செவ்வாய், 11 மார்ச், 2008

மதவெறியர்களால் நாடு சந்திக்கும் பின்னடைவுகள்

மகாத்மாவை கொன்றவர்களை நினைவில் வைப்போம்!
-எஸ். கண்ணன்
“மறந்து கொண்டே
இருப்பது
மக்களின் இயல்பு
நினைவூட்டிக் கொண்டே
இருப்பதுவரலாற்றாசிரியரின் கடமை”
உலகப் புகழ் பெற்ற இடதுசாரி வரலாற்று ஆசிரியர் எரிக் ஹாப்ஸ்வாம் சொன்னதை மக்கள் இயக்கங்கள் சிரமேற்கொண்டு செய்ய வேண்டி யுள்ளது. குஜராத் இனப்படுகொலை துவங்கி, கும்பகோணம் குழந்தைகள் சாவு வரை, மிகச் சாதாரண செய்தியாக வாசிக்கப்படுகிறது. இரண்டு மூன்று நாள்கள் உரையாடி வலியை குறைத்துக் கொள்வோராக பொது மக்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். ஜன-30 மீண்டும் மீண்டும் நினைக்கப்பட வேண்டிய நாள். மகாத்மா காந்தியின் நினைவு நாள் என்று சொல்லப் படு வதை விட, மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் கொல்லப்பட்ட நாள் என்பதை நினைத்துப் பார்ப்பதே சரியானது. பழி உணர்ச்சி யுடன் அல்ல, மீண்டும் கொடூரங்கள் நடந்து விடாமல் இருக்க. மகாத்மாவை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் கொலை செய்வதற்கு காரணமாக இருந் தது. அவர் கடைப்பிடித்த, பிரச்சாரம் செய்தமதச்சார்பின்மைகொள்கை ஆகும்.

மதச்சார் பின்மை என்ற வார்த்தை மதவெறி அமைப்பு களுக்கு எட்டிக்காயை விட கசப்பானதாக இன்றைக்கும் இருக்கிறது. “நம்முடைய கோழைத்தனத்தாலும், பயத் தாலும்தான் நாம் பிறரோடு மோதுகிறோம். நாம் நம்முடைய நிழலைக் கண்டு அஞ்சம் நிலைக்குத் தாழ்ந்து விட்டோமா? நம்முடைய மதத்தில் உண் மையான நம்பிக்கை வைத்திருந்தால் மற்ற மதத் தினர் நம் மதத்தை அழித்து விடுவார்கள் என்று அஞ்ச வேண்டியதில்லை!” என்று காந்தியடிகள் இந்து மதத்தின் சார்பில் கலவரத்தை தூண்டி யவர்களிடம் வலியுறுத்தி உள்ளார். இன்று வரை இந்துத்துவா அமைப்பினரின் பேச்சு காந்தி வருத் தப்பட்டதைப் போல்தான் இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்டு நடத்தப் பட்டுக் கொண்டிருக்கும், வெறியேற்றும் பிரச்சாரம் அது. சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதி ராக எல். கே. அத்வானியில் இருந்து கீழ்மட்டத் தலைவர்கள் அனைவரும் பேசுவது சமீபத்திய உதாரணம். 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒற்றுமை உணர்வு மேலோங்கி இருந்ததாலும், காந்தி, நேரு போன்றோர் உறுதியாக இருந்ததாலும் மேற்படி இஸ்லாமியர்கள் மீதான அவதூறு பிரச்சா ரம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு உடனடியாக கைகூடவில்லை. ஆனால் கடந்த 20 ஆண்டு களாக நடைபெறும் தேர்தலில் அவதூறு பிரச் சாரம் கைகொடுத்துள்ளது. விளைவு ஆய்வுக் கூடங்களை விரிவாக்கும் முயற்சியில் இறங்கி யுள்ளனர்.

குஜராத் மாநிலம் டங்ஸ் மாவட்டத்தில் கிருத்துவர்கள் மீதான தாக்குதலைத் தொடுத் தனர். அதே வடிவத்தை இப்போது ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில் அரங்கேற்றி, “ஒரிசா எங் களது அடுத்த ஆய்வுக்கூடம்என ஒப்புதல் வாக்கு மூலம் தந்துள்ளனர். ஒப்புதல் புதிதல்லசமீபத்தில் குஜராத் மாநில தேர்தல் பிரச்சா ரத்தின் போது, வழக்கறிஞர் சிராபு தீனை என் கௌண்டரில் கொல்லச் சொன்னது உண்மை, என்று நரேந்திர மோடி பகிரங்கமாக பொதுக் கூட்டகளில் பேசினார். 2007, அக்டோபர் இறுதி யில், தெஹல்கா வீடியோ பத்திரிக்கை, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. பா.., போன்ற இந்துத் துவா அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஒப்புதல் வாக்கு மூலத்தை பதிவு செய்து வெளியிட்டது. வெறி கலந்த மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தனர்.. திட்டமிட்டோம், அரசு அதிகாரத்தை, அதிகாரி களைப் பயன்படுத்தினோம், கொலை செய்தோம், பாலியல் கொடுமைகளை களிப்புடன் நடத்தி னோம்,” என பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். “நான் நாதுராம் விநாயக் கோட்ஸே பேசுகி றேன்என்ற நாடகத்தின் மூலம், காந்தியைக் கொன்றது நியாயமானதே, என்ற பிரச்சாரத்தை 1993, நவ-15 கோட்ஸேயின் நினைவு நாளில், திட்டமிட்டு செய்தனர். குஜராத் மாநில பாடப்புத் தகத்தில் காந்தி இந்து மதத்திற்கு எதிராக இருந் ததால், கோட்ஸே கொன்றார் என எழுதி வைத் துள்ளனர். கோபால் கோட்ஸே 1995ம் ஆண்டுடைம்ஸ் ஆப் இந்தியாபத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், நாது ராம் கோட்ஸே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்தவன், ஆர்.எஸ்.எஸ். இயக் கத்தினால் திட்டமிட்டு தான் காந்தி கொலை செய்யப்பட்டார் என கூறியுள்ளார். கோட்ஸேக்கும் எங்களுக்கும், சம்பந்த மில்லை என்று பசப்பு வார்த்தைகள் பேசி வந்த ஆர்.எஸ்.எஸ் திடீரென்று 1990க்குப்பின் திட்ட மிட்டு காந்தியின் கொலையை நியாயப்படுத்து வது எதனால்? காரணம் காந்தி கொல்லப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அப் போது தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்றுஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சார இயக்கம்என்று நீதி மன்றமே சொல்கிறது. எனவே ஆர்.எஸ்.எஸ்ற்கும், அதன் அமைப்பு களுக்கும் ஒப்புக்கொள்ளும் தைரியம் வந்து விட்டது. காந்தியைக் கொன்ற கொலைகாரர் களுக்கு தண்டனை வழங்கிய இடத்தில், காவிப் பல் காட்டி நீதி வழங்கும் நீதிபதிகளும் வந்து விட்டனர். ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்க வேண்டும் என்பதற்காக அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலிடம்அரசி யலைத் துறந்து வெறும் கலாச்சாரப் பணியை மட்டுமே செய்வோம்”, என அன்றைய ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் எழுதிக் கொடுத்தனர். ஆனால் அரசியல் இயக்கங்களில் மட்டுமல்லாமல், பல் வேறு அமைப்புகளிலும், நிர்வாகங்களிலும் பங் கேற்றனர்.

1961 முதல் 70க்குள் மிகப் பெரிய மதக் கலவரங்களை நடத்தினர். இதன் காரணமாக கட்சி சார்பற்ற ஒரு குழு, பாராளு மன்ற உறுப் பினராக இருந்த திருமதி. சுபத்ரா ஜோஷி தலை மையில் அமைக்கப்பட்டு விசாரணை மேற் கொள்ளப்பட்டது. அதில் ஆர்.எஸ்.எஸ்- சார்ந்த இளைஞர்கள் அனைவருமே, “ஆர்.எஸ்.எஸ். பலாத்கார பாசிச மதவெறி சங்கம் தான்என்று ஒப்புக் கொண்டனர். “சிறுபான்மை மதங்களை வெறுக்கவும், தூஷிக்கவும் கற்றுத் தருவதே, இவர்களுக்கான முதல் வேலை”, என குறிப்பிட்டனர். இப்படி தொடர்ந்து ஒப்புக் கொள்வதன் மூலம் அச்சத்தை நிலை நாட்ட முயற்சிக் கின்றனர்.காந்தி-காமராஜ்-இந்திரா1948 ஜன-30-ல் காந்தியை கொலை செய்த ஆர்.எஸ்.எஸ், தனது கொலை வெறியை நிறுத்திக் கொள்ளவில்லை. அன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், பசுவதைத் தடைச் சட்டம் கோரி ஆர்.எஸ்.எஸ்.இந்து சாமியார்கள் நடத்தப் போகும் ஆர்ப்பாட்டதைக் கண்டித்ததோடு, இந்த ஆர்ப் பாட்டத்தின் மூலம் இந்து பாசிச வாதிகளால் இந்திய அரசின் மதச்சார்பற்ற கொள்கைக்கே பங்கம் வந்து சேரும் என்பதை விவரித்து கண் டித்துள்ளார். இதற்காக 1966 நவம்பர் 7ம்தேதி, சூலாயுதம், வேலாயுதம், குண்டாந்தடி, கத்தி போன்ற ஆயுதங்களுடன், காமராஜரின் வீட்டை அடித்து தீ வைத்து கொளுத்தினர். காமராஜரின் இல்லத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அவரை பின்புற வாசல் வழியாக தப்பிச் செல்ல வைத்தனர். அதே 1966-ல் இந்திரா காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் துணை அமைப்புகள் வெளியிட்ட கருத்துக்கள் சகிக்க முடியாத கொடுமையாகும்.

ஒரு பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச் சியான விஷயம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் விதவையான இந்திரா காந்தி பிரத மராகி உள்ளது, இந்து கொள்கைக்கும், மரபுக்கும் இசைந்ததல்ல”, என்று ஆர்கனைசர் ஏட்டின் 03-06-1966, தேதிய இதழ் குறிப்பிடுகிறது.

33 சத இடஒதுக்கீடு குறித்து எப்போதாவது பேசுகிற ஜெயலலிதாவுக்கு இது புரிய, தெரியவில்லை.காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவரைக் கொன்றவர் முஸ்லீம் என்ற வதந்தி திட்ட மிட்டு பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து கலவரத் தீ நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும் சில நகரங்களில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். உடமை அழிப்பிற்கும் ஆளானார்கள். பின்னர் அரசு, வானொலி மூலம், “காந்தியாரை சுட்டுக் கொன்றது முஸ்லீம் அல்ல, இந்து பிராமணன் என்று தொடர்ந்து அறிவிப்பு செய்து கலவரத்தை அடங்கியுள்ளனர். பெரியார் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார். மதச்சார் பின்மையை பாதுகாக்கும் தமிழகத்தின் இத்த கைய பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டி யுள்ளது. ஹிட்லர் பாணி பிரச்சாரம்இந்தியாவில் சில இஸ்லாமியத் தீவிரவாதி கள் செய்கிற தவறைப் பயன்படுத்தி, மொத்த சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கிற செயலை, திட்டுமிட்டு இந்துத்துவா அமைப்புகள் செய்து வருகின்றன. தீவிரவாதத் தின் வேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும், என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. ஒரு நபரின் தீவிரவாதச் செயல், பல அப்பாவிகளின் சாவுக்கு துணை போகிறது. கோட்ஸே என்கிற இந்து மத தீவிரவாதி காந்தி யைக் கொன்றதற்கும், இஸ்லாமிய அடையாளம் கொண்ட தீவிரவாதி வைத்த வெடிகுண்டில் மனித உயிர்கள் பலியான சம்பவத்திற்கும் வித்தியாசம் இல்லை. இரண்டுமே மன்னிப்பை கடந்த குற்றம். இத்தகைய சம்பவங்களை இந்து மதவெறி அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ்-சும் தங்களுக்கு சாதக மாக்கிக் கொள்ள முனைகின்றன. எனவேமத வெறி கொண்ட எதேச்சதிகாரமான ஒரு பாசிச அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.” என்று காந்தி குறிப்பிட் டதை நினைவு கூர்வோம். மதவெறி மாய்ப்போம்! தீவிரவாதம் ஒழிப்போம்!

கருத்துகள் இல்லை: