வெள்ளி, 7 மார்ச், 2008

இந்திய வேளான்துறை ஏன் நெருக்கடியில் உள்ளது?

கொள்கை மாற்றமே இன்றைய தேவை
உணவு தானிய உற்பத்தியில் நாடு தன் னிறைவு பெறுவதற்கு ஜெகஜீவன்ராம் ஆற்றிய பங் களிப்பைப் பாராட்டிப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வேளாண் துறையில் நாடு எதிர்கொண்டு வரும் சவால்களை சந்திப்பதற்கு ஜெகஜீவன்ரா முக்கு இருந்ததைப்போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை இன்று தேவைப் படுகிறது என்று கூறினார்.பாபு ஜெகஜீவன்ராமின் நூறாவது பிறந்தநாள் விழாவில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

வேளாண்துறையில் நாடு இன்றையதினம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான அடிப் படைக்காரணம் கடந்த பத்தாண்டுகளாக நாட் டில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் தாராளமயக் கொள்கைகளே.
  • சந்தை சக்திகள் சுதந்திரமான முறையில் செயல்பட அனுமதிக்க வேண்டும்என்பது வலி யுறுத்தப்பட்டது.
  • சர்வதேச சந்தையில் விற்பனையாகக் கூடிய பணப்பயிர்களின் உற்பத்திக்குஊக்கமளிக்கப்பட் டது.
  • வேளாண்துறையில் பொது முதலீடு வெட் டப்பட்டது. உரமானியங்கள்வெட்டப்பட்டன.
  • பொதுத்துறை உரத்தொழிற்சாலைகள் மூடப்பட் டன.
  • உணவு தானியக் கொள்முதல் பெரும் அள வில் குறைக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்தது உணவு தானிய இறக்குமதிக்கு கதவுகள் திறந்துவிடப்பட்டன.
  • யூரியா போன்றவை கூடுதல் விலை கொடுத்து இறக்குமதி செய்யப்படும்நிலை உரு வாக்கப்பட்டது.
  • குறைந்த வட்டிவிகிதத்தில் விவ சாயக் கடன்கள் வழங்கப்படவேண்டும் என்றவிவ சாயிகளுக்கான தேசியக்குழுவின் பரிந்துரைகள்ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
  • அன்னிய விதைக் கம்பெனிகளின் வர்த்தகம் தடையின்றி அனுமதிக்கப்பட்டது.
இவை போன்ற கொள்கைகள் கார ணமாக உணவு தானியஉற்பத்தி குறைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் உணவு தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்யும் நிலையிலிருந்த இந்தியா இன்றுகோதுமை உள் ளிட்ட உணவுதானியங்களைக் கூடுதல் விலை கொடுத்துஇறக்குமதி செய்யவேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டது. 11வது ஐந்தாண்டுத்திட்டக் காலத்தில் உணவு தானிய உற்பத்தியை 2 கோடி டன் அளவுக்குஉயர்த்தவேண்டும் என்ற முடிவை நோக்கிய உருப்படியான முன்னேற்றம்எதுவு மில்லை. உணவு தானிய உற்பத்தி குறைந்து உணவுப்பாதுகாப்புக்குஅச்சுறுத்தல் ஏற்பட்டதற்கு இதுவே காரணம்.

பாபு ஜெகஜீவன் ராம் விவசாயஅமைச்சராக செயல்பட்ட விதம் குறித்து வேளாண் விஞ்ஞானிஎம்.எஸ்.சுவாமிநாதன் பின்வருமாறு எழுதி யுள்ளார்: (இந்துநாளிதழ்7-2-2008)1967-70ம் ஆண்டுகளில் அவர் உணவு மற்றும்விவசாயத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். முந்தைய விவசாயத்துறைஅமைச்சர் சி.சுப்பிரமணியம் புகுத்திய புதிய விவசாயத்துறை உத்திகள்எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை கூர்மையாக ஆய்வு செய்தார். உயர் விளைச் சலைத் தரக்கூடிய குட்டைரக கோதுமை மற்றும்நெற்பயிர்களை விவசாயிகள் பயன்படுத்துவதற்கு ஊக்கமளித்தார். இதுநிறைவேற்றப்படும் விதம் குறித்து மாதமொருமுறை தனக்கு அறிக்கைஅளிக்குமாறு எம்.எஸ்.சுவாமிநாதனை அவர் கேட்டுக்கொண்டார். அவர்நேரடியாக கவனம் செலுத்தியதன் விளைவாக ஏற்கெனவே ஒரு கோடியே 20 லட்சம் டன்னாக இருந்த கோதுமை உற்பத்திஒரு கோடியே 70 லட்சம்டன்னாக உயர்ந்தது.நாட்டில் கடுமையான வறட்சியும் உணவுப்பற்றாக்குறையும் நிலவிய 1974ம் ஆண்டில் ஜெகஜீவன்ராமை இந்திரா காந்திமீண்டும் உணவு அமைச்சராக்கினார்.புதிய விவசாயத் தொழில்நுட்பத்தையும்உயர் ரக விதைகளையும் அனைத்து விவசாயிகளும் பயன்படுத்த வேண்டும்என்று ஜெகஜீவன்ராம் விரும்பினார். சிறிய மற்றும் விளிம்பு நிலைவிவசாயிகளிடம் இவற்றை வாங்கிப்பயன்படுத்து வதற்கான சக்தியில்லைஎன்பதை உணர்ந்த அவர் நிலமற்ற விவசாயத்தொழிலாளர்கள் உள் ளிட்டஇப்பிரிவினர் விதைகள் மற்றும் இடு பொருள்களை வாங்குவதற்கு வகைசெய்யும் கடன் வசதித்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.விவசாயவிளைபொருட்களுக்கு கட்டுப்படி யாகும் விலை அளிக்கப்படவேண்டும்என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஒருமுறை உயர்ரக விளைச்சலைத்தரக்கூடிய சிவப்பு நிற கோதுமையின் விலையை குவிண்டாலுக்கு ரூ5 குறைவாக அளிக்க விவசாய விலைக்குழு பரிந்துரைத்தது.

ஜெகஜீவன்ராம் இதனைஏற்றுக்கொள் ளவில்லை. உயர்ரக கோதுமை விளைச்சல் முழு வதையும்கூடுதல்விலைக்கு உணவுக் கார்ப்ப ரேஷனே கொள்முதல் செய்யும் என்றஅறிவிப்பை வெளியிட்டார்.ஆக ஜெகஜீவன்ராம் அமைச்சராக இருந்த போதுஉணவுதானிய உற்பத்தி பெருகியதற்குக் காரணம் அவர் உலகமயக்கொள்கைகளைக் கடைப்பிடிக்காததும் களச்சூழலுக்கு ஏற்ற விவசா யிகள்நலன் சார்ந்த கொள்கைகளைக் கடைப்பிடித்ததேயாகும். எனவே இன்றையதினம் தேவைப்படுவது கொள்கை மாற்றங்களே. உலகமயக்கொள்கைகள் கைவிடப்படவேண்டும்.
விவசாயிகளுக்கான தேசியக்கமிஷனின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படுத்தப்படவேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று வார்த்தை ஜாலத்தில்ஈடுபடுவதால் பயனில்லை. அதனை செயலில் காட்டவேண்டியது இன்றையதேவை .

கருத்துகள் இல்லை: