செவ்வாய், 27 ஜனவரி, 2009

கலாச்சார ‘போலீசாரின்’ கயமைத்தனம்

தென் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைத்திருப்பது ஆபத்தானது என்று மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எச்ச ரித்தன. அந்த எச்சரிக்கை எந்த அளவுக்கு உண் மையானது என்பதை ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் தொடர் அட்டகாசங்கள் நிரூபிப்பதாக அமைந் துள்ளன.


கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தபிறகு, சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். பல இடங்களில் தேவாலயங்கள், பிரார்த்தனை கூடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஆர் எஸ்எஸ் அமைப்பை விமர்சித்து எழுதியதற்காக பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு கைவிலங்கு பூட்டிய கொடுமையும் நடந்தது.

இந்நிலையில், மங்களூரில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இளம்பெண்கள் மீது ராமர் சேனை என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஆர்எஸ்எஸ் விஷத் தேளின் கொடுக்குகளில் ஒன்று, தொடுத்துள்ள கொடூரத்தாக்குதல் தேசத் தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்த விடுதியில் பெண்கள் ஆபாச நடனமாடு வதாக கூறிக்கொண்டு உள்ளே நுழைந்த ‘ராமர் சேனையினர்’ இளம் பெண்களை அடித்துத் துவைத்துள்ளனர். சில பெண்களை மானபங்கம் செய்துள்ளனர். ஊடகங்களில் நேரடி காட்சியாக ஒளிபரப்பானதைத் தொடர்ந்து இந்த இழிசெய லுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

அனுமார் சேனை என்று பொருள்படும் வகை யில் “பஜ்ரங்தள்” என்ற பெயரில் செயல்பட்டு வருபவர்கள், வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிராக தாக்குதல் தொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக கர்நாடகத்தில் “ராமர் சேனை” புறப்பட்டிருக்கிறது.

இந்துப் பெண்களின் கற்புக்கும், கண்ணியத் திற்கும் தங்களை தாங்களே பாதுகாவலர்கள் என்று அழைத்துக் கொள்ளும் இந்த மதவெறி ரவுடிகள், முற்றிலும் பெண்களின் முன்னேற்றத் திற்கு எதிரானவர்கள். கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றுவதை நியாயப் படுத்தும் “ஸதி”யின் ஆதரவாளர்கள், விதவை கள் மறுமணத்தை எதிர்ப்பவர்கள். இளம்பிஞ்சு களுக்கு திருமணம் செய்து வைப்பதை ஆதரிக் கும் பிற்போக்காளர்கள். பெண்களுக்கு சொத்து ரிமை தரப்படுவதைகூட எதிர்ப்பவர்கள். பெண் களின் கண்ணியத்தைப் பற்றி கவலைப்பட இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டுவதிலும் இந்த மதவெறி சக்திகள் முன்னணியில் உள்ளன. இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடுவோர் மீது எடியூரப்பா அரசு, மிகவும் மென்மையாகவும், ஆதரவாகவும் நடந்து கொள்வதால், இவர்கள் மேலும் மேலும் தைரியமடைந்து தங்களது கோரத்தாண்டவத் தை அதிகப்படுத்திக் கொண்டே செல்கின்றனர்.

கர்நாடகத்தில் புறப்பட்டுள்ள இந்த “கலாச் சார” பாசிச சக்திகள், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பரவிவிடாமல் தடுக்கவேண்டி யது மதச்சார்பற்ற சக்திகளின் தலையாய கடமையாகும்.

தாக்குதல் காட்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானதால் வேறு வழியின்றி எடியூரப்பா அரசு கைது நாடகம் ஆடுகிறது. இந்த கிரிமினல் குற்றவாளிகள் மீது கடும் நடவ டிக்கை எடுப்பதற்கான நிர்பந்தத்தை உருவாக்க வேண்டியது ஜனநாயக எண்ணம் கொண்டோர் அனைவரின் பொறுப்பாகும்.

கருத்துகள் இல்லை: