திங்கள், 7 செப்டம்பர், 2009

சமச்சீர் கல்வி : போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

நீண்ட தாமதத்திற்கு பின் தயக்கத் தோடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை தமிழ கத்தில் படிப்படியாக நடைமுறைப்படுத்துவ தாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத் திலுள்ள நான்கு விதமான பள்ளிக்கல்வி வாரி யங்களை ஒன்றிணைத்து, ஒரே பொது பள்ளிக் கல்வி வாரியமாக மாற்று வது எனவும், வரும் கல்வியாண்டில் 1ம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பிற்கு ஒரே பொது பாடத்திட்டத்தை அறி முகப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்பிற்கு பின்னால், நீண்ட வீரம் மிகுந்த மாணவர் போராட்டம் இருக் கிறது. பத்தாண்டு காலமாக தமிழக பள்ளிக் கல்வியின் அவலத்தை அம்பலப்படுத்தி, ஏழை, எளியோருக்கு ஒருவித கல்வி, பணம் படைத்தோருக்கு ஒருவித கல்வி என்ற ஏற்றத்தாழ்வான பள்ளிக்கல்வி முறையின் சீர்கேட்டை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் தொடர் இயக்கம் நடத்தியது.Justify Full

1969க்கு முன் ஒரே பள்ளிக்கல்வி வாரி யம்தான் தமிழகத்தில் இருந்தது. மேட்டுக்குடி வீட்டு பிள்ளைகளும், கீழத்தெரு பிள்ளை களும் அரசுப் பள்ளிகளில்தான் படித்தார்கள். மெட்ரிக் பள்ளிகள் கொஞ்சம் கொஞ்ச மாக பெருகி, 1974ல் 34 ஆக இருந்த மெட்ரிக் பள்ளிகள், மத்திய அரசு புகுத்திய கல்விக் கொள்கை அறிமுகமான 1986க்குப் பிறகு மழைக்காளான்களாய் முளைக்கத் துவங்கி, இன்று தனி பள்ளிக்கல்வி வாரியத்துடன் சுமார் 4000 பள்ளிகளாக பெருகியுள்ளன. இவற்றிற்கென தனிபாடத்திட்டம், தனி புத்த கங்கள், தனியான தேர்வுமுறை, மதிப்பீட்டு முறை ஆகியன உள்ளன. சுமார் 25 லட்சம் மாணவர்கள் இப்பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

ஆனாலும் தமிழகத்தில் 70 சதவிகித மாணவர்கள், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களையே நம்பியுள்ளனர். அரசு பள்ளிகள், போதிய ஆசிரியர் இன்மை, அடிப்படை வசதி கள் இன்மை என தடுமாறுகின்றன. இதனால் கல்வி பெறும் அடிப்படை உரிமையை முறை யாக பெறமுடியாமல் மாணவர்கள் பாதிக்கப் படுகின்றனர். மாநில அரசு கல்விக்கென 30 சதவிகித நிதி பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டு மென்ற கோத்தாரி கமிஷனின் வேண்டு கோள், பரண்மேலிட்ட விளக்காக பயனற்றுக் கிடக்கிறது.

இவ்வாண்டு பொறியியல் மாணவர் சேர்க் கையில் வாய்ப்பு பெற்று கல்லூரி நுழைந் திட்ட மாணவர்களில் 35 சதவிகிதம் பேரே தமிழ்வழியில் பயின்றவர்கள் என்கிறது அரசின் புள்ளிவிபரம்.

உயர்கல்வி வியாபாரம் இதற்கொரு முக்கிய காரணமென்றாலும், மாணவர் சேர்க் கைக்கான போட்டி கடுமையாக உள்ள, மிக அதிக மதிப்பெண்கள் தேவைப்படும் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேருவோரில் 10 சதம் பேரே தமிழ்வழியில் பயின்றவர்கள் உள்ளனர். சமூகத்தின் உயர் வருமான பிரிவி னரே சேர இயலும் ரெசிடன்சியல் பள்ளி எனப்படும் தனியார் உண்டு, உறைவிடப் பள்ளி மாணவர்களே அதிக மதிப்பெண்கள் பெற்று, அக்கல்லூரிகளின் இடங்களை அப கரித்துக்கொள்கின்றனர். பள்ளிக்கல்வி சமச் சீரற்ற தன்மையில் உள்ளதே இதற்கு காரணம்.

அதே வேளையில் ஒருபுறம் உயர்கல்வி வாய்ப்புகளிலிருந்து ஏழை மாணவர்கள் துரத்தியடிக்கப்படுவதோடு, மறுபுறம் ஆங் கிலவழி மோகத்தைக் காட்டி தரமற்ற மெட்ரிக் பள்ளிகள் பல்கி பெருகிவருகின்றன. கல் நெஞ்சத்தாரின் கண்களையும் குளமாக்கிய கும்பகோண துயரமே அதற்கு உதாரணம். பெருகும் இப்பள்ளிகள் ஆண்டுக்கு ஐம்பது சத கட்டண உயர்வோடு, பெற்றோரை அலைக்கழிக்கின்றன.

இத்தகைய அவலத்தை போக்கிட, தமிழக பள்ளிக்கல்வி சமச்சீரான தன்மை யில் இருக்க வேண்டும். எனவே, சமச்சீர் பள்ளிக் கல்விமுறை தமிழகத்தில் நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை வைத்தது. அதோடு நில்லாமல் ஆட்சியாளர்களின் கவ னத்தை ஈர்க்கவும், மாணவர்களையும், மக் களையும் கோரிக்கையின் பின்னால் அணி திரட்டிடவும் அடுக்கடுக்கான போராட்டங் களை நடத்தியும் வந்துள்ளது.

2003 ஜனவரியில் திருச்சியில் நடை பெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் 19வது மாநில மாநாட்டின் போதே சமச்சீர் பள்ளிக் கல்வியை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. 2004 ஆகஸ்ட் 6 அன்று சமச்சீர் பள்ளிக்கல்விமுறை கேட்டு மாநிலம் தழுவிய எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அதையொட்டி சென்னை பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் அப்போதைய மாநில தலை வர் ஜி. செல்வா தலைமையில் மனு கொடுக் கச் சென்ற எஸ்எப்ஐ தோழர்கள், காவல் துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மாணவிகள் என்று கூட பாராமல் தோழர்கள், வெண்மதி, சகிலா ஆகியோரை காவல்துறை யினர் ஷு கால்களால் வயிற்றில் மிதித்து காயப்படுத்தினர். தோழர் செல்வா உட்பட பலர் வாரக்கணக்கில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றனர்.

2006ல் முனைவர் முத்துக்குமரன் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழகம் முழு வதும் சென்று கருத்துக் கேட்ட போது, இந்திய மாணவர் சங்கம் தனது கருத்துக்களை வலுவாக எடுத்துரைத்தது. பல தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டும், தமிழக பள்ளிக் கல்வி குறித்து ஆய்வும் செய்த அக்குழு தனது அறிக்கையை 2007 ஜுன் மாதம் அரசி டம் ஒப்படைத்தது. அவ்வறிக்கை 2007 அக் டோபர் 17 அன்று சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

தமிழக அரசு, முனைவர்.முத்துக்குமரன் குழு அறிக்கையை கிடப்பில் போட்டது. ஏற்கனவே ஓராண்டு காலம் விரிவாக ஆய்வு நடத்தி, தயாரிக்கப்பட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்ய இரு தனி குழுக்களை அமைத் தது. சமச்சீர் பள்ளிக்கல்வியை நடைமுறைப் படுத்திட காலவரையறையையும் அறிவித்திட மறுத்தது.

மாணவர் சங்கத்தின் தொடர்போராட்டங் களை தொடர்ந்தே, பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கைக்கு முன்தினம் ஜுலை 14ல் சட்டமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. பேரணி மீது காவல்துறை கடும் தாக்குதலை ஏவிவிட்டது. மாணவர் சங்க அகில இந்திய இணைச்செயலாளர் செல்வா, மாநிலத்தலைவர் ரெஜிஸ்குமார் உட்பட 19 மாணவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்தைக் கண்டித்து சட்டமன்றத் தில் பேசிய அனைத்துக் கட்சிகளும் சமச்சீர் பள்ளிக்கல்விமுறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தின. கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள், ஊடகங்கள் என சமச்சீர்பள் ளிக்கல்வி கேட்டு குரல்கள் அலை அலை யாய் எழுந்தன. நாளும் எழும் நிர்பந்தத்தால் சமச்சீர் பள்ளிக்கல்விமுறையை படிப்படி யாக நடைமுறைப்படுத்தப் போவதாக அரசு அறிவித்துள்ளது.

ஆனாலும் சமச்சீர் பள்ளிக்கல்வி முறை யை முழுமையாய் நடைமுறைப்படுத்தும் வரை ஓயாத போராட்டம் தேவைப்படுகிறது. வாரியங்களை ஒன்றிணைப்பதும், பாடத்திட் டங்களை ஒன்றிணைத்து பொதுபாடத்திட் டமாக மாற்றுவதால் மட்டும் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்துவிடாது. அதற்கு தமிழக அரசு மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. முனைவர் முத்துக்குமரன் குழுவின் இதர பரிந்துரைகளையும் நடை முறைப்படுத்த தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும். குழுவின் பரிந் துரைகளில் முக்கியமானவைகளான:-

* பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப் பட்ட பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கல்வி சட்டங்களை ஒன்றிணைத்து தற்கால சூழலுக்கு ஏற்றாற்போல ‘தமிழ்நாடு கல்வி சட்டம்’ கொண்டு வர வேண்டும்.

* கோத்தாரி குழுவின் பரிந்துரையான ஆசிரியர்-மாணவர் விகிதம் 1 : 30க்கு மேல் போகக்கூடாது என்பதையும் நடைமுறைப் படுத்த வேண்டும்.

* மழலையர் கல்வி பொறுப்பையும் அரசே ஏற்றுக்கொண்டு, அனைத்து பள்ளிக ளிலும் மூன்று வயது நிரம்பிய குழந்தை கள் அனைவருக்கும் மழலையர் பிரிவு தொடங்க வேண்டும்.

* ஒரு தொழில்நுட்பக் கல்வி கற்க தேவை யான அறிவை பெறும் வகையில் பாடத் திட்டம் அமைய வேண்டும். மேலும் சமு தாய எதார்த்தத்தையும், இயற்கை சூழ லையும் முழுமையாக புரிந்து கொள்ளும் வகையில், பாடங்கள் உருவாக்கப்பட்டு கற்பிக்கப்பட வேண்டும்.

* பாடநூல்கள் தவிர விரிவாக எழுதப் பட்ட வழிகாட்டி நூல்கள், துணை நூல்கள் பயிற்சி புத்தகங்கள், அகராதிகள் போன்ற வற்றை அரசு வெளியிட வேண்டும்.

* தற்போதுள்ள , மனப்பாடத் திறனை மட்டும் சோதிக்கும் தேர்வுமுறைக்கு மாற்றாக மாணவர்களின் முழுத்திறனையும் சோதிக்கும் தேர்வுமுறை உருவாக்கப்பட வேண்டும்.

சமச்சீர் பள்ளிக்கல்வி முறை நடை முறைப்படுத்தப்படும் போது, அவ்வப்போது கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகளின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.

கே.எஸ்.கனகராஜ்

கட்டுரையாளர் இந்திய மாணவர் சங்க மாநிலச்செயலாளர்.

கருத்துகள் இல்லை: