திங்கள், 29 டிசம்பர், 2008

“சமூகப்பாதுகாப்புடன் வேலை” இளைஞர்கள் எழுச்சி முழக்கம்

இந்திய ஆட்சியாளர்களும், தமிழக ஆட்சியாளர்களும் தமது ஆட்சிக் குடையின் கீழ் வேலையின்மை என்ற கொடுமை இருப்பதாக ஒரு போதும் ஒத்துக் கொள்வ தில்லை. வாரம் ஒரு முறை பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதும், அது பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் என்பதும், பத்திரிகையில் தமிழ் நாட்டு முதல்வர் வெளியிடும் செய்தி. தகவல் தொழில் நுட்ப கொள்கை என்ற பெய ரிலும், தமிழக தொழில் கொள்கை என்ற பெயரிலும், தமிழகத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மாநில முதல் வர் அறிவிப்பு வெளியிட்டார். அறிவிப்பு வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பின்ன ரும், பயன்பெற்றவர்களை கண்டறிய இயல வில்லை. ஏனென்றால் இவை அனைத்தும் ஒப்பந்தங்கள் அவ்வளவுதான். வேலையின் மை என்பதை வரையறை செய்கிற போது, முழுக்க முழுக்க எந்த வேலையும் செய்யா தவர்களே, வேலையற்றவர், என்று அரசு குறிப்பிடுகிறது. இந்த வரையறையின்படி பிச்சை எடுப்பவர், சாலையில் படம் வரைந்து வைத்து அதன் மீது விழும் பைசாவை எடுத்துக் கொள்பவர் ஆகியோரும் வேலையில் இருப்பவர்களாக கருதப்படுகின்றனர். சி.டி. குரியன் என்ற பொருளாதார அறிஞர், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேலை செய்து, ஒரு வேளை உண்டு, வாழ்க்கை நடத்துபவர் களையும், வேலையில் இருக்கிறார் என்று அரசு கணக்கெடுப்பு செய்திருக்கிறது என வருத்தத்தோடு குறிப்பிட்டார். அரைவயிறு உணவோடு, தெருவில் பிழைப்பு நடத்தும் மக் களை இரக்கமற்ற முறையில், இவர்களெல் லாம் வேலையில் இருக்கிறார்கள் என்ற அறி விப்பு மூலம் ஆட்சியாளர்கள் அகம் குளிர வாய்ப்பு இருக்கிறதேயொழிய, நாட்டின் கவுர வம் மதிக்கத்தக்கதாக இருக்காது.

முறைசாராத் தொழிலாளர்கள்

உலகிலேயே அதிகமான மக்கள் பிரி வினர் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டு இருப்பது ஆசியா கண்டம் என்றும் அதிலும் இந்தியாவில் தான் அதிகம் என்றும் ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.அதாவது இடம் பெயர்வோர், சொந்தத் தொழில் செய்வோர், கைத்தறி, விசைத்தறி ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடி, பெரும் தொழிற்கூடங்கள் வந்த தாலும், விவசாய வளர்ச்சி இல்லாததாலும் நிலத்தை இழந்தோர் போன்ற அனைவரும், தங்களின் வாழ்க்கைத் தேவைக்காகச் செய் யக்கூடிய அன்றாட வேலைகளே முறைசா ராத் தொழில் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நேரடி அரசு ஊழியர்கள், சுரங்கம், ரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களில் வேலை செய்வோரை விட, முறைசாராத் தொழில்களில் இருப்போரின் எண்ணிக்கையே பல மடங்கு அதிகம்.

உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்திற்குப் பின், அரசுத் துறை மற்றும் தனியாரிடம் இருக்கும் அடிப் படை உற்பத்தித் துறைகளில் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்ட காரணத்தினால், ஆட் குறைப்பு செய்யப்பட்டது. காலிப்பணியிடங் கள் நிரப்பப்படுவதில்லை. தேவைப்படும் நேரத்தில் ஒப்பந்த அடிப்படையில், வேலைக் கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இத்த கைய காண்ட்ராக்ட் ஊழியர்களாகத் தான், பொறியியல் துறையில் டிப்ளமோ பட்டம் பெற் றவர்கள் வேலை பெற முடிகிறது. இது நிரந்தர மற்றதாக இருப்பதால், தொடர்ந்து வேலை தேடுவோராகவே இளைஞர்கள் உள்ளனர்.

பஞ்சாலைகள் நசிவைச் சந்தித்துப் பின் னர் மீண்டும் முன்னேற்றம் கண்ட போது, நிரந்தரத் தொழிலாளர்களுக்குப் பதிலாக, ஒப்பந்தத் தொழிலாளர்களே அதிகம் நிய மிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக இளம் பெண்கள், கூடுதலாகப் பணியில் அமர்த்தப் பட்டனர். சுமங்கலித் திட்டம், மாங்கல்யத் திட் டம், கேம்ப் கூலி உள்ளிட்ட பெயர்களில் பல ஆயிரம் எண்ணிக்கையிலான பெண்கள், 2 ஆண்டு அல்லது 3 ஆண்டு ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்பட்டனர். இத்தொழில் கூடங் களில் உணவு, தங்குமிடம் இல்லாமல் சம்பளம் பேசப்படுவதும், பின்னர் உணவுக் கும், தங்குமிடத்திற்கும் சம்பளத்தில் பிடித்துக் கொண்டு மீதியைக் கொடுப்பதும் வழக்க மாகிவிட்டது.

உலகமயமாக்கல் கொள்கையின் காரண மாக வளர்ச்சி பெற்ற தொழில்கள் கட்டுமா னம் (51 லட்சம் பேருக்கு வேலை), ஹோட்டல் மற்றும் நிதித்துறை உள்ளிட்ட சேவைத்துறை ஆகும். இவற்றில் கட்டுமானம், ஹோட்டல் போன்றவற்றில் படிக்காத, இடம்பெயர்ந்த மக்கள் வேலை பெற்று வந்தனர். படித்த இளைஞர்கள் நிதித்துறை சார்ந்த வங்கிக ளிலும், மொபைல் ஃபோன் சேவைகளிலும், வேலை பெற்றனர். அதேபோல் தகவல் தொழில்நுட்பத் திறன் காரணமாக மென் பொருள் நிபுணர்களாகவும், பிபிஓ மூலமான வேலைகளையும் பெற்று வந்தனர்.மேற்படி வேலைகளுக்கும், அரசுத் துறையில் பணி யாற்றுகிற வேலைகளுக்குமான வித்தியாசத் தை நம்மில் பலர் உணரவில்லை. பாதுகாப் பான வேலை என்பதில் அரசுத்துறை முத லிடத்தில் இருக்கிறது. அதில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யாமல், அப்ப டியே விட்டு வைப்பதும், தனியார் துறைகளில் நிரந்தரமற்ற வேலை வாய்ப்பைப் பெருக்குவ தும், முறை சாராத் தொழில்களில் இளைஞர் களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.

2001இல் இருந்து மத்திய அரசு ஆண்டு ஒன்றுக்கு 2 சதம் பேரை ஆட்குறைப்பு செய் யும் நடவடிக்கையை, மத்திய அரசு பணி களில் மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் அரசுத்துறையிலும், அதேபோல் ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. ரயில் வேயில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் இருந் ததாகவும் சில ஆயிரம் இடங்கள் மட்டுமே சமீபத்தில் பூர்த்தியானதாகவும் தகவல்கள் உள்ளன. வங்கித் துறையில் விருப்ப ஓய்வு அடிப்படையில் வெளியேறிய ஊழியர்களின் பணியிடங்கள் சுமார் ஒரு லட்சம் காலியாக உள்ளது. (ஆதாரம் 2005 பிஸினஸ் ஸ்டாண்டர்டு).

இந்திய நிதிச்சேவைகள், பி.பி..; கே.பி.. நிறுவனங்கள், ஜவுளி, ஆயத்த ஆடை ஏற் றுமதி, வாகனங்கள் துறை ஆகியவை பாதிக் கப்பட்டுள்ளன. ஜவுளி, ஆயத்த ஆடை துறைகளில் 7 லட்சம் வேலைகள் இந்தியா முழுவதும் பறிபோன தகவலை நவம்பர் 30-2008 நாணய விகடன் ஏடு பதிவு செய்திருக் கிறது. தகவல் தொழில்நுட்பத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பணிநியமனத்தை பல நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. கேம் பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்ட பலர் பணி நியமன உத்தரவுக்காக 8 மாதங் களாக காத்திருக்கின்றனர். 80 சதவீத வங் கிப் பணிகள் இந்தியாவில் பொதுத்துறை யாக இருப்பதால், இந்தத் துறை தப்பியது. ஆனால் சரிவு காரணமாக 21 சதமான பணி நியமனம் குறையும் என்றும், பணி நீக்கம் அதிகரிக்கும் என்றும், நவ. 2008 இந்தியா டுடே கூறுகிறது.

உலகமயமாக்கல் கொள்கையைத் தமிழக அரசும் தீவிரமாகப் பின்பற்றத் துவங்கிய கார ணத்தால், தமிழக உள்ளாட்சித்துறை துவக்கு வதாக அறிவித்த கிராம நூலகங்களுக்கு, ஓய்வு பெற்றவர்களை நியமிக்க அரசாணை எண் 177 பிறப்பிக்கப்பட்டது. தமிழக உயர் கல்வித்துறை, அரசுக் கல்லூரிகளில் உள்ள 3025 காலிப்பணியிடங்களை ஓய்வு பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு நிரப்பலாம் என அரசாணை எண் 274 (04.07.08) வெளி யிடப்பட்டது. மாநில அரசு அறிவித்த வேலை யில்லா கால நிவாரணம் வழங்குவதற்கு ஏற்ற வகையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள 250 காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி, மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மீது டிஒய்எப்ஐ வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநில அரசு துரிதமாகச் செயல்பட வேண்டும், என வழிகாட்டுதல் கொடுத்தது. 20.11.07 அன்று மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை டி.ஒய்.எப்.ஐக்கு, காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடிதம் எழுதியது. ஆனால் இதுவரை செயல் படவில்லை. இந்நிலையில் மாநில அரசு 2.5 லட்சம் காலிப்பணியிடங்களை அரசுத்துறை யில் பூர்த்தி செய்ததாக அறிக்கை வெளி யிட்டுள்ளது. இதற்கான எந்த பொதுத் தேர்வு களும் நடத்தப்படவில்லை. பகிரங்கமாக, என் னென்ன வழிகளில் பூர்த்தி செய்தோம் என் கிற வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயா ரில்லை.

ஒரு மனிதன் பிறப்பில் துவங்கி இறப்பு வரை உயிர் வாழ காற்று, நீர், உணவு, உடை, இருப்பிடம் ஆகிய ஐந்தும் தேவை. இதில் காற்றைத் தவிர (இப்போதைக்கு) மற்ற அனைத்தும் விலை பேசப்படுகிறது. ஒரு மனி தனால் 18 வயது முதல் 60 வரை உழைக்க முடியும். எஞ்சிய வாழ்நாளுக்கும் தேவை யானவற்றை இந்த சமூகம் உறுதி செய்ய வேண்டும். அதை சமூகம் தருகிற கல்வியி லும், சமூகப் பாதுகாப்புடனான வேலையிலும் தான் உறுதி செய்ய முடியும். இந்தியாவில் 15 சதமான மக்களுக்கே இத்தகைய வாழ்க் கை உறுதி செய்யப்பட்டுள்ளது. 85 சதமான பெரும்பான்மை மக்களுக்கு வாழ்க்கை உறுதியானதல்ல. எனவே சமூகப் பாதுகாப் புடனான வேலை என்ற கோரிக்கை, இந்தி யாவின், தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் கோரிக்கை.

மாற்று ஆலோசனைகளை தமிழக இளை ஞர்களின் உரிமைக்குரலாக குமரியிலிருந்து கோவையிலிருந்தும்,இராமேஸ்வரத்திலிருந்தும், தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் சைக்கிள் பிரச்சாரம் செய்து சென்னையை அடைகிறது இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் வெண்கொடிப்படை, டிசம்பர் 13ல் துவங்கி கடந்த 15 நாட்களாக நடைபெற்ற இந்த பிரம்மாண்ட சைக்கிள் பிரச்சார இயக் கம், தமிழக இளைஞர்களுக்கும் சமூக பாது காப்புடனான வேலையை உறுதிப்படுத்துவதற் கான போராட்டத்தை தீவிரப்படுத்தட்டும்!

எஸ்.கண்ணன்

கருத்துகள் இல்லை: