வெள்ளி, 26 டிசம்பர், 2008

சைக்கிள் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகி வாலிபர் சங்கத்தில் இணைந்தனர்

சமூக பாதுகாப்புடன் வேலைகோரி நடைபெற்று வரும் வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சாரப் பயணக் குழுகளுக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு திருச்சி யில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இருந்து விலகி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையிலான குழுவினருக்கு பெரம்பலூர் மாவட் டம் கள்ளகம் கேட், கீழப் பழுவூர், வி.கைகாட்டி, உடையார்பாளையம் ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. கீழப்பழுவூரில் தப் பாட்ட கலைஞர்களின் அதிரடியான முழக்கத்தால் வரவேற்பு நிகழ்ச்சி களை கட்டியது.

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில், மாநில நிர்வாகிகள் லெனின், பாலா, செந் தில், செல்வி, மாலதி, பாப்பா, சண்முகராஜா, சசிக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

வியாழனன்று ஜெயங் கொண்டத்தில் துவங்கி ஆண்டிமடம், விருத்தாச் சலம் வழியாக இக்குழுவி னர் நெய்வேலி வந்தடைந் தனர். வழியெங்கும் உற் சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

முன்னதாக, திருச்சி மாவட்டம் டோல்கேட் டில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் போது, இப் பிரச்சாரத்தால் ஈர்க்கப் பட்டு பாஜகவிலிருந்து 15 இளைஞர்கள் விலகி, முத்துக்குமார் தலைமை யில் வாலிபர் சங்கத்தில் இணைந்தனர். அவர்களை மாநிலச் செயலாளர் எஸ். கண்ணன் வரவேற்றார்.

மாநிலத் தலைவர் எஸ். ஜி.ரமேஷ்பாபு தலைமையி லான குழுவினர் திருவண் ணாமலை மாவட்டத்தில் மேல்செங்கம், செங்கம், திருவண்ணாமலை நகரம், போளூர், கருங்காலி குப் பம், பெரிய களம்பூர், ஆரணி ஆகிய இடங்களிலும், வேலூர் மாவட்டத் தில் ஆற்காடு, ராணிப் பேட்டை, வாலாஜா, காவிரிப்பாக் கம், ஓச்சேரி, நாகவேடு, அரக்கோணம், திருத்தணி ஆகிய இடங்களிலும் பிரச் சாரம் மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை நகரில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 200க் கும் மேற்பட்ட மாணவர் கள் பிரம்மாண்டமாக வெண்கொடியோடு அணி வகுத்து எழுச்சிமிகு வர வேற்பு அளித்தனர். போளூர் தாலுகாவில் 30 கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட 40க்கும் அதிகமான இளைஞர்கள் கொண்ட குழு, போளூரில் நடந்த நிகழ்ச்சியின்போது, பிரதான குழுவுடன் இணைந்து கொண்டது, கருங்காலிக் குப்பத்தில் 500க்கும் மேற்பட்டோர் எழுச்சி மிகு முழக்கங்களு டன் திரண்டு நின்று வர வேற்புஅளித்தனர். ஆரணி, காவிரிப்பாக்கம், திருத் தணி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் எஸ்.முத்துக்கண் ணன் உள்ளிட்ட நிர்வாகி கள் பேசினர்.

வெண்மணி தியாகி களுக்கு வீரவணக்கம்

முன்னதாக, ஓச்சேரியில் வியாழ னன்று காலை பிரச்சார துவக்கத்தின் போது, சைக்கிள் பிரச்சாரக் குழுவினர் வெண்மணி தியாகிகளை நினைவு கூர்ந்து எழுச்சிமிகு முழக்கமிட்டு பயணத்தை துவக் கினர். முன்னதாக ஆரணியில் பெரியார் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு ரமேஷ் பாபு மாலை அணிவித்தார்.

கடலூர்

மாநில துணைச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையிலான குழு, சிதம்பரம் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து, கடலூர் மாவ ட்டத்தில் பிரச்சாரம் மேற் கொண்டது. இதைத் தொடர்ந்து கடலூர் சென் றடைந்த இக்குழு, ரெங்க நாத குப்பம், கன்னிக் கோவில், கரிசலாங்குப்பம், மதகடிப்பட்டு, திருபுவனம் வழியாக வியாழனன்று இரவு புதுச்சேரியை அடைந்தது.

1 கருத்து:

மாதவராஜ் சொன்னது…

கார்க்கி விஜய்!

தேசப்பற்றும், தாகமும் கொண்ட உங்களைப் போன்றவர்களைப் பார்க்கும் போது மிகுந்த நம்பிக்கையளிக்கிறது.
வாலிபர் சங்கத்திற்கு என் வாழ்த்துக்கள்.