புதன், 2 பிப்ரவரி, 2011

செருப்பில் சேகுவேரா படம் : செருப்பை எரித்து DYFI போராட்டம்







உலக உழைப்பாளி மக்களின் விடிவெள்ளியான புரட்சியாளர் சேகுவேரா வின் உருவத்தை காலணி யில் பொறித்து வெளியிட்டு இருப்பதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காலணி களை தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடைபெற் றது.

சேகுவேராவின் உரு வத்தை காலணியில் பொறித்து, இழிவுப்படுத்தும் நோக்கத் துடன் வெளியிட்டுள்ளதை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். சேகுவேராவின் உருவபடத்தை காலணியில் பொறித்து வெளியிட்டுள்ள நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற் றது.

காமாராஜர் சிலை எதிரே நடந்த, இந்த தீயிட்டு கொளுத்தும் போராட்டத்திற்கு டிஒய்எப்ஐ புதுவை பிரதேசத் தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். பிரதேச பொருளாளர் பிரபு ராஜ், நகரத்தலைவர் சரவ ணன், எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து, இளை ஞர் பெருமன்றத்தின் மாநி லத் தலைவர் அன்துவான், செயலாளர் செல்வம், கீர்த்தி வர்மன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

திரளான வாலிபர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு காலணிகளை எரித்தனர். மேலும் புதுச் சேரியில் சேகுவேரா உருவம் பொறித்த காலணிகளை அவர்களின் கோரிக்கையை ஏற்று புதுவை அரசு தடை விதித்து உள்ளது


கருத்துகள் இல்லை: