நாடாளுமன்ற மக்களவையில், இடைக்கால பட்ஜெட் மீது தொகுப்புரை வழங்கும்போது, கூடுதல் பொறுப்பு வகிக்கும் மத்திய நிதியமைச்சர், சில ஊக்குவிப்புப் பொருளாதாரச் சலுகைகளை அறிவித்திருக்கிறார். சரியாகச் சொல்வதென்றால், அவர் இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்தபோது என்ன சொன்னாரோ, அதற்கு நேர் எதிரான வகையில் இப்போது செய்திருக்கிறார். இடைக்கால பட்ஜெட் என்பது, வரி விகிதங்களில் எந்தவித மாற்றங்களையும் அனுமதிக்கக் கோருவதற்கான ஒன் றல்ல என்றார். ஆனால் இப்போது, தேர்த லுக்குப்பின், புதிதாகப் பொறுப்பேற்கும் அரசாங்கம் சமர்ப்பித்திடும் முறையான பட்ஜெட்டில் கூறவேண்டியவைகளை அவர் அறிவித்திருக்கிறார்.
மக்களவையில், இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், இடதுசாரிக்கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்த நிலையில், அமைச்சர் கலால் வரிகளில் 2 சதவீதமும், சேவை வரியில் 2 சதவீதமும் குறைக்கப்படுவ தாக அறிவித்திருக்கிறார். இதனால் அரசுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இதன் பயன்கள் நுகர் வோருக்குச் செல்லுமானால், பல பொருட்களின் விலைகள் வீழ்ச்சியுறும் என்பது ஆட்சியாளர்களின் எண்ணம். இவ்வாறு விலைகள் குறைந்தால், அது மிகச் சிறிய அளவிற்கு என்றாலும் கூட, அதனால் அந்தப் பொருட்களின் விற் பனை அதிகரித்து, அதன் மூலமாக பொரு ளாதாரத்திற்கு ஓர் ஊக்குவிப்பு ஏற்படும் என்பது அரசின் வாதம்.
அரசாங்கம் தவறான பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது என்று மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம். இத் தகைய வரிச்சலுகைகள் விலைகளைச் சற்றே குறைத்திடலாம். ஆனால் எந்த விதத்திலும் அவை, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திட உதவிடப்போவ தில்லை. அதைச் செய்திடாமல், வரிக ளில் வெட்டோ அல்லது பெருவர்த்தக நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகை கள் அளிப்பதோ பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளித்திட உதவிடாது. மாறாக, இதே 30 ஆயிரம் கோடி ரூபாயை கிரா மப்புறச் சாலைகளை அமைத்தல், அதன் மூலமாக வேலைவாய்ப்பளித்தல் போன்ற பொது முதலீட்டின் மூலமாக நேரடியாக செலவழித்திருந்தால், மக்கள் தாங்கள் பெற்ற ஊதியங்களைப் பொருள் களை வாங்க செலவு செய்வதன் மூல மாக பொருளாதாரத்தை ஊக்குவித்திருப் பார்கள். ஐமுகூ அரசாங்கம், இயல்பான தன் வர்க்க குணத்திற்கேற்ப, பெருவர்த் தக நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக் கத்தான் முன்வந்திருக்கிறதேயொழிய, மக்களுக்கு நிவாரணம் அளித்திடவில் லை. அரசின் அறிவிப்பின் மூலம் மக்க ளின் வாங்கும் சக்தி எவ்விதத்திலும் உய ரப்போவதில்லை. இதனை மாற்றியமைத் திடாமல், எவ்வித வரிச்சலுகையும், வட்டிவிகிதங்கள் குறைப்பும், மீட்புத் திட் டங்களும் பொருளாதாரத்தை ஊக்குவிக் காது.
இதற்குச் சரியான எடுத்துக்காட்டு, விமானப்போக்குவரத்துத்துறைதான். விமானப்போக்குவரத்தை நடத்திடும் பெருவர்த்தக நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து எரிபொருள்கள் விலை குறைப்பு உட்பட ஏராளமான சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. சாமானிய மக்களுக்கு அளிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலைகளை விட அவற்றின் விலை மிகவும் குறைவு. இவ்வாறு அபரி மிதமான சலுகைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தும், விமானப்போக்கு வரத்துப் பயணிகளின் எண்ணிக்கை மேம்பட்டதாகச் சொல்வதற்கில்லை. விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் நட்டமடைவது தொடர்கிறது. விமானப் பயண டிக்கெட்டுகளை வாங்கக்கூடிய அளவிற்கு மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்போதுதான், விமானப் பயணிகளின் போக்குவரத்து அதிகரிக் கும். இதனை உத்தரவாதப்படுத்திடாமல், மேல்மட்ட அளவில் அளிக்கப்படும் எவ் விதமான சலுகைகளும், பொருளாதாரத் தை ஊக்குவித்திடாது. ஒருவேளை, பெரு வர்த்தக நிறுவனங்களின் இருப்புநிலைக் குறிப்புகளை அழகுபடுத்த வேண்டு மானால் அவை உதவலாம்.
மேலும், இவ்வாறான வரிச் சலுகை கள் மூலம், இந்திய மத்தியத்தர வர்க்கத் தினரால் வாங்கப்படக்கூடிய நுகர்வுப் பொருள்கள் சிலவற்றின் விலைகள் குறையலாம். உலகப் பொருளாதார நெருக் கடி, பங்குச் சந்தையைக் கடுமையாகக் கசக்கிப்பிழிந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில், மத்தியத்தர வர்க்கத்தினரின் கைகளில் செலவழிக்கக்கூடிய விதத் தில் வருமானம் ஏதுமில்லை. அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் தொகை யில் கணிசமான அளவிற்கு வெட்டு விழுந்திருக்கிறது. இவ்வாறு நாம் கூறுவ தெல்லாம் இதுவரை வேலையிழக்காத வர்கள் குறித்துத்தான். இத்தகைய சூழ் நிலைமைகளில் மத்தியத்தர வர்க்கத் தினர் நுகர்வுப் பொருள்களை மேலும் வாங்குவார்கள் என்றோ, அவ்வாறு பொருள்களை வாங்க தூண்ட முயற்சிப் பது என்றோ ஒருவர் கருதினால், அவர் முட்டாள்களின் உலகத்தில் வாழ்கிறார் என்று கூறுவதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.
உலக பொருளாதார மந்தத்தின் தாக்கத்திலிருந்து மீள ஒரே வழி, குறிப்பிடத்தக்க அளவிற்கு பொது முத லீடுகளை அதிகப்படுத்தி, அதன்மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, உள்நாட்டுத் தேவைகளை அதிகப்ப டுத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதும், தற்போது துயரார்ந்த முறையில் இருந்து வரும் சமூக மற்றும் பொருளாதார கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவது என்பதுமேயாகும். ஆயினும் நாம் மேலே குறிப்பிட்டதுபோல, ஆட்சியாளர்கள் தங்களின் வர்க்கப் பாசத்தின் காரண மாக, இந்திய ஆளும் வர்க்கங்களைக் காப்பாற்றுவதிலேயே கண்ணும்கருத் துமாக இருக்கிறார்கள்.
இதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலை யில், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரி அரசாங் கங்கள், மாநில அரசாங்கங்களின் செல வினங்களை அதிகப்படுத்துவதன் மூலம், மக்களின் தேவைகளைப் பெருக் கக்கூடியவிதத்தில் ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித் திருக்கின்றன. உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள, பெருவர்த்தக நிறுவனங்களுக்கு சலுகைகள்அளிப்பதைவிட, இவ்வாறு பொதுப் பணத்தை செலவழிப்பதுதான், உலகப் பொருளாதார மந்த நிலைமை களிலிருந்து மீள மிகவும் வலுவான வழியாகும். கேரள அரசாங்கமானது, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ழுனுஞ)யில் 5 சதவீத அளவிற்கு ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் பொதுப் பணிகள், பாசன வசதி கள், தண்ணீர் விநியோகம், வீட்டுவசதித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட விருக்கின்றன. சதவீத அடிப்படையில் கூறுவதானால், மத்திய அரசு அறிவித் திருக்கிற ஊக்குவிப்புத் திட்டத்தைப் போல (மத்திய அரசின் ஊக்குவிப்புத் திட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.5 சதவீதமேயாகும்) கிட்டத்தட்ட பத்து மடங்குகளாகும்.
அதேபோன்று, மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கமும், 5,106 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையுடன் (இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் சுமார் 1.5 சதவீதமாகும்) ஒரு சமூக நலத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. இத்திட்டமானது பொதுப் பணிகள், வீட்டு வசதித் திட்டங்கள் ஆகியவற்றை செயல் படுத்துவதுடன், அவதியுறும் நலிந்த பிரி வினருக்கு உடனடி நிவாரணம் அளிக்கக் கூடிய வகையிலான திட்டங்களையும் உள் ளடக்கியிருக்கிறது. வறுமைக் கோட்டுக் குக் கீழ் உள்ள அனைவருக்கும் அரிசி கிலோ 2 ரூபாய் வீதம் அளித்தல், சுய உதவிக் குழுக்களுக்குக் கடன்கள், 4 சத வீத வட்டிவிகிதத்தில் சுயவேலைவாய்ப் புத் திட்டங்கள், விவசாய உற்பத்தித் திற னை அதிகரிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு விவசாயிகளுக்குப் பயிர் காப் பீட்டுத் திட்டங்கள் உட்பட எண்ணற்ற திட்டங்களை அறிவித்திருக்கிறது.
மாநில அரசாங்கங்கள் தங்களுக் கிருக்கிற வரையறைக்குட்பட்ட அதிகா ரங்களில் இவற்றைச் செய்வது சாத்திய மெனில், நிச்சயமாக மத்திய அரசு இது போன்ற மக்கள் நலன்சார்ந்த திட்டங் களை மிகவும் செம்மையாக அமல்படுத் திட முடியும். இங்குதான் வர்க்க வித்தி யாசம் அடங்கியிருக்கிறது. ஆளும் வர்க் கங்கள், மக்களின் நலன்களைக் காப் பதைவிட லாபம் ஈட்டும் தங்கள் நலன் களைக் காத்திட முன்னுரிமை அளிக்கும் அதே சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிக ளுக்கு மக்கள் நலன்களைக் காப்பதே மற் றெல்லாவற்றையும்விட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை என்று கருதுகின்றன.
தேசிய அளவில் அரசின் கொள்கைகளில் இவ்வாறான மாற்றம் உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும் என்றால், வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் ஐமுகூ அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாற்றாக மதச்சார்பற்ற சக்திகளின் அரசியல் மாற்றை வெற்றி பெறச் செய்வது அவசியம்.
தமிழில்: ச. வீரமணி
திங்கள், 2 மார்ச், 2009
மத்திய அரசின் வர்க்க குணம்!
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக