியுள் ளது.

ஆக்குபய் டுகெதர் (http://www.occupytogether.org/) என்ற இணையதளத்தையும் போராட்டக்காரர்கள் துவக்கியுள்ளனர். அனைத்து இடங்களில் நடைபெறும் போராட்டங்களையும் ஒருங்கிணைக்க இந்தத் தளம் உதவும் என்று போராடி வரும் குழுக்கள் முடிவு செய்துள்ளன. அக்டோபர் மாதத்தில் இந்தப் போராட்டம் மற்றும் போராட்டத்திற்கு ஆதரவான இயக் கங்கள் 1,496 நகரங்களில் நடைபெறும் என்று திட்ட மிடப்பட்டுள்ளது. அமெ ரிக்க நகரங்களில் ஆர்ப் பாட்டக்காரர்களை வன் முறை மூலமே காவல்துறை யினர் எதிர்கொண்டுள் ளனர்.

டல்லாஸ், அட்லாண்டா, சியாட்டில் மற்றும் பாஸ்டன் ஆகிய நகரங்களில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங் களைக் கலைக்க காவல்துறை யினர் வன்முறையையே கை யாண்டிருக்கிறார்கள். பாஸ் டனில் 130 பேர் கைது செய் யப்பட்டனர். “எழுச்சி பெறு சிகாகோ கூட்டணி” சார்பில் சிகாகோ நகர வீதிகளில் பெருந்திரள் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தப் பேரணி யை சீர்குலைக்கும் நோக்கத் தில் 27 பேர் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகில் முகாம டித்திருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்கள் மேலும் நான்கு மாதங்கள் அங்கேயே இருந்து போராட்டத்தைத் தொட ரப் போவதாக அறிவித்தி ருக்கிறார்கள். வால் ஸ்டி ரீட்டை மையமாகக் கொண்டே கொள்கைகளை வகுத்து வருவதே பொருளாதார நெருக்கடி, வறுமை, பொரு ளாதார ஏற்றத்தாழ்வு மற் றும் உயர் மட்டத்தில் ஊழல் ஆகியவை ஏற்பட்டு வரு கின்றன என்று அமெரிக்க மக்கள் கருதுவதே போராட் டத்திற்கு ஆதரவு பெருகி யுள்ளதற்குக் காரணமாகும்.

ஆர்ப்பாட்டம் செய்து வரும் மக்கள், ஆப்கானிஸ் தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக் கையையும் முன்வைத்திருக் கிறார்கள். ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான ஆய் வொன்றில், அமெரிக்கக் குடும்பத்தினரின் சராசரி வருமானம் மேலும் சரிந் துள்ளது என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது. தங்கள் போராட்டம் நியாயமா னது தான் என்பதை இந்த ஆய்வு காட்டுவதாக போராட் டக்குழுவினர் சுட்டிக் காட் டுகிறார்கள்.


ஐரோப்பாவிலும் தாக்கம்

அமெரிக்காவில் நடை பெற்று வரும் முதலாளித் துவ எதிர்ப்புப் போராட் டம் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடு களிலும் தாக்கத்தை ஏற் படுத்தியுள்ளது. விரல் விட்டு எண்ணக்கூடிய அள வில் இருக்கும் பெரும் பணக் காரர்களுக்காக பெரும் பான்மை மக்களின் நலன் களைக் காற்றில் பறக்க விடு வதை அனுமதிக்க முடி யாது என்று அந்த நாடுகளி லும் மக்கள் போர்க்குரல் எழுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: