வெள்ளி, 23 ஜனவரி, 2009

பெண்ணின்றி சுழலாது உலகம்

‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்று பாடிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, அவர் இன்று பாடினால் ‘பெண் ணாய்ப் பிறப்பதற்கே மகாபாவம் செய்தி டல் வேண்டும்’ என்று பாடிச் சென்றி ருப்பார். அந்த அளவுக்கு பெண்கள் மீது கொடுமைகள் ஏவிவிடப்படுகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லி மாளாது.

கல்லறை

கருவறைகள் இன்று கல்லறைகளாக மாறிவிட்ட அவலம் அறிவியல் மேம் பாட்டால் ஏற்பட்டது. மனித இன வளர்ச் சிக்காக, மனிதனின் திறமைகளின் வெளிப்பாடாக வளர்ந்த அறிவியல் இன்று மனித இனத்தின் ஒருபாதியை அழிக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ள அநியாயத்தை என்னென்று சொல்வது? தமிழகத்தின் பல பகுதிகளில் பெண் சிசுவை பிறந்தவுடன் கள்ளிப்பால் கொடுத்துக் கொள்வது இன்றும் நடை முறையில் உள்ளது.

நகரங்களின் நிலையைப்பார்த்தால் கிராமங்களின் நிலைமையை விட மோசமாக உள்ளது. கருவில் உருவாகும் சிசு பெண் என்று தெரிந்தவுடனேயே அழித்துவிடும் கொடுமையோடு ஒப் பிடும்போது கிராமங்களின் நிலைமோசம் இல்லை. அங்கு பெண் சிசு உலகைப் பார்த்தபின் கொல்லப்படுகிறது. நகரங்க ளில் கருவறை என்னும் இருட்டறை யிலேயே கொல்லப்படுகிறது. இரண்டுமே மாபாதகச் செயல்கள் என்பதில் மாறு பட்ட கருத்து இருக்க முடியாது.

மறு உற்பத்தி

மனிதகுல மறு உற்பத்திக்கு இருபாலி னம் தேவை. ஆண், பெண் என்ற இரு பாலரின் விகிதாச்சாரம் சற்றேறக்குறைய சமமாக இருக்க வேண்டும்.

1991ம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 945 பெண்கள் என்ற விகிதாச்சாரம் நிலவியது. இது போதுமானது என்றில்லா விட்டாலும் ஆரோக்கியமான விகிதாச் சாரமாக இருந்தது. ஆனால் 2001ம் ஆண்டில் இந்த விகிதாச்சாரம் 1000க்கு 927 ஆக வீழ்ந்தது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஆண்டுதோறும் 7 லட்சம் சிறுமிகள் காணாமல் போகின் றனர். 1981 முதல் 2005 வரை பாலினம் அறிந்து செய்யப்பட்ட கருச்சிதைவு களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் சற்று அதிகம் என்று டிஎன்ஐஇ-பிர ஜன்யா முனைப்பு நடத்திய ஆய்வு கூறு கிறது.

தமிழ்நாட்டில்...

1960களில் 6 வயதுக்குட்பட்ட குழந் தைகளில் 1000க்கு 995 என்று ஆண்-பெண் விகிதாச்சாரம் இருந்தது. 2001ம் ஆண்டில் இது 1000க்கு 939 ஆகக் குறைந்துவிட்டது என்று மக்கள் தொகைக் கணக்கீடு கூறுகிறது. தமிழ் நாட்டின் 16 மாவட்டங்களில் 2004ம் ஆண்டில் இந்த விகிதாச்சாரம், உலக சராசரி விகிதாச்சாரமான 952க்கும் குறைவாக இருந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2001ம் ஆண்டில் ஆண், பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் 1000க்கு 944 ஆக இருந்தது. 2008ம் ஆண்டில் இது 1000:928 ஆகக் குறைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் இந்நூற்றாண்டின் தொடக் கத்தில் இவ்விகிதாச்சாரம் 1000:960 ஆக, உலக சராசரிக்கும் கூடுதலாக இருந்தது. 2008ம் ஆண்டில் 915 ஆக வீழ்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 2001ம் ஆண் டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1176 பெண் குழந்தைகள் இருந்தன. இப்போது இது 702 ஆகக் குறைந்துள்ளது. விருது நகர் மாவட்டத்தில் 1000த்துக்கு 949 ஆக இருந்தது தற்போது 915 ஆக குறைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2001ல் 969 என்று இருந்தது தற்போது 915 ஆக குறைந்தது. மதுரை மாவட்டத் தின் செல்லம் பட்டி, உசிலம்பட்டி பகுதி களின் ஆண், பெண் விகிதாச்சாரம் படு வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.

சட்டம் என்ன செய்யும்?

கருவில் பாலினம், அறிதலைத் தடுக் கும் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வர பத்து ஆண்டுகள் ஆயின என்பதே அரசு நிர்வாக எந்திரத்தின் செயல் பாட்டை விளக்கக்கூடியதாகும். 1971ம் ஆண்டுக்கு முன்பு இந்திய குற்றவியல் சட்டங்களின் அங்கமாகிய கருக் கலைப்பு சட்டங்கள் மறு உற்பத்தி செய் யும் தாயின் உரிமையைவிட கருவில் உள்ள குழந்தையின் உரிமைக்கு அதிக மதிப்பளித்தது. 1971ம் ஆண்டில் இயற்றப் பட்ட, கருவை மருத்துவரீதியில் அழித் துக்கொள்ளும் சட்டம் மறு உற்பத்தி செய்யும் தாயாருக்கு கருவைக் கலைக் கும் உரிமையை நிலைநாட்டியது.

2002-3ம் ஆண்டில் கருவின் பாலி னத்தை அறிந்து கொள்வதை தடைசெய் யும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இச் சட்டம் தண்டனை வழங்கும் சட்டம். ஆனால் இதன் அமலாக்கம் கேள்விக் குறியாக உள்ளது. இந்தச் சட்டவிதிகளை மீறும் சோதனைக் கூடங்களை மூடும் அதிகாரம் இருந்த போதும், இது நடை முறைப்படுத்தப்படுவதில்லை என்பதே உண்மை. சட்டங்கள் ஏட்டளவில் நின்று விடுகின்றன. ஆண்-பெண் விகிதாச் சாரம் உலக சமுதாயத்தின் ஆரோக்கியத் தைக் கணக்கிடப் பயன்படும் காரணி களில் ஒன்றாகும்.

தாய்மை அடையும் பெண்ணின் அல்லது வளரும் கருவின் உடல் நலனை மனதிற்கொண்டு கருக்கலைப்புச்சட் டங்கள் இயற்றப்பட்டன. மற்ற வகையி லான கருக்கலைப்பு அனைத்தும் குற்றமே. இந்நிலை தொடர்ந்தால் ஆண்-பெண் விகிதாச்சாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். இது நாட்டின், உலகின் மேம்பாட்டுக்கு எதிரான தீங்கையே விளைவிக்கும்.

பெண்களுக்கு எதிராக 16 வகை கொடுமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவைகளில் கருக்கலைப்பும், சிசுக்கொ லையும் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்த சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண் டும். சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு நிர்வாக எந்திரம் முடுக்கி விடப்பட வேண்டும். மக்களிடையே, பெண் குழந்தைகள் பேணி வளர்க்கப்பட வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர் வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதில் அரசுக்குமட்டுமல்ல சமூகத்திற் கும் பெரும்பங்கு உண்டு.

-தாஸ்

2 கருத்துகள்:

தளிர் சொன்னது…

பதிவு நன்று. தேசிய விநாயகம் அன்று, தேசிக விநாயகம்

விடுதலை சொன்னது…

தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி