
சமீபத்தில் சிவகாசியில் நடந்து வரும் குழந்தை உழைப்பு மற்றும் தொடர் விபத்துகள் குறித்து ஆய்வு செய்த ஒரு தன்னார்வக் குழு தந்துள்ள அறிக்கை அதிர்ச்சியை உருவாக்குகிறது. உதார ணமாக ஸ்ரீகிருஷ்ணா ஃபயர் வொர்க்ஸ் நிர்வாகம் விபத்து ஏற்பட்டு 6 மாதங்களுக்குள்ளேயே உற்பத்தியை மீண்டும் துவங்கிவிட்டது. பெரும் பாலான பணிகள் காண்ட்ராக்ட் முறையிலேயே நடக்கிறது. அப்படியானால், ஆட்சியாளரின் நட வடிக்கை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பது புரியும்.
இங்கு நடக்கும் விபத்துகளைப் பற்றி சொல்லுகிறபோது கவனக்குறைவும் ‘செல்பேசி’ கலாச் சாரமும்தான் பாதி விபத்துக்குக் காரணம் என பொத் தாம் பொதுவாகக் கூறுகின்றனர். அதேசமயம் ஆபத் தான வெடி மருந்துகளை கையாள்கிற இவர் களுக்கு அதற்கேற்ற முறையான பயிற்சி அளிக் கப்பட்டதா? முறையான பயிற்சிப் பெற்றவர் களால் இப்பணி கண்காணிக்கப்படுகிறதா? ‘இல்லை’ என்பது அல்லவா உண்மை! வாழ்க் கை நிர்ப்பந்தத்தால் 8 மணி நேரத்திற்கு மேலும் உழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இயல்பான உடல் அசதி கவனமின்மையை தோற்றுவிக்கிறதா? பள்ளி நேரத்திற்குப் பிறகும் பணியாற்ற நிர்ப்பந்திப்பதால் குழந்தைகள் அயர்ந்துவிடுவது விபத்துக்குக் காரணம் இல்லையா? கடும் வறுமையும் வாழ்க்கைப் போராட்டமும் இவர்களை இந்த ஆபத்தான பணிக்கு துரத்துகிறதா? இப்படி நியாயமாக எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்றே பதில் சொல்ல வேண்டியுள்ளது.

நிலச் சீர்திருத்தத்தின் தோல்வி, பாசன வசதியின்மை, வேறுவகையான தொழில்களில் ஈடு பட உரிய ஆக்கமோ, ஊக்கமோ, உதவியோ இல் லாத சூழல் என இவ்வட்டார மக்களின் கையறு நிலையே இவர்களை இந்த ஆபத்தான தொழி லில் ஈடுபட வைக்கிறது. லாப வெறி கண்ணை மறைக்க, எல்லா விதமான சட்டங்களையும் பாதுகாப்புகளையும் மனிதநேயத்தையும் காலில் போட்டு மிதிக்கிற முதலாளிகளை தட்டிக்கேட் கவும் தயங்குகிற ஆட்சியே இங்கு மாறி மாறி நடப்பதால் விபத்துகள் தொடர் கதையாகிறது. கண்ணீர் வழிந்த வண்ணம் உள்ளது. தீபாவளி பட்டாசு வண்ணத்திலும் சத்தத்திலும் அது நிறைந்து இருக்கிறது.
2 கருத்துகள்:
"உனக்கு மகிழ்ச்சி தருவதெல்லாம் எனக்கும் மகிழ்ச்சியைத்தரும் என் சின்னஞ்சிறிய மகனே,ஆனாலும் வெடித்துச்சிதறும் வேட்டுக்களிலும்,சீறி ஒளிப்பிழம்பாகும் மத்தாப்புகளிலும் உன்னைப்போல் சில சிவகாசிச்சிறுசுகளின்,சிதைந்த கனவுகளும் சிறைப்பட்ட வாழ்வுமே தெரிவதனால்,வேட்டுக்களும் மத்தாப்புக்களும் வேண்டாம் மகனே"பேனா மனோகரன்.2000.
"உனக்கு மகிழ்ச்சி த்ருவனவெல்லாம் எனக்கும் மகிழ்ச்சியைத்தரும் என் சின்னஞ்சிறியமகனே,ஆனாலும் வெடித்துச்சிதரும் வேட்டுக்களிலும்,சீறி ஒளிப்பிழம்பாகும் மத்தப்புகளிலும் உன்னைப்போல் சில சிவகாசிச்சிருசுகளின் சிதைந்த கனவுகளும் சிறைப்பட்ட வாழ்வுமே தெரிவதனால் வேட்டுக்களும் மத்தாப்புக்களும் வேண்டாம் மகனே நீ சிரித்தாலே தீபாவளி"
கருத்துரையிடுக