இந்தியாவில் ஆட்சி அதிகாரம் என்பது காங்கிரஸ்-பாஜக என்ற இரு கட்சிகளின் தலைமையின் கீழ்தான் இருந்திட முடியும் என்று எல்.கே. அத்வானி பேசிய அடுத்த ஒருசில மணி நேரங்களிலேயே ஒரிசாவில் ஆட்சியிலிருக்கும் பிஜூ ஜனதா தளம், பாஜக/தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான பதினோராண்டு காலமாக கொண்டிருந்த தன்னுடைய உறவை முறித்துக் கொண்டுவிட்டது. வரவிருக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை இடதுசாரிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு கொண்டு போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறது. பாஜகவும் எல்.கே. அத்வானியும் நாட்டி லுள்ள நடைமுறை யதார்த்தத்திலிருந்து எந்த அளவிற்கு விலகி இருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு அருகில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அழைப்பை ஏற்று, இடதுசாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் அஇஅதிமுக கட்சிகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் மற்றும் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் மூன்றாவது அணியின் பிரச்சாரம் தொடக்கி வைக்கப் பட்டது. இவ்வாறாக காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந் திருப்பதானது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் பாஜக-வின் முயற்சிகளை மேலும் வலுவிழக்கச் செய்திருக்கின்றன. கிழக்குக் கடற்கரையோர மாநிலங்கள் அனைத்திலும், முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் அனைத்தும் பாஜக-வுடனான தங்கள் உறவுகளை முறித்துக் கொண்டுவிட்டன. மாறாக, ஒரிசா, ஆந் திரம் மற்றும் தமிழ்நாட்டில் அவை இடது சாரிக் கட்சிகளின் முயற்சிகளின் காரண மாக, ஒரு மாற்று மதச்சார்பற்ற அணி வகுப்பை உருவாக்குவதில் தங்களை இணைத்துக்கொண்டு விட்டன.
இத்தகைய வளர்ச்சிப் போக்குகள், இந்திய அரசியலில் வலுவான மாற்று அணி உருவாகி வருவதை நன்கு வெளிப்படுத்துகின்றன. நிலவும் சூழல், நாட்டு மக் களின் வாழ்வாதாரத்தில் கடும் தாக்குதலை நாள்தோறும் ஏற்படுத்தி வருகின் றன. குறிப்பாக, உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டிருக்கக் கூடிய ஆழமான பாதிப்புகள், மதச்சார்பற்ற கட்சிகளை, ஆட்சியாளர்கள் இது நாள்வரை கடைப்பிடித்து வந்த பன் னாட்டு வர்த்தக நிறுவனங்களின் கொள் ளை லாபத்திற்குத் துணைபோகக்கூடிய கொள்கைகளுக்குப் பதிலாக, மக்கள் நலன்சார்ந்த மாற்றுக் கொள்கைத் திசை வழி நோக்கி தங்கள் பார்வையைத் திருப் பச் செய்திருக்கின்றன. பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற் றும் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கங்களின் கடந்தகால நடவடிக் கைகளைப் பார்க்கும்போது, தீர்மானகர மான ஓர் அரசியல் மாற்று ஏற்படும்போது தான், ஆட்சியாளர்களின் கொள்கைத் திசைவழியை மாற்றிட முடியும்.
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், வன உற்பத்திப் பொருள் களில் பழங்குடியினருக்கான உரிமைகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, போன்ற மக்கள் ஆதரவு நடவடிக்கைகள் சிலவற்றை ஐமுகூ அரசாங்கம் மேற்கொண்டதென்றால், அதற்கு முக்கிய காரணம் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த இடது சாரிக் கட்சிகள் அளித்த நிர்ப்பந்தமே என் பதை மக்கள் நன்கு தெளிவாகத் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். அதேபோன்று, உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந் தம், நம் நாட்டின் பொருளாதாரத்தை முழு மையாகச் சூறையாடாமல் நாடு காப்பாற் றப்பட்டிருக்கிறதென்றால், அதற்கும் இடதுசாரிக் கட்சிகள், ஐமுகூ அரசை, நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர் திருத்தங்களைத் தங்கள் இஷ்டத்திற்குச் செயல்படவிடாமல் தடுத்து நிறுத்தியது, தான் என்பதையும் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள். இந்திய ரூபாயின் மதிப்பை முழுமையாக மாற்றுவதற்கும், ஓய்வூதிய நிதியத்தை தனியாரிடம் தாரை வார்ப்பதற்கும், இந்திய தனியார் வங்கி களை, அந்நிய நாட்டின் வங்கிகள் கபளீ கரம் செய்வதற்கும், காப்பீட்டுத் துறை யில் அந்நிய நேரடி முதலீட்டின் வரம்பை உயர்த்துவதற்கும் ஐமுகூ அரசாங்கம் விரும்பிய போதிலும், இடதுசாரிக் கட்சி கள் அவற்றைத் தடுத்து நிறுத்தியிருக்கா விட்டால், உலகப் பொருளாதார மந்தம் நம் நாட்டையும் சூறையாடியிருக்கும்.
இவ்வாறாக, அரசாங்கமானது ஒரு பக்கத்தில் மக்கள் நலன்சார்ந்தத் திட்டங் களை அமல்படுத்துவதற்கும், மறுபக்கத்தில் மக்களின் வாழ்வில் கடும் வேத னைகளை அளிக்கக்கூடிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அதன் வேகத்திற்குச் செயல்படுத்த விடாமல் தடுப்பதிலும், இடதுசாரிக் கட்சிகள் முக்கிய பங்காற்றி இருக்கின்றன. இந்த அனுபவங்களின் அடிப்படையிலும், தங் கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருவதன் அடிப்படையி லும்தான், காங்கிரஸ் அல்லாத மதச்சார் பற்ற கட்சிகள் பலவும், ஒரு மதச்சார்பற்ற கட்சிகளின் மாற்று அணியை நோக்கி வரத் தொடங்கியுள்ளன.
“அயோத்தியில் தாவாவுக்குரிய இடத் தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு உறு தியளிக்கக்கூடிய கட்சிகளுக்குத்தான் தங்கள் ஆதரவு” என்று ஆர்எஸ்எஸ் அறி வித்திருப்பதன் மூலம், தங்கள் கடுமை யான இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை மீண் டும் மையப் பொருளாகக் கொண்டுவந் திருக்கிறது. இவ்வாறு ஆர்எஸ்எஸ் அறி வித்திருப்பதானது, பாஜக தன் மதவெறி நிகழ்ச்சிநிரலை தன்னுடைய தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதற்கே துணிவளிக்கும். பாஜக, மீண்டும் ரத்தக் களறி ஏற்படக் கூடிய வகையில் நாட்டை மாற்றுவதற்குத் தன்னுடைய மதவெறி நடவடிக்கைகளைக் கூர்மைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. மதவெறி சக்தி களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால், இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பினை உயர்த்திப் பிடித்திடுவதும், மதச் சிறுபான் மையினரின் உரிமைகளைப் பாதுகாப்ப தும் அவசியமாகும். இதனை காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசியல் சேர்க்கையால் மட்டுமே செய்திட முடியும். கடந்த ஐந் தாண்டு காலத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த ஐமுகூ அரசாங்கமானது, மத வெறி சக்திகளுக்கு எதிராக உருப்படி யான நடவடிக்கை எதையும் எடுக்கா ததை அடுத்து, மாநிலங்களில் நடை பெற்ற தேர்தல்களில் - காங்கிரஸ் தோல்வி அடைந்ததையும், அங்கெல்லாம் பாஜக மீண்டும் தன்னைப் புனரமைத்துக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்ற முடிந்திருக்கிறது என்பதையும் எண் ணிப்பார்க்கும்போது, இது எந்த அளவிற்கு அத்தியாவசியம் என்பது தெரியவரும்.
இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை மையப் பகுதிக்குக் கொண்டுவந்திருப்பதிலிருந்து, ஆர்எஸ்எஸ்/பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இயல்பாக உள்ள முரண் பாடுகளை அதிகப்படுத்திட முன்வந் துள்ளன. முன்பு, வாஜ்பாய் தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐந் தாண்டுகள் ஆட்சியில் நீடிக்க முடிந்த தென்றால், அதற்கு, அவர்களே ஒப்புக் கொண்டபடி, இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை அவர்கள் ஓரம் கட்டி வைத்திருந்தது தான் காரணம். இதனை அவர்கள் மீண் டும் மையப் பகுதிக்குக் கொண்டுவரு வார்களானால், தேசிய ஜனநாயகக் கூட் டணியில் இன்னமும் நீடித்துக் கொண்டி ருக்கும் கட்சிகளில் பல, அதில் தொடர்ந்து நீடிப்பது குறித்து யோசிக்கத் தொடங்கி விடும். ஆயினும், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம், தங்களை விட்டு மிக வேகமாக வெளியேறிக் கொண்டிருக்கும் மக்கள் திரளினைத் தக்கவைப்பதற்கு, மத வெறித் தீயைக் விசிறிவிடுவதன் மூலமே சாத்தியம் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் இதில் எந்த அளவிற்குத் தீவிரம் காட்டுகிறார் களோ, அந்த அளவிற்கு தேசிய ஜனநா யகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பாஜக-விடமிருந்துத் தங்க ளைக் கத்தரித்துக் கொண்டு செல்வது அதிகமான அளவில் இருந்திடும். இது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இயல் பான முரண்பாடாகும்.
நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவது தொடர்பாகவும், அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் அடிவருடியாக இருந்திடுவதி லும் காங்கிரசை விட எந்தவிதத்திலும் குறை வைக்காத அதே சமயத்தில், பாஜக-வானது தன்னுடைய காட்டு மிராண்டித்தனமான மதவெறி நிகழ்ச்சி நிரலை அமல்படுத்த முயற்சிப்பதானது, நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜன நாயக அடித்தளங்களையே அழித்திட வும், நாட்டை நலிவடையச் செய்யவுமே இட்டுச் செல்லும். எனவேதான், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்திடவும், நாட்டு மக்களின் நலன் களைப் பேணிப் பாதுகாக்கவும், பாஜக மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக, வலுவான முறையில் ஒரு மாற்று அரசியல் அணி வகுப்பை உருவாக்க வேண்டியது அவசி யத் தேவையாகிறது என்று அடிக்கோடிட் டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.
2004 பொதுத் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில், தங்களுடைய “இந்தியா ஒளிர்கிறது” கோஷத்தின் பின்னணியில் ‘எல்லாம் நன்றாகவே நடக்கின்றன’ என்ற இறுமாப்புடன் தாங்கள் மீண்டும் நிச்சயம் ஆட்சிக்கு வந்திடுவோம் என்று பாஜக பீற்றிக்கொண்டிருந்ததைப் பார்த் தோம். அப்போது பாஜகவின் தலைவராக இருந்தவர், பாஜக தனித்து 300 இடங் களைக் கைப்பற்றும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைப் பெறும் என்றும் டமாரமடித்ததையும் பார்த் தோம். ஆனால் தேர்தல் முடிவுகள் வேறாக இருந்ததை அனைவரும் அறிவோம்.
அதேபோன்றதொரு கனவுலகத்தில், ஐமுகூட்டணியும் காங்கிரசில் ஒரு பிரிவினரும் இப்போது இருப்பதைப் பார்க்க முடிகிறது. இவர்களும் தங்கள் கன வுலகத்திலிருந்து மீண்டு, நடைமுறை உலகத்தைப் பார்க்க வேண்டிய நிலை யில் இருக்கிறார்கள். இவ்வாறு அன்றைய ஆட்சியாளர்களும் சரி அல்லது இன் றைய ஆட்சியாளர்களும் சரி, தாங்கள் கனவுலகில் சஞ்சரிப்பதற்கு ஊடகங் கள், குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங் கள், பெரிதும் துதிபாடி இவர்களை யதார்த்த நிலைக்கு வராதபடி பார்த்துக் கொள்கின்றன.
நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதை நோக்கி முன்னேறக் கூடிய விதத்தில் நாட்டின் கொள்கைத் திசைவழியில் ஒரு தீர்மானகரமான மாற்றைக் கொண்டு வரக் கூடிய வகையில் வரவிருக்கும் தேர்தலில் மக்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்திட வேண்டும். இத்தகைய அரசியல் திசைவழி மேலும் ஒருமுகப் படுத்தப்பட வேண்டியது அவசியம்.
திங்கள், 16 மார்ச், 2009
தீர்மானகரமான சக்தியாக மூன்றாவது அணி
பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக