செவ்வாய், 30 டிசம்பர், 2008

இஸ்ரேலின் தாக்குதலும் அமெரிக்காவின் கபடவேடமும்

காசா பகுதிக்குள் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் மாண்டுள்ளனர். சுமார் 800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இத்துடன் இஸ்ரேல் நிற்கவில்லை. இஸ்ரேல், காசா எல்லையில் டாங்குகளைக் குவித்து வருவதால் தரைவழிதாக்குதல் உருவாகும் அபாயம் உள்ளது.

பாலஸ்தீனியர்களை அழிப்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டு இஸ்ரேல் செயல்படுகிறதென்று கூறுவதே சரியானதாக இருக்கும். இப்பகுதியில் பொருளாதாரத் தடைகளை விதித்து ஆயிரக்கணக்கானவர்களை பட்டினியால் கொல்ல முயல்கிறது என்று .நா. கண் காணிப்புக்குழு குற்றம் சாட்டியுள்ளதை இங்கு நினைவு கூருவது நலம்.

காசா பகுதியில் வாழும் மக்களுக்கு அனுப்பப்படும் உணவு உள்ளிட்ட உதவி பொருட் களை அங்கு கொண்டு செல்ல இஸ்ரேல் அனு மதிக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு பகுதி .நா. தூதர் ராபர்ட் ஷெர்ரி கூறியுள்ளார். காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலால் துன்புறும் ஏழை மக்கள் பலர் எகிப்துக்குள் நுழைய முயன் றனர். வறுமையால் உழலும் மக்கள் இஸ் ரேலின் பயங்கரவாதத்துக்கு பலியாகின்றனர்.

காசாவில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டுமென்று .நா.பாதுகாப்புக்குழு கூறி யுள்ளது. .நா. பொதுச் செயலாளரும் இதை வலியுறுத்தியுள்ளார். பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பிய யூனியனும், சீனா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளும், லத்தீன் அமெரிக்க நாடுகளும் தங்களது கண்டனக் குரலை எழுப்பியுள்ளன.

ஹமாஸ்தான் போருக்கு காரணம் என்று பழியை ஹமாஸ் மீது போடுவதுடன் அமெரிக்கா நிறுத்திக் கொண்டுவிட்டது. அதன் எடுபிடி நாடுகள் என்ன தவறு செய்தாலும் அவர்களை விட்டுக் கொடுக்காதநல்லகுணம்அமெரிக் காவிடம் உண்டு. அந்த நல்லெண்ணத்தில் இஸ்ரேலைக் கண்டிக்க அமெரிக்கா முன்வர வில்லை.

இந்திய அரசும் இஸ்ரேலின் போர் நட வடிக்கைகளை இதுவரை கண்டிக்கவில்லை. அமெரிக்காவின் இளைய கூட்டாளியாக மாறவிரும்பும் இந்தியா அதன் கண்ணசைவை எதிர்நோக்கி உள்ளது. ஆளுங்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்த பின் அரசு கண்டனம் தெரிவிக்க தயங்குவதின் காரணம் வெளிப்படையான விஷயம்.

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று முழங்கிவரும் அமெரிக்கா, அரசு பயங்கரவாதத்தை நடத்தும் இஸ்ரேலைத் தட்டிக்கேட்காமல் அதற்கு துணை நிற்பது அதன் கபடவேடத்தை அம்பலப்படுத்துகிறது.

பாலஸ்தீனத்திலும், காசாவிலும் இஸ்ரேல் எடுத்து வரும் ராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மனிதநேயத்துக்கும் அமைதிக்கும் எதிரான நடவடிக்கைகள். இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும். வறுமையில் உழலும் காசாவுக்கு அனுப்பப்படும் மனிதநேய உதவிகளுக்கு தடைவிதிக்கக்கூடாது. ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன அமைப்புகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூகமான தீர்வினை எட்டவேண்டும். இது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடு களும் இஸ்ரேலை நிர்ப்பந்திக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: