வியாழன், 19 மார்ச், 2009

300 தொகுதிகளில் வலுவான சக்தியாக மாற்று அணி



மக்களவைத் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உரு வெடுத்துள்ளது கடந்த வியாழனன்று கர்நாடக மாநிலம் தும்கூரில் உதயமான மூன்றாவது அணி. ஒன்பது மாநிலங் களிலும், மூன்று யூனியன் பிரதேசங் களிலும் வலுவான செல்வாக்குள்ள அணியாக மூன்றாவது அணி திகழ் கிறது. அசாமிலும், மூன்றாவது அணி உருவாகும் பட்சத்தில் பத்து மாநிலங் களில் பெரும் சக்தியாக விளங்கும். 

1989-லும், 1996-லும் உருவான மூன்றாவது அணியிலிருந்து மாறுபட்ட தாகும் இந்த அணி. மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கும் நோக்குடனேயே இப்போதைய மூன்றாவது அணி உரு வெடுத்துள்ளது.

கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்கள் இடதுசாரிக் கட்சிகளின் கோட்டைகளாகும். முன்னணியின் முதல் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் வலுவான சக்தியாகும். தெலுங்கு தேசமும் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதியும், இடதுசாரி கட்சிகளும் கை கோர்த்துள்ள மகா கூட்டணி ஆந்திராவில் காங்கிரசுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. 

அதிமுகவும், இடதுசாரி கட்சிகளும் தேர்தல் உடன்பாடு கண்டிருப்பது தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெரும் சவாலாக உரு வெடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பிஎஸ்பி, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மாநிலத் தில் உள்ள 80 இடங்களில் பாதி அளவு இடங்களை மாயாவதி பெறுவார் என்று பூர்வாங்க மதிப்பீடு தெரிவிக்கிறது. ஒரிசாவில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிஜு ஜனதா தளமும், மூன்றாவது அணியின் பக்கம் தாங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது ஒன்பது கட்சிகள் மூன்றாவது அணி யில் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் கட்சியும் மூன்றாவது அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

மூன்றாவது அணி வலுவாக உள்ள மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங் களிலுமாக மொத்தம் 300 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மேற்கு வங்கம், ஆந்திரா மாநிலங்களில் தலா 42, தமிழ்நாட்டில் 39, கர்நாடகத்தில் 26, ஒரிசாவில் 21, கேரளத்தில் 20, உத்தரப் பிரதேசத்தில் 80, திரிபுராவில் 2 தொகுதிகள் உள்ளன. பஜன்லாலின் ஹரியானா ஜனஹிதா கட்சி செல்வாக்குடன் விளங்கும் ஹரியானாவில் 10 இடங்கள் உள்ளன. அந்தமான், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு இடம் உள்ளது. அசாமில் 14 இடங்கள் உள்ளன. கடந்த தேர்தலில் இந்த 300 இடங்களில் 100 இடங்கள் இப்போதைய மூன்றாவது அணிக்கு கிடைத்துள்ளது. 

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி பிஜூ ஜனதாதளம் மூன்றாவது அணியின் பக்கம் நிற்க விருப்பம் தெரிவித்ததும் தும்கூரில் முன்னணியின் தொடக்க விழா பேரணி பெரும் வெற்றி பெற்றதும், காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகளின் நம்பிக்கையை தகர்ப்பதாக அமைந்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் இளைய பங்காளியாக காங்கிரஸ் கை கோர்த்ததற்கு இந்த பயமே காரணமாகும். கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 6 இடங்களை யும், வேறு 8 இடங்களையும் காங்கிரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது. இந்த தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதி களாகும். இருந்தாலும் இத்தொகுதி களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

பாஜக கூட்டணியின் நிலைமையும் மாறுபட்டதல்ல. ஒரிசாவில் பிஜூ ஜனதா தளம் கைவிட்ட பாஜக, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கேட்ட கூடுதல் இடங்களைக் கொடுத்து கூட்டணியைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இல்லையென்றால் பிஜூ ஜனதா தளம் போல நிதிஷ்குமாரும் வெளியேறி விடுவாரோ என்ற அச்சம் பாஜகவை வாட்டுகிறது. 

தேர்தலில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றினால் சட்டசபையைக் கலைத்து விட்டு பாஜக உறவைத் துண்டித்துக் கொள்வது குறித்து நிதிஷ்குமார் சிந்தித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. இதுவும் பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 கருத்துகள்:

BIGLE ! பிகில் சொன்னது…

அட, காமெடி பதிவா?

விடுதலை சொன்னது…

பிகிள் நன்பரே உங்களுக்கு வேண்டுமானால் காமடியாக இருக்கலாம். இந்திய அரசியலின் தற்போதை தன்மை மூன்றாவது மாற்று என்ற கோசத்திற்கு சாதகமாக இருப்பதை தேர்தல் முடிவு நிச்சயம் தெளிவு படுத்தும்.

Rajaraman சொன்னது…

கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. என்ன காமெடி கனவு கண்டுள்ளீர்கள்.

விடுதலை சொன்னது…

கனவு கான்பதற்கு உரிமை அளித்தற்கு மிக்க நன்றி ராஜாராமன் அவர்களுக்கு.
கனவு யாருக்கானது என்பதையும். இந்தியாவை கடந்த 50 ஆண்டுகளாக சுரண்டிகொழுத்து உள்ள பணமுதலை காங்கிரஸ் கட்சிதூக்கி எறியவும், கடந்த 25 ஆண்டுகளாக வகுப்புவாத பயங்கிரவாத்தில் ஈடுப்பட்டுவரும் பாசகவை துடைத்து எரியும் கனவே நாங்கள் கனவு கான்கிறோம் என்பது உண்மைதான் நன்பரே எங்கள் கனவு பளிக்க உதவுங்கள் ராஜாராமன்

சந்திப்பு சொன்னது…

கனவில்லா மனிதன் உலகில் இல்லை. கனவு என்பதே யதார்த்ததின் பிரதிபலிப்புதான். பிரச்சனையென்ன வென்றால் பகல் கனவு காணக்கூடாது என்பதுதான். இதுதான் நிஜ கனவுலகம். எனவே, விடுதலை கனவு காண்பது என்பது பாரதியின் வாக்கினில் சொல்ல வேண்டும் என்றால் "கனவு மெய்ப்பட வேண்டும்" என்பாரே! அதுபோல.... உங்களது நிலைதான் பரிதாபம்! யதார்த்த உலகை புரிந்து கொள்ளாத நீங்கள் கற்பனை உலகில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள்.

Rajaraman சொன்னது…

கேரளாவில் Pakistan I.S.I கைக்கூலி அப்துல் நாசர் மதானியுடன் கள்ள உறவு கொள்வதும், மேற்கு வங்கத்தில் தஸ்லிமா நச்ரீனை விரட்டி அடித்ததும் எந்த பயங்கரவாதத்தில் சேர்த்தி?

Rajaraman சொன்னது…

\\இந்தியாவை கடந்த 50 ஆண்டுகளாக சுரண்டிகொழுத்து உள்ள பணமுதலை காங்கிரஸ் கட்சிதூக்கி எறியவும்//

We will talk to congress after electionson govt formation: Karat இது செய்தி.

அது எப்படி வெட்கமே கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி கமுநிச்டுகளால் அரசியல் செய்ய முடிகிறது. யாராவது கேள்வி கேட்டால் இருக்கவே இருக்கிறது Secularism, வகுப்புவாத சக்திகளை முறியடிப்பது என்று ஜல்லியடிப்பது.

விடுதலை சொன்னது…

ராஜாராமன் அவர்களே
அப்துல் நாசர் மதானியை யார் ஜ.எஸ்.ஜ உளவாளி என்று சொன்னது. பாசக பேச்சைபோல் உள்ளதே!
தஸ்லிமாவை யார் அடித்துவிரட்டினார்கள் என்பது உங்ளுக்கு தெரியவில்லை என்றால் கேளுங்கள் . பல ஆண்டுகள் அவரை பாதுகாப்பாக வைத்து இருந்தது மேற்கு வங்க அரசு என்பதை உங்களுக்கு தெரிந்தாலும் நினைவு படுத்தவேண்டியது இருக்கிறது.

இந்திய அரசியலில் உங்களை போன்ற உத்தமர்கள் வந்தால் ஒருவேலை உங்களை அழைக்கலாம்தான் . ஆனால் தற்போது இருக்கிற நிலையில் இரண்டுபிரதான அழிவு சத்திகளை அழிக்க ஒன்றை பயன்படுத்துவது அறிவியல் பூர்வமானது. சரியான நிலைப்பாடும் கூட ஆனால் ஒன்றை தெளிவாக நினைவில் கொள்ளுங்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரகாஷ்காரத்து சொன்னதை மறந்துவிடாதீர்கள்