ஞாயிறு, 14 டிசம்பர், 2008

காஸ்ட்ரோ என் கடவுள்

பொதுவுடைமையாளர்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை அவர்கள் என்றும் புண்படுத்தியது இல்லை.


எனவேதான் காஸ்ட்ரோ எனக்கு கடவுள் போன்றவர் என்று மாரடோனா கூறியதை யாரும் பெரிதுபடுத்தவில்லை. மாரடோனா ஒரு தீவிரமான கிறிஸ்தவர். மதப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்து மதப்பற்றுடன் வளர்க்கப்பட்டவர். மனிதனைப் படைத்தவன் இறைவன் என்று கிறிஸ்தவ வேதம் கூறு வதை அப்படியே ஏற்றுக்கொண்ட மாரடோனா, தன்னை மீண்டும் உயிர்ப்பித்து வாழவைத்த காஸ்ட் ரோவை கடவுள் என்று அழைத்தது தவறில்லை என்று கூறலாம்.


கால்பந்து வீரர்களுக்கு கால் என்பது உடலின் அங்கம் மட்டு மல்ல. விலை மதிக்க முடியாத அரிய சொத்தும் கூட. காலை அவர்கள் உயிரினும் மேலாக நேசிப்பவர்கள். எனவேதான் கியூபாவின் தவப்புதல்வனின் திருமுகத்தை, தன்னுடைய கடவுளின் அரிய முகத்தை மாரடோனா கால்களில் பச்சைகுத்திக் கொண்டுள்ளார் என்பது பலர் அறியாத செய்தியாகும். மற்றுமொரு தகவல் - அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்ஸில் நடைபெற்ற அமெரிக்க உச்சிமாநாட்டில் பங்கேற்க புஷ்வந்தார். தலைநகரில் நடைபெற்ற புஷ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மாரடோனா தலைமை ஏற்று நடத்தினார். ‘புஷ் ஒரு இடியட்’ என்று மாரடோனா வர்ணித்தார்.

கருத்துகள் இல்லை: