வியாழன், 1 ஜனவரி, 2009

சோசலிச கியூபா நீடுழி வாழ்க : ஜோதிபாசு


கியூப புரட்சியின் 50-ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் மக்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு இதயப்பூர்வமான வாழ்த் துக்களை தெரிவித்துள்ளார். 

கியூபா மக்களுக்கு அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு:-

கியூப புரட்சியின் 50-ம் ஆண்டு விழா துவங்கும் இந்த தருணத்தில் கியூப மக்க ளுக்கும், கியூப கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அரசுக்கும் எனது சகோதரத்துவமிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிn றன். கடந்த 50 ஆண்டு காலத்தில் மேற்கத்திய உலகில், அமெரிக்காவுக்கு அருகே ஒரு துணிச்சல்மிக்க தேசமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது கியூபா. கியூபாவின் சமூக அமைப்பானது, வறுமை, எழுத்தறி வின்மை மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சனை களுக்கு எதிராக மிகச்சரியான முறையில் போராட்டம் நடத்தி இத்தகைய சமூகத் துறைகளில் குறிப்பிடத்தக்க சாத னைகளை படைத்துள்ளது. கியூபாவின் 1 கோடியே 10 லட்சம் மக்கள் சமூக, பொரு ளாதார மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மெச்சத்தக்க சாதனைகளை படைத்துள்ளனர். ஏனென் றால் அமெரிக்கா விதித்த கிரிமினல் தன மான தடைகளையும், அச்சுறுத்தல்களை யும், சதித்திட்டங்களையும் தீரத்துடன் எதிர் கொண்டதில் இந்த மக்கள் மிகவும் ஒற்று மையாகவும், மிகக் கூரிய அரசியல் விழிப் புணர்வுடனும் இருந்தார்கள். 

கியூபா மீதான இத்தகைய கிரிமினல் தனமான, சட்டவிரோதமான தடைகளுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச் சியாக ஒட்டுமொத்த உலகின் ஆதரவோடு தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. ஆனால், உலகின் இந்த கருத்துக்கு அமெ ரிக்கா எந்த மரியாதையும் தரவில்லை. அவர்கள் இன்னும் கூட தங்களது அனைத்து ராணுவ மற்றும் பயங்கரவாத செயல்பாடுகள் மூலமும், பொருளாதார யுத்தம் மூலமும் கியூபாவை தகர்க்க முயற் சித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அமெரிக்காவின் இத்தகைய கோழைத் தனமான, கொடூர சதிகளும் தடைகளும் தொடர்கிற போதிலும் கூட, கியூபாவில் சோசலிசம் வீர நடை போட்டு முன் செல்கிறது. கியூபா, இன்றைக்கு சக்திமிக்க போராளியாக, கியூப மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மூன்றாம் உலக நாடுகளது மக்களின் போராளியாக திகழ் கிறது. வறுமை, ஏற்றத்தாழ்வு, வாழ்வா தாரங்கள் அழிப்பு போன்ற கடும் பிரச்சனை களை எதிர் கொண்டுள்ள உலகம் முழுவ தும் இருக்கிற மக்களுக்கு வெளிச்சத்தை காட்டுகிற ஒளிவிளக்காகவும் கியூபா திகழ்கிறது. 

கியூப மக்கள் காட்டிய இந்தத் தீரமிக்க முன்னேற்றத்தால் ஆதர்சிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க மக்களும் தங்களது ஜனநாயக உரிமைகளை, அமெரிக்க நிர்வா கத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான சுதந்திர வேட்கையை உறுதி செய்கிற போராட் டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். 

சுதந்திரம், அனைத்துப் பகுதி மக்களின் நலன், அமைதி, முன்னேற்றம் மற்றும் ஜன நாயகம் ஆகியவற்றை காப்பதற்கு கியூப தேசத்தின் மக்கள் அளித்துள்ள மகத்தான பங்களிப்பின் மூலம் ஈர்க்கப்பட்டுள்ள இந் திய மக்கள் தங்களது போராட்டத்தை தொடர் வார்கள். கடந்த 50 ஆண்டு காலமாக கியூபா வுக்கு ஆதரவாக, கியூபா மீதான அமெரிக்க நிர்வாகங்களின் அத்துமீறல்களுக்கு எதி ராக எமது மக்கள் மாபெரும் இயக்கங் களை நடத்தியுள்ளனர் என்பதை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன்.

கியூப மக்களும் அவர்களது தலைமையும் எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் மேலும் பல வெற்றிகளை ஈட்ட வாழ்த்துகிறேன். கியூப புரட்சியின் மகத்தான தலைவரும், கியூபாவில் சோசலிசத்தை கட்டி அமைத்த அறிவார்ந்த தலைவருமான பிடல் காஸ்ட்ரோவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

கருத்துகள் இல்லை: