வெள்ளி, 26 டிசம்பர், 2008

வாக்குவங்கி அரசியலும் பாஜகவின் பசப்பலும்

வாக்கு வங்கி அரசியலுக்கு கட்சிகள்முழுக்கு போட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி யின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் உபதேசம் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயினு டைய பிறந்தநாள் விழாவில் தான் அவர் இதை முன்வைத்துள்ளார். பாஜகவினரால் தேசிய நலன் கோரிக்கைகள் என்று கூறப்படும் ஒவ் வொன்றிலுமே அவர்களுக்கே உரிய விஷமம் ஒன்று பூடகமாக வைக்கப்பட்டிருக்கும். அது சில சமயங்களில் வெளிப்படையாகவே இருக் கும். சில சமயங்களில் வெகு சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டதாக இருக்கும். 

பயங்கரவாத எதிர்ப்பு என்றால் அது இஸ்லா மியர்களை எதிர்ப்பதாகவே இருக்கும். தேசபக்தி என்பது அத்வானியை பிரதமராக ஏற்றுக் கொள் வது, மதச்சார்பின்மை என்பது இந்துத்துவ மேலா திக்கத்தை ஏற்றுக் கொள்வது, மனித நேயம் என்றால் சிறுபான்மையினத்தவரைக் கொன்று குவித்தவர்களுக்கு ஆதரவாக நிற்பது என்று அவர்கள் அர்த்தப்படுத்திக் கொள்ளும் அம்சங்க ளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ராஜ்நாத்சிங்கின் கோரிக்கையும் அத்தகைய பட்டியலில் இடம் பெறக்கூடிய ஒன்றுதான்.

விடுதலைப்போராட்ட காலத்தில் ஒரு துரும் பைக்கூட கிள்ளிப் போடாத ஆர்.எஸ்.எஸ்., விடு தலைக்குப்பின் தங்கள் கலவர நடவடிக்கை களுக்கு அரசியல் போர்வை தேவைப்பட்டதால், ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியை 1952ல் துவக்கியது. அதிதீவிரமான வலதுசாரிக் கொள் கைகளை முன்னிறுத்திய ஜனசங்கம், மதவெறி என்ற தனது கோர முகத்தை 1980களின் இறுதி யில் வெளிப்படுத்தத் துவங்கியது. இதற்கிடை யில் ஜனதாவுடன் இணைப்பு, பின்னர் விலகி பாஜக என்ற பெயரில் புதிய கட்சி, காந்திய சோச லிசக் கொள்கை, பின்னர் அதை நடைமுறைப் படுத்தாமலேயே தோல்வியடைந்து விட்டது என்று கூறி சுதேசிக்கொள்கை என்று பல அவதாரங்களை அக்கட்சி எடுத்திருந்தது.

இதில் எந்த அவதாரமும் வாக்கு வங்கியை உருவாக்கவில்லை என்பதால் அப்பாவி மக் களின் மத உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடிய விஷயங்கள் அரசியல் திட்டங்களாக மாற்றப்பட் டன. அயோத்தி, மதுரா, காசி என்று பாஜக பட்டிய லிட, சங் பரிவாரத்தின் இத்யாதிகள் இவை மட்டுமல்ல, இன்னும் நாடு முழுவதும் 1008 கோவில்கள் உள்ளன என்று ஓலமிட்டன. இவர்களின் இந்த மதவெறிக்கூச்சல் பாப்ரி மசூதி யைத் தகர்த்தது. இந்த வாக்கு வங்கி அரசியல் குஜராத் இனப்படுகொலைகளுக்கு இட்டுச் சென்றது. வட மாநிலங்களில் மத உணர்வு களைக் கிளப்பிவிட, தென் தமிழகத்தின் வளர்ச்சி க்குத் தேவையான சேது சமுத்திரத்திட் டத்தையே முடக்கிப் போட்டுள்ளனர்.

பெரும்பான்மை இந்துக்களின் மத உணர்வு களைத் தூண்டி விடும் வேலைகளோடு, அவ்வப் போது சிறுபான்மை மக்களுக்கு தூண்டில் போடும் வேலையும் நடைபெறும். அந்த வாக்கு வங்கி அரசியலையும் பாஜக வினர் விட்டுவைக் கவில்லை. கடந்த நாடாளு மன்றத் தேர்தலின் போது உத்தரப்பிரதேசத்தில் ஒரு லட்சம் உருது ஆசிரியர்களை நியமிப்போம் என்று வாஜ்பாய் வாக்குறுதி அளித்தார். அவர் போட்டியிட்ட லக்னோவில் கணிசமான அளவில் இஸ்லாமிய வாக்காளர்கள் இருந்ததே அதற்குக் காரணம். 

பாஜக வரலாற்றின் ஒவ்வொரு அத்தியாயமும் வாக்கு வங்கியைக் குறித்தே உள்ளது. இத்தகைய கட்சியினுடைய தேசியத்தலைவரின் கோரிக் கையில், சிறுபான்மையினர் நலன், தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி போன்றவை கைவிடப்பட வேண்டும் என்ற அம்சமே மறைமுகமாக அடங் கியுள்ளது.

கருத்துகள் இல்லை: