புதன், 11 மார்ச், 2009

இந்தியாவில் 50 சதவீதம் சிறுமிகள் திருமணம்

குழந்தைத் திருமண தடைச் சட்டம் இந்தியாவில் நடை முறைக்கு வந்து 80 ஆண்டுகள் ஆனபோதும், 50 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடக்கும் நிலை நீடிக்கிறது.

குழந்தைத் திருமண தடைச் சட்டம் கடந்த 1929ம் ஆண்டு இந்தியாவில் நடை முறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், சட்டப்பூர்வ திருமண வயது 18ஐ எட்டு வதற்குள் 50 சதவீத பெண்களுக்கு திருமணம் முடிந்து விடுவதை, இந்தோ- அமெ ரிக்க ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தகவல் செவ்வாயன்று மருத்துவ இதழான லான் சட்டிலும் வெளியாகி உள்ளது. 20-24 வயதுக்குட்பட்ட 22 ஆயிரத்து 807 பெண்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது, அதில் 50 சதவீதத்தினர் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்தது தெரிய வந்தது. குழந்தை திருமணங்களால் தேவையற்ற பல கர்ப்பம், கருக்கலைப்பு ஆகுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

சமூக மற்றும் நடவடிக்கை அறிவியல் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற பாஸ்டன் பல்கலைக்கழக பள்ளியின் பொது நலம் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் குழந்தை திருமணங்கள் தடுக்க முடியாத நிலை இருப்பதை சுட்டிகாட்டி யுள்ளனர்.

குறை பிரசவம், தேவையற்ற கர்ப்பம், 24 மாத காலத்தில் அடுத்தடுத்து ஏற்படும் கர்ப்பம் போன்ற நிகழ்வுகளும், குழந்தை திருமணங்களில் காணப்படும் மோச மான நிலை உள்ளது.

ஆய்வுகுழு தலைவரான டாக்டர் அனிதாராஜ் கூறுகையில், ஆய்வில் இடம் பெற்ற பெண்களின் 5ல் ஒருவர் 16 வயதுக்கு முன்னரே திருமணம் செய்துள்ளதும், 2.6 சதவீதம் பேர் 13 வயதுக்கு முன்னரே திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது என்றார். 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய் யும் பெண்கள், முதல் குழந்தை பிறக்கும் வரை கர்ப்ப தடை விஷயங்களை கடை பிடிப்பது, இளவயதில் திரு மணமான பெண்களில் 48.4 சதவீதம் பேர் தங்களுக்கு 18 வயது ஆகும் முன்னரே தாயாகி விடுவதும் தெரிய வந்தது.

இந்த ஆய்வு முடிவுகள் குழந்தை திருமணம் நடை பெறுவதை தடுக்க கூடிய திட்டங்கள் வெற்றிபெறா ததை சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவில் குழந்தை திருமணங்கள் அதிகரித் திருப்பதாகவும் இதனால் தாய்-சேய் மரணம் அதிகரித்து இருப்பதாகவும் யுனிசெப் சமீபத்தில் தகவல் வெளியிட்டது. 20 வயது பெண், குழந்தை பிறப்பு அடையும் நிலையில் சந்திக்கும் அபாயத்தை விட, 15 வயதுக்கு முன்னர் குழந்தை பிறப்பு நிலை அடையும் பெண் 5 மடங்கு அபாயத்தை சந்திப் பவராக உள்ளனர்.

உலகில் நடக்கும் குழந்தை திருமணங்களில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் 20-24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 6 கோடி பேர் 18 வயதுக்கு முன் னரே திருமணம் செய்து விடுகின்றனர்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்