வியாழன், 11 டிசம்பர், 2008

பாரதீய ஜனதா கட்சி இப்போது அம்பலமாகி நிற்கிறது

திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக ஆகிவிட்டது. சாமியார்கள் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் வெடி மருந்தையே தொட மாட்டார்கள், அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவே மாட்டார்கள். தேர்தல் காலத்தில் பாஜக மீது பழிசுமத்த காங்கிரஸ் கட்சி செய்யும் சூழ்ச்சி இது என்றார்கள்.இந்து பயங்கரவாதம் என்று சொல்லாதே என்கிறது. ஆனால் இஸ்லாம் பயங்கரவாதம் என்று மட்டும் சொல்லலாம் என்கிறது.
பயங்கரவாதியாக இருப்பவர் இந்துவாக இருக்க முடியாது என்று சொல்லுகிறது. நரி சைவம் பேசுகிறது. பாஜக, சிறுபான்மை இஸ்லாமியர்களை ஒட்டுமொத்தமாக பழித்தது. பல அபாண்டங்களை சுமத்தியது. “ராஜ துரோகிகள்!, நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள், இந்து மதத்தைப் பழிப்பவர்கள்” என்றெல்லாம் பழித்தது. ஆனால் இந்துத்துவா இப்போது ஆட்டம் கண்டு நிற்கிறது.பெண் சாமியார், ஆண் சாமியார், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. இவர்கள் விசாரணை என்ற பெயரால் போலீசாரால் சித்ரவதை செய்யப்படுவதாகக் கூப்பாடு போடுகிறார்கள். அப்படி நடந்தால் சட்டப்படி தவறுதான். ஆனால் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் குற்றம் செய்யாதவர்கள் ஆண்டு பலவாக சிறையில் சித்ரவதைக்கு ஆளாகி வாடு கிறார்களே, அவர்களைப் பற்றி அத்வானி வாய் திறந்தது உண்டா! ஒரிசாவில் கிறிஸ்தவ மாது கூட்டாக பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான போது அத்வானி வாய் திறந்ததுண்டா?
அத்வானிக்கு - வருங்கால பிரதமராக கனவு காணும் அத்வானிக்கு - இது ஒரு இந்துமத நாடல்ல என் பதாவது நினைவிருக்கிறதா?பொடா சட்டம் மீண்டும் வர வேண் டும், இதைவிட மேலும் கொடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும், அப்போதுதான் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்று கூச்சலிட்ட பாஜக இப்போதுள்ள சாதாரண கிரிமினல் சட்டங்களை வைத்தே இந்துத்துவா வாதிகளை விசாரித்தால் ஏன் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கூப்பாடு போடுகிறது.
இரண்டு பயங்கரவாதத்துக்கும் இரண்டு வித சட்டங்கள் வேண்டும்
என்கிறதா பாஜக? இது பாஜக போடும் இரட்டை வேடமல்லவா?

கருத்துகள் இல்லை: