வெள்ளி, 13 மார்ச், 2009

காங்கிரஸ் - பாஜக கூட்டணிகளுக்கு மாற்றாக பேரெழுச்சி மூன்றாவது அணி உதயம்

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கட்சிகளையும், பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளையும் வீழ்த்தும் வகையிலும், இந்திய வாக்காளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் மூன்றாவது மாற்று அணி கம்பீரமாக உதயமாகியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூரில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் 4 லட்சம் பேர் கலந்து கொண் டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், சிபிஐ பொதுச்செயலாளர் .பி.பரதன் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் தலைவர்கள், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், அதிமுக சார்பில் மைத்ரேயன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதீஷ் சந்திர மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.

பிரகாஷ் காரத் உரையாற்றும் போது, காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகள் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தவறி விட்டன. அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும், இடதுசாரிக் கட்சிகளும் ஒன்றாக இணைந்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். வரும் மக்களவைத் தேர்தலில் தேசத்தின் முன்னால் மூன்றாவது மாற்றை முன்னிறுத் தும் மகத்தான துவக்கமாக இந்தக் கூட் டம் அமைந்துள்ளது என்று குறிப் பிட்டார்.

மூன்றாவது மாற்று அணி பெரும் பகுதி மக்களின் நலனை பாதுகாப்ப தாகவும், மதவெறி சக்திகளுக்கு எதிராக மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக போராடுவதாகவும் அமையும் என்று குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறுவது கேலிக்கூத்தானது என்று கூறிய பிரகாஷ் காரத், யாருக்கு வளர்ச்சி என்று கேள்வி எழுப்பினார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலைவாசி கடுமையாக உயர்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆலைகள் மூடப்படுகின் றன. பல்லாயிரக்கணக்கானவர்கள் ஏற்கெனவே வேலையிழந்து விட்ட னர். இந்த நிலையில், வளர்ச்சி என்று காங்கிரஸ் பீற்றிக் கொள்வது அர்த்த மற்றது என்றார்.

நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் இன்னமும் கூட ஊட்டச்சத் தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் பகுதி மக்களுக்கு இன்னமும் எழுத்தறிவு கூட கிடைக்கவில்லை. நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆன பின்னும், 24.4 கோடி பேர் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட் டுள்ளனர். மூன்று வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதில்லை. 50 சதவீதம் பெண் கள் ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 சதவீதம் பேர் எழுத் தறிவற்றவர்களாக உள்ளனர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியின் போது இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

இந்த இரு கூட்டணிகளையும் ஒரு சேர வீழ்த்தும் வகையில் மூன்றாவது மாற்று அணிவகுப்பு கம்பீரமாக எழுந் துள்ளது என்று பிரகாஷ் காரத் குறிப் பிட்டார்.

சிபிஐ பொதுச்செயலாளர் .பி. பரதன் பேசும் போது, 1996-ம் ஆண்டு தேவகவுடா தலைமையில் ஐக்கிய முன்னணி அரசு அமைந்ததை சுட்டிக் காட்டி 13 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தகையதோர் அணிவகுப்பு அமைந்துள்ளது. காங்கிரஸ், பாஜக கூட்டணி வீழ்வது உறுதி என்றார்.

பேரணிக்கு பொதுமக்களை வரவிடாமல் கர்நாடக எடியூரப்பா அரசு இடையூறு செய்தது. இதையும் மீறி 4 லட்சம் பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக மதச்சார்பற்ற ஜனதா தள செய்தித் தொடர்பாளர் ஒய்.எஸ். வி.தத்தா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: