திங்கள், 30 மார்ச், 2009

தலித் - பழங்குடியினர் - பெண்களை ஏமாற்றிய மன்மோகன் அரசு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் திங்கள் கிழமையன்று, ‘‘தலித்துகள் மற்றும் பழங்குடியினர், ’’ ‘‘பெண்கள்’’ மற்றும் ‘‘ஊனமுற்றோர்’’ தொடர்பான சிறு 
பிரசுரங்களை வெளியிட்ட அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் எம்.பி. கூறியதாவது:

ஐமுகூ அரசானது, தலித்துகள் மற்றும் பழங்குடியினர் தொடர்பாக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும் என்றும், தனியார் நிறுவனங்களிலும் கூட தலித்துகள் மற்றும் பழங் குடியினருக்கு இடஒதுக்கீட்டுக்கான சட்டம் கொண்டுவரப் படும் என்றும் உறுதிமொழி அளித் திருந்தது. ஆனால், எதனையும் செய்யாமலேயே ஐந்தாண்டு காலத்தைக் கழித்துவிட்டது. ரயில் வேயில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தலித்துகள் மற் றும் பழங்குடியினருக்கான 32 ஆயிரத்து 600 பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. 13 ஆயிரம் பதவிஉயர்வுகள், ஊழியர்களுக்குத் ‘‘தகுதி’’ இல்லை என்று கூறி மறுக்கப்பட்டிருக்கின்றன. 

எல்லாவற்றையும்விடக் கொடுமை, உயர் கல்வி நிறுவனங் களில் 47 நிறுவனங்களுக்கும் மற் றும் பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்கும் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிப்பதற்காக ஐமுகூ அரசாங் கம் ஒரு சட்டமுன்வடிவையே கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டுவந்தது. இடது சாரிகள் மற்றும் மதச்சார்பற்றக் கட்சி கள் அவற்றைக் கடுமையாக எதிர்த்து முறியடித்தன. 

தலித்துகள் மற்றும் பழங்குடி யினருக்கு நிலம் மறுவிநியோகம் செய்யப்படும் என்று ஐமுகூ அர சாங்கம் உறுதி அளித்தபோதிலும், அதனை நிறைவேற்றாதது மட்டு மல்ல, பன்னாட்டு கார்ப்பரேட் நிறு வனங்களுக்கும் தனியார் நிறுவ னங்களுக்கும் நிலஉச்சவரம்பைத் தளர்த்தி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தாரை வார்த்திருக்கின்றன.

அரசின் செலவினங்களில் தலித்துகளுக்கு 16 சதவீதமும், பழங்குடியினருக்கு 6 சதவீதமும் ஒதுக்க வேண்டும் என்று அரசின் கொள்கை வலியுறுத்துகிறபோதி லும், அரசாங்கம் தலித்துகளுக்கு இதில் பாதி அளவைக்கூட ஒதுக்கவில்லை, பழங்குடியின ருக்கு வெறும் 4 சதவீதம் அள விற்கே ஒதுக்கியுள்ளன.

பெண்கள்

ஐமுகூ அரசாங்கம் தன் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் ‘‘பெண்கள் அரசியல் ரீதியாகவும், கல்விரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும், சட்டரீதியாகவும் முழுமையான அளவில் வலுப் படுத்தப்படுவார்கள்’’ என்று பிரகடனம் செய்திருந்தது. ஆனால் இதனை நிறைவேற்றக்கூடிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்களுக்கு நாடாளுமன்றம் - சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீட்டிற் கான சட்டமுன்வடிவை நிறை வேற்றவும் முன்வரவில்லை. பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லைக்கு உட்படுத் தப்படுவதற்கு எதிராக முறையான சட்டம் நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருந்தது. அதனையும் நிறைவேற்றவில்லை. 

உலகப் பொருளாதார மந்தம் பெண்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பனியன் போன்ற ஏற்றுமதி சார்ந்த துறைகளில் ஈடு பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான பெண்களை வேலையிலிருந்து வெளியேற்றிவிட்டது. ஆயினும் அரசு, தொழிலாளர்களுக்கு நிவா ரணம் எதுவும் அளிக்க முன்வர வில்லை. மாறாக, கார்ப்பரேட் நிறு வனங்களுக்கே ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.

ஊனமுற்றோர்

நாட்டில் ஊனமுற்றோர் மக் கள் தொகை சுமார் 6 சதவீதமாகும். ஆனால் அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடையாது. மத் திய அமைச்சர் ப.சிதம்பரம், பதி னோராவது ஐந்தாண்டுத் திட்டத் தின் மூலம் ஊனமுற்றோருக்கு வேலை அளிப்பதற்காக 1,800 கோடி ரூபாயில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலைகள் உருவாக்கப் படும் என்று தம்பட்டம் அடித்தார். ஆனால் அவரே நாடாளுமன்றத் தில் ஒப்புக்கொண்டபடி, திட்டம் அமலுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆனபிறகும், ஒருவர் கூட வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வில்லை.

இவ்வாறு தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், ஊனமுற்றோர் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்தப்பட உருப்படியான நடவடிக்கைகள் எதையும் ஆட்சியிலிருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியோ அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணியோ எடுக்கவில்லை. 

எனவே, இவர்கள் தங்களை சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், கல்விரீதியாகவும் மேம்படுத்திக்கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தலைமையிலான மாற்று அணியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

இவ்வாறு பிருந்தாகாரத் கூறி னார். (ந.நி.)

கருத்துகள் இல்லை: