வெள்ளி, 9 செப்டம்பர், 2011

ஏகாதிபத்தியத்தின் எண்ணெய் அரசியல்


அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் நுகர்வோருக்கான உலக எண்ணெய் வளப்பாதுகாப்பு அமைப்பாக அமெரிக்க ராணுவம் உருமாற்ற மடைந்து விட்டது.

இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளவர் யார் தெரியுமா-பேராசிரியர் மைக்கேல் கிளேர் என்ற ஒரு அமெரிக்கரே இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். உலக எண்ணெய் அரசிய லில் ஒரு நிபுணராக இவர் அறியப்படுகிறார்.

 பெட்ரோலிய எண்ணெய் வளம் நிரம்பிய பகுதி களை தனது ஆதிக்கத்துக்குள் வைத்திருப் பது என்ற ஒரு கொள்கையை அமெரிக்க அரசு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடித்து வருகிறது. 1973ம் ஆண்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், ஓபெக் என்ற அமைப்பை ஏற்படுத்தி எண்ணெய் விலையைத் தாங்களே நிர்ணயிப்போம் என்று அறிவித்தன. இதனால் ஏறிய தாறுமா றான விலையேற்றக்காலம் எண்ணெய் அதிர்ச்சிக்காலமாக அழைக்கப்படுகிறது. எண்ணெய் வளப்பிராந்தியம் எப்போதுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அமெரிக்கா அப்போதே வகுத்துவிட்டது. வேறு அந்நிய நாடு எதுவும் வளைகுடாப் பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முய லுமானால் அது அமெரிக்காவின் முக்கிய நலன்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குத லாகக் கருதப்படும். இதனை எதிர் கொள்வ தற்கு ராணுவபலத்தைப் பயன்படுத்தவும் அமெரிக்கா தயங்காது என்று அன்றைய அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்ட்டர் ஒரு கொள்கைப் பிரகடனத்தையே வெளியிட்டார். தனது மண்ணில் பெட்ரோலிய எண்ணெய் யை சுமந்திருக்கும் எந்தவொரு நாட்டிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ராணுவ பலத்தை பயன்படுத்தியோ, அவ்வாறின் றியோ குறுக்கிடும் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது. இராக்போர் தொடங்கி இன்றைய லிபிய யுத்தம் ஈறாக அனைத்து போர்களும் எண்ணெய் வளத்தை தனது கட் டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அமெரிக்கா வும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் நடத்தி யுள்ள யுத்தங்களே.

சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற சில நாடுகளின் பிற்போக்குத்தனமான மன் னராட்சிகளுக்கு முட்டுக்கொடுத்து, ராணுவ உதவி போன்றவற்றை வழங்குவதன் மூலம் அவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் அமெ ரிக்கா வைத்துள்ளது. ஆனால் எண்ணெய் வளத்தை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய எண்ணெய் கம்பெனிகளின் சூறையாடலுக்கு அனுமதிக்காத நாடுகளில் ஆட்சிமாற்றத் தைக்கொண்டுவருவதையே தனது லட்சிய மாகக்கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வரு கிறது. 1953ல் ஈரான் நாட்டு அதிபரான முகமது மொசாதே தனது நாட்டின் எண்ணெய்த் தொழி லை தேசியமயமாக்கினார் என்பதற்காக சிஐஏவினால் பின்னாலிருந்து இயக்கப்பட்ட அதிரடிப்புரட்சி மூலம் அகற்றப்பட்டார்.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண் ணெய் வளநாடான இராக்கில் நடந்தது என்ன என்பதை உலகம் அறியும். பேரழிவு ஆயுதங் களை இராக் குவித்துள்ளது என்ற அப்பட்ட மான பொய்யைப்பரப்பி சதாம் உசேனின் ஆட்சி அகற்றப்பட்டது. தனது எண்ணெய் வளத்தின் பலன்களை தனது நாட்டு மக்களே அனுபவிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததே அவர் இழைத்த குற்றம். அதற்காக இராக்கின் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான இராக்கியர் கள் கொல்லப்பட்டனர்; சதாம் உசேனின் ஆட்சி அகற்றப்பட்டது.

உலகின் இரண்டாவது எண்ணெய் வள நாடான ஈரானின் மீது கடுமையான வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. தனது மண் ணில் புதைந்து கிடக்கும் கச்சா எண்ணெய் யை வெளியே எடுத்து சுத்திகரிப்பதற்கான உதவிகளை மற்ற நாடுகளிலிருந்து பெற முடியாத நிலையில், இந்தியா போன்ற நாடு களிலிருந்து அது இறக்குமதி செய்ய வேண் டியநிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனது நாட்டின் எண்ணெய்த் தொழிலை மேம் படுத்துவதற்கு அதற்கு 20,000 கோடி டாலர் தேவைப்படுகிறது. வர்த்தகத் தடைகள் காரணமாக அதற்குத்தேவைப்படும் நிதி கிடைக்கவில்லை. ஈரான்/பாகிஸ்தான்/இந்தியா எரிவாயுக்குழாய்திட்டத்துக்கும் அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுள்ளது. அமெரிக்க நிர்ப்பந்தத்துக்கு பயந்து இந்திய அரசும் இந்த அநீதிக்குத் துணை போகிறது.

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடான் நாட்டின் தென்பகுதி எண்ணெய் வளம் நிரம்பிய பகுதியாகும். அமெரிக்கத் தலையீட்டின் விளைவாக இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தெற்கு சூடான் தனி நாடாகிவிட்டது. இங்கே இனி மேற்கத்திய எண்ணெய் கம்பெனிகள் புகுந்து விளையாட லாம்.

லிபியாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காகவே கடாபி அரசுக்கு எதிரான வர்த்தகத்தடைகளை அமெரிக்கா விதித்து வந்தது. 2004 ம் ஆண்டில் அமெரிக் காவுடன் சமரசம் செய்து கொள்வதற்காகவே மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்கள் லிபியா வில் காலூன்றுவதற்கு கடாபி அனுமதித்தார். ஆனால் 2006ம் ஆண்டு முதல் கடாபி வேறு விதமாகப் பேசத்தொடங்கியதை அமெரிக்கா கண்டது. அந்நிய எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோலியத் தொழிலில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வருகின்றன. இது லிபியா வுக்கே கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண் டும் என்று 2006-ம் ஆண்டில் கடாபி பேசி னார். அந்நியக் கம்பெனிகளில் மேலாளர் பதவி களில் லிபியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும் கடாபி பேசினார். எண் ணெய் உற்பத்தி செய்யும் அனைத்து நாடுக ளும் தங்களுடைய பெட்ரோலியத் தொழிலை தேசியமயமாக்கவேண்டும் என்று கடாபி பேசினார். இவ்வாறு எரிசக்தித் துறையில் தனது தேசிய நலன்களை பாதுகாக்கும் கொள் கையை கடாபி வலியுறுத்தி வருவதை அமெ ரிக்கத் தூதர்கள் தங்கள் அரசுக்கு தெரிவித்து வந்துள்ளதை விக்கி லீக்ஸ் இணையதளச் செய்திகள் அம்பலப்படுத்தியுள்ளன.

இந்நிலையில்தான் லிபியாவின் எண்ணெய் வளப்பகுதிகளில் கடாபிக்கு எதிரான கலகம் வளரத்தொடங்கியது. லிபிய மக்க ளைக் காப்பாற்றுவது என்ற பெயரில் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் விமானப்படை கள் லிபியா மீது குண்டுமழை பொழிந்தன. லிபிய கலகக்காரர்களுக்கு நிதி உதவியையும் ஆயுத உதவியையும் வழங்கி வந்தன. கடாபி யின் ஆட்சி அகற்றப்பட்டவுடன் மேற்கத்திய எண்ணெய் கம்பெனிகள் லிபியாவில் பாது காப்புடன் செயல்பட அனுமதிக்கப்படுவர் என்ற உறுதி மொழி கலகக்காரர்களால் வழங் கப்பட்டது. லிபியத் தலைநகரான திரிபோலி கலகக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்ட நிலையில், பிரான்ஸ் அதிபர் சர்கோசி போன்றோரின் பேச்சுக்கள் எண்ணெய் வளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக நேட்டோ படை தலையிட் டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளன.

தென் அமெரிக்காவின் எண்ணெய் வள நாடான வெனிசுலாவின் தேசபக்தரான சாவே ஸின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா 2002ம் ஆண்டில் மேற்கொண்ட முயற்சி விழிப்புணர்வுமிக்க வெனிசுலா மக்களால் முறியடிக்கப்பட்டது.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற் றும் அணுஆயுதப்பரவல் தடையைக் காரண மாகக் கூறி அமெரிக்கா நடத்திவரும் யுத்தங்கள் உலகின் எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கான ஏகாதிபத்திய அரசியல் என்பது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.
கி.இலக்குவன்

கருத்துகள் இல்லை: