திங்கள், 30 மார்ச், 2009

மாற்று ஆட்சி மலரும்! காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக மக்கள் தெளிவான தீர்ப்பு அளிப்பார்கள் ஜோதிபாசு உறுதி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் நாட்டு மக்கள் வீழ்த்துவார்கள் என்றும், மதச்சார்பற்ற மாற்று அணி உறுதியாக ஆட்சி அமைக்கும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசு கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்க மொழி நாளேடான `கண சக்திக்கு ஜோதிபாசு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், மக்கள் நலனுக்கு எதிரான கொள்கை களை கடைப்பிடிக்கும் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் மாற்றாக நாட்டு மக்கள் முன்பு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற உண்மையான மாற்று அணி இடதுசாரிகள் உள்ளிட்ட மூன்றா வது மாற்று அணியே என்று குறிப்பிட் டார். மேலும் அவர் கூறியதாவது:-

கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலுக்கும், தற்போது நடைபெற உள்ள 15-வது மக்களவைத் தேர்தலுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு கள் உள்ளன. கடந்த தேர்தல் முடிந்த பின்னர் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் பொருட்டு, காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தச் சூழலில் பாஜக தலைமையி லான ஆட்சி அமைந்தி ருந்தால், அவர்கள் இந்த தேசத்தையே ஒரு குஜராத்தாக மாற்றியிருப்பார்கள். அதை தடுத்து நிறுத்தும் ஒரே நோக் கத்திற்காகவே காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தோம். கம்யூ னிஸ்ட்டுகள் தங்கள் வாழ்நாள் முழு வதிலும் காங்கிரஸ் கட்சியை தீவிர மாக எதிர்த்தே வந்துள்ளோம். ஆயி னும் மதவெறி சக்திகளை தடுத்து நிறுத்த இந்தப் போராட்டத்தையும் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அந்த ஆதரவை நிபந்தனை யில்லாமல் அளிக்கவில்லை. குறைந்த பட்ச பொதுத்திட்டத்தை நிறைவேற் றுவதாக அளித்த உறுதியின் அடிப்ப டையிலேயே ஆதரவு நல்கினோம்.

ஆனால், நாலரை ஆண்டு கால ஆட்சியில் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு இந்த நாட்டு மக்களின் வாழ்வை நாசமாக்கி விட்டது. எங் களிடம் உறுதியளித்த குறைந்தபட்ச பொதுத்திட்டத்தை அவர்கள் நிறை வேற்றவில்லை. நமது தேசத்தின் இறை யாண்மையை, சுயேட்சையான அயல் துறைக் கொள்கையை அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடகு வைத்தார் கள். இந்திய நாட்டு மக்களின் நல னுக்காக ஆட்சி நடத்த வேண்டிய அவர்கள், அமெரிக்காவின் நலனுக் காக ஆட்சி நடத்துகிறார்கள். எனவே தான் ஆதரவை வாபஸ் பெற்றோம்.

இப்போது மக்கள் தீர்ப்பளிக்க வேண்டிய நேரம். சாதாரண ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பணி யாற்றுகிற, மதவெறி அபாயத்தை முறியடித்து மதச்சார்பின்மை கொள் கையை உயர்த்திப் பிடிக்கிற ஒரு அரசு மத்தியில் அதிகாரத்தில் அமர்வது அவசியம். அப்படிப்பட்ட அரசு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தலை வணங்காது. நாடு முழுவதும் இத்த கைய பிரச்சாரத்தைத்தான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற் கொண்டுள்ளது.

காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத, மதச்சார்பற்ற, ஜனநாயக அரசை மத்தியில் ஆட்சியில் அமர்த் துவதே எங்களது கட்சியின் நோக்கம். மூன்றாவது அணி என்று நாம் குறிப் பிடுகிற மாற்று மதச்சார்பற்ற அணி யின் ஆட்சி உறுதியாக அமையும்.

இந்த நோக்கத்தோடு இடதுசாரிக் கட்சிகள் விடுத்த அழைப்புக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத் துள்ளதைப் பார்க்கிறோம். பல்வேறு மாநில கட்சிகள் இந்த அணியில் இணைந்துள்ளன. சில குறிப்பிட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த அணி ஒற்றுமையுடன் செயல் படும். பல்வேறு விதமான தளங்களில் இயங்கும் கட்சிகளை ஒருங்கி ணைத்து ஒரு மூன்றாவது அணி என்ற கட்டமைப்பை உருவாக்குவது கடின மான பணிதான். ஆனாலும், அதை சாதித்துக் காட்டியிருக்கிறோம். ஏனென்றால், காங்கிரசும், பாஜகவும் அடுத்தடுத்து ஆட்சி நடத்திய போதி லும், அவர்கள் பின்பற்றிய கொள் கைகள் முழுக்க முழுக்க சாதாரண மக் களின் நலனுக்கு எதிராகவே இருந்தன. எனவேதான் இவர்களுக்கு எதிரான மூன்றாவது மாற்று அணி தற்போது உண்மையாகி இருக்கிறது. மக்கள் இந்த அணியின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் இந்த அணிக்கு ஆதரவாக தங்களது தீர்ப்பினை தெளிவாக அளிப்பார்கள் என்று உறுதிபட நம்புகிறேன்.

(ஐஎன்என்)

2 கருத்துகள்:

சந்திப்பு சொன்னது…

Com. Jyothi Basus's views will be victory.

பெயரில்லா சொன்னது…

next prime minister j. jeyalalitha ... jinthaabhaath