வெள்ளி, 21 அக்டோபர், 2011

எதிர்காலம் சோசலிசத்திற்கே!சர்வதேசக் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 13வது மாநாடு 2011 டிசம்பர் 9 - 11 தேதி களில் கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென் சில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிர லையும் வரைவு அறிக்கையையும் தயாரிப்பதற்கான முன்தயாரிப்புக் குழுவின் கூட்டம் அக்டோபர் 22, 23 தேதிகளில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் சர்வ தேசத்துறைச் செயலாளருமான சீத்தாராம் யெச்சூரி எம்.பி. பங்கேற் கிறார். இக்கூட்டத்தில், மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித் துள்ள புதிய கட்சிகள் தொடர்பாக இறுதி முடிவும் எடுக்கப்பட்டு, இத னைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பேரவைக் கூட்டத்தில் பரிசீல னைக்கு வைக்கப்படும்.

ஏதென்ஸ் நகரில் நடைபெற வுள்ள சர்வதேசக் கம்யூனிஸ்ட் மற் றும் தொழிலாளர் கட்சிகளின் 13வது மாநாட்டின் கருப்பொருள் ‘‘எதிர் காலம் சோஷலிசத்திற்கே!” என் றாகும்.
சோவியத் யூனியன் பின்னடை வுக்குப் பின்னர் கடந்த இருபதாண்டு களில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏற் பட்ட அனுபவம் மற்றும் சர்வதேச நிலைமை, முதலாளித்துவ நெருக் கடி, ஏகாதிபத்திய யுத்தங்கள், தொழி லாளர் வர்க்கத்தின் உரிமைகளுக் கான போராட்டங்கள், தொழிலா ளர் வர்க்க சர்வதேசியத்தை வலுப் படுத்துதல், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை கட்டுதல், முதலாளித் துவத்தைத் தூக்கி எறிந்து, சோசலி சத்தைக் கட்டுதல் ஆகியவை குறித்து மாநாடு விவாதிக்கிறது.

சர்வதேசக் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு இந்தியாவின் தலைநகர் தில் லியில் நடைபெற்றது என்பதும் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட் சியும் இணைந்து நடத்தின என் பதும் நினைவுகூரத்தக்கது.

அந்த மாநாட்டில், இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. மேலும் தற்போதுள்ள சமூக அமைப்பினை மாற்றுவதை உத்தரவாதப்படுத்துவதன் மூலமே இவ்வாறு தொடர்ந்து வரக்கூடிய நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் என்று அம்மாநாடு முடிவுக்கு வந் தது.

மேலும் உலகப் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் உழைக்கும் மக்களின் தோள்களில் ஏற்றப்பட்டு வருவதற்கு எதிராக உலக அளவில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் அதனை சோசலிசத் திற்கான அரசியல் போராட் டத்துடன் இணைப்பதற்கும் அம் மாநாட்டில் அறைகூவல் விடுக்கப் பட்டது.

இந்தப் பின்னணியில் கிரீசில் 13வது மாநாடு நடக்கிறது. தற்போது கிரீஸ் நாட்டில் ஆட்சி புரியும் சமூக ஜனநாயகக்கட்சி அரசாங்கம், சர்வ தேச நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக் கிணங்க தொழிலாளர்களின் வயிற் றில் அடிக்கும் விதத்திலான ‘‘சிக்கன’’ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக் கிறது. இதற்கு எதிராக கிரீஸ் நாட்டின் தொழிலாளர் வர்க்கம் உக்கிரமான போராட்டங்களை நடத்தி வரு கின்றது.

இந்த நிலையில் சர்வதேச கம் யூனிஸ்ட்- தொழிலாளர் கட்சிகள் மாநாடு அங்கே நடைபெறுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் உலகம் முழுவதும் பல நாடு களிலும் நடைபெற்று வரும் போராட்டங்களின் அனுபவங் களும், குறிப்பாக மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் நடை பெற்று வரும் போராட்டங்களின் அனுபவங்களும், நடைபெறவுள்ள மாநாட்டில் பரிமாறிக்கொள் ளப்பட இருக்கின்றன.

தற்போது பெய்ரூட்டில் நடை பெறவுள்ள முன்தயாரிப்புக் குழுவி னரின் கூட்டத்தில், வரைவு அறிக் கையை இறுதிப்படுத்துவதோடு, வரவிருக்கும் காலங்களில் உலகம் முழுதும் வளர்ந்து வரும் வருமான சமத்துவமின்மை, வறுமை, பசி, பஞ்சம், பட்டினி, சுரண்டல் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றிக்கு எதி ரான போராட்டங்களுக்கான வடி வங்களைத் தீர்மானித்திடவும் முடிவு செய்யும். இத்தகைய போராட்டங் கள், சோசலிசம் ஒன்றே மாற்று என்று உத்தரவாதப்படுத்தக்கூடிய வகையில், மனித குலத்தை அடி மைத்தளையிலிருந்து விடுதலை செய்திடும் அடித்தளத்தை உருவாக் கும் என்று கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் கருது கின்றன. (ஐஎன்என்)


கருத்துகள் இல்லை: