சனி, 7 பிப்ரவரி, 2009

அரசியல் நரிகளிடம் சிக்கிய புதுச்சேரி மாநிலம்

புதுச்சேரியில் 1964க்குப் பிறகு முழுமையான சுதந்திரம் பெற்ற பிறகும் தனக்கென தனியாக கல்வித்திட்டத்தை தொடங்காமல் தமிழ்நாடு கல்வி முறையை பின்பற்றி வருவதோடு தனிக்கல்வி வாரியம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மிக குறைந்த மக்கள் தொகை, பரப்பளவு கொண்டதாக நமது ய+னியன் பிரதேசமாக இருப்பதால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கூடுதலாக இருந்தாலும் தெளிவான இலக்குகள் இல்லாததாலும் போதிய திட்டவரையறைகள் இல்லாத காரணத்தினாலும் ஒதுக்கப்படும் நிதியானது கல்வி வளர்ச்சிக்கும், தரத்திற்கும் உதவவில்லை. 

மேலும் பல்வேறு சலுகைகள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டும் வயது வந்த அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்க்க முடியாத நிலை தொடர்வதும் தரமான கல்வி வழங்கப்படாத காரணத்தினால் 85 % மாணவர்கள் பள்ளி கல்வியோடு தங்களது படிப்பை முடித்துவிட்டு உயர் கல்வியை தொடர முடியாத சூழ்நிலை நிலவுவதற்கான காரணங்கள்.

 புதுச்சேரி என்ற அழகான பிரதேசம் .புதுச்சேரி சுதந்திரத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத காங்கிரஸ் முதாலளிகளிடம் சிக்கி சீர் அழிந்து வருகிறது. அதற்கு பல்வேறு உதாரணங்களை கூறலாம். சமிபத்திய செய்தி

சென்ற ஆண்டு ஒதுக்கப்பட் நிதியில் 50 சதம் கூட இன்னும் செலவு 
செய்யப்படவில்லை,   ராஜீவ்காந்தியின் பெயரால் ஆரம்பிக்கப்ட்ட ரொட்டி, பால் வழங்கும் திட்டம் முடங்கும் நிலையில் உள்ளது. காமராஜர் பெயரில் தொடங்கப்பட்ட ஊயர்கல்வி உதவித்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.  இதற்கு இடையில் ஆள்மாற்ற நாடகம் நடத்தப்பட்டு ரங்கசாமி போய் இப்போது 5 முதல் அமைச்சர்கள் வைத்தியலிங்கம் தலைமையில் கூத்தடித்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ,

அரசு மேல் நிலைப்பள்ளியின் விரிவுரையாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறவில்லை. பிளஸ் ஒன் மாணவர் களுக்கு காலாண்டுத் தேர்வுக்கான பாடங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. இதுபோன்ற கெடுகெட்ட மக்கள் விரோ அரசு நடவடிக்கை  கண்டித்து இந்திய மானவர் சங்கம் கடுமையாக போராடி வருவதோடு கடுமையான அடக்குமுறைக்கும் உள்ளாகி வருகிறது.

எனவே, மாணவர்களின் தேர்ச்சியில் அக்கறைகாட்டாத கல்வித் துறையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

வெள்ளியன்று (பிப்.6) மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று சட்டமன்றம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்எப்ஐ பிரதேச கன்வீனர் கார்க்கி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆனந்து அரிவழகன், பாலா அனாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி எஸ்எப்ஐ முன்னாள் தலைவர்கள் பிரபு ராஜ், கதிர் ஆகியோர் பேசினார்கள்.

போராட்ட முடிவில் எஸ்எப்ஐ தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த முதல்வர் வி. வைத்தியலிங்கம்இ பிளஸ் ஒன் மாணவர்களுக்கு இது நாள் வரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டுமே இறுதி ஆண்டுதேர்வு நடத்த வேண்டும் என்ற எஸ்எப்ஐ-யின் கோரிக் கையை ஏற்பதாக உறுதி அளித்ததோடு பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறை தேர்வு குறித்து தமிழக பிளஸ் டூ தேர்வு வாரியத்தோடு பேசிய பின்னர் ஓரிரு தினங்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் முதல்வர் கூறினார்.

1 கருத்து:

baappu சொன்னது…

எஸ்.எஃப்.ஐ போராட்டம் வெற்றி: வாழ்த்துக்கள் புதுச்சேரி பிரதேச எஸ்.எஃப்.ஐ