புதன், 1 ஏப்ரல், 2009

பொதுத்துறை `கோயில்களின்' கற்களை உருவி...


கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகரான ஜவஹர் லால் நேரு, பொதுத்துறை நிறுவனங்களை இந்தியாவின் கோயில்கள் என்றார். ஏனென்றால் தமக்கு நம்பிக்கையில்லையென்றாலும் நாட்டில் பெரும் பாலான மக்கள் கடவுளை நம்புகிறார்கள். கோயில்களை மதிக்கிறார்கள். புனிதமெனக் கருதுகிறார்கள். அதே நிலையில் வைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாப்பார்கள் என்று நம்பி அப்படி அவர் சொல்லி யிருக்கலாம்.

ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற நாசகர கோஷத்துக்குப் பின் வந்த பிரதமர்கள் கோயில் கோயிலாகச் சுற்றி னார்கள்; யாகம் வளர்த் தார்கள்; சாமியார்களின் பாதம் தாங்கி ஆசிபெற் றார்கள். ஆனால் தேசத் தைக் காக்கும் பொதுத் துறை கோயில்களின் கற் களை உருவிச் சிதைக்கத் தொடங்கினார்கள்.

மக்களின் வரிப்பணத்தில் ஊழியர்களின் உதிரம் சுண்டிய உழைப்பிலும் வளர்ச்சியடைந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் ராஜீவ் காந்தி தொடங்கி வாஜ்பாய் இடையிட்டு மன்மோகன் சிங் வரை இந்தக் கொள்கை மாற வில்லை.

இடதுசாரிக் கட்சி களின் குறிப்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் குரல் ஓங்கி ஒலிக்கா திருந்தால் - பொதுத்துறை நிறுவனங்களைப் பாது காக்க வேண்டும் என்ற உணர்வை ஊழியர்களி டமும் பொதுமக்களிட மும் ஏற்படுத்தி இயக்கம் நடக்காதிருந்தால் ப.சிதம் பரத்தின் நிதிப்பசிக்கு இவையெல்லாம் சோளப் பொறியாகியிருக்கும்.

இதே உணர்வோடு தான் 15 வது மக்களவைத் தேர்தலுக்கான சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கையிலும் பொதுத்துறை பாதுகாப்பு என்ற கொள்கை முக்கியத் துவம் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல அடிப்படைத் தன்மை வாய்ந்த முக்கிய மான பிரிவுகளில் பொதுத் துறை விரிவாக்கப்பட வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறு வனங்களுக்கான மூலதனத் தை அதிகரிக்க வேண்டும்; தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என் பதும் கவனத்துக்குரிய அம்சங்கள்.

லாபம் ஈட்டும் நிறுவ னங்களின் பங்குகளை விற்கவும் கூடாது; அவற்றை தனியார்மயமாக்கவும் கூடாது. இதேபோன்ற கோரிக்கை, லாபம் ஈட்டும் வாய்ப்புள்ள நிறுவனங் களுக்கும் பொருந்தும் என் கிறது அந்த அறிக்கை.

பொதுத்துறை நிறு வனங்கள் பாதுகாப்பு என் றால் தனியார் நிறுவனங் களே தேவையில்லை என் பதல்ல, உற்பத்தித் துறை யிலும் சேவைத் துறைகளி லும் தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்தலாம்; தனி யார் நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பது வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆராய்ச்சி, வளர்ச்சிக்கான முயற்சி ஆகியவற்றோடு இணைக்கப்பட வேண்டும்.

உலகமயம் என்பது நாடுகளையெல்லாம் கிரா மங்களாக்கி நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டதாகச் சொல்கிறார்கள். இது கேட்க இனிப்பாக இருந் தாலும் நடைமுறையில் கசப்பாக உள்ளது. ஒன்று வெளிநாட்டு நேரடி முதலீடு என்ற போர்வையில் உள்நாட்டு நிறுவனங் களையே பல வெளிநாட்டு நிறுவனங்கள் தன்வசப் படுத்துகின்றன. மற் றொன்று - இறக்குமதி பொருள்களுக்கு வரிச் சலுகை அளிப்பதன் மூலம் உள்ளூர் தொழில்கள் நசுங் குகின்றன; உற்பத்தி குறை கிறது. கடைசியாக இது தொழிற்சாலை மூடலுக்குக் காரணமாகிவிடுகிறது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளைத் தடுப் பதற்கு வலுவான எதிர்ப்பு எழுந்தாலும் கொல்லைப் புற வழியாக நுழைய முயற்சி நடக்கிறது. இத னைத் தடுக்க இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளில் மாற்றம் செய்ய வேண் டும். வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை என்பது உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு உரியவையாக இருக்க வேண்டும்; அல்லது புதிய தொழில் நுட்பத்திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற முன்மொழிவு எண்ணத் தக்கதாகும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று சொல்லப்படும் இடங் களில் உள்ள தொழிற் சாலைகள் தனியார் துறை யிலேயே மிகுந்த ஆதிக்கம் உள்ளதாக இருக்கின்றன. இங்கே தொழிலாளர் உரி மைகள் மதிக்கப்படுவதில் லை. தொழிலாளர் சட்டங் களும் அமலாவதில்லை. இவை இரண்டும் தவிர்க் கப்பட்டு கண்டிப்பான அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.

கோடிக்கணக்கான மக் களின் சுயதொழிலாக இருப்பது சில்லறை வியா பாரமாகும். இந்த வியா பாரத்தையும் லாபவேட் டைக்காரர்கள் விட்டு வைப்பதாக இல்லை. உள் நாட்டைச் சேர்ந்த ரிலை யன்ஸ் போன்ற பெரு முத லாளிகளும் வால்மார்ட் போன்ற வெளிநாட்டுப் பகாசுர நிறுவனங்களும் இந்த வியாபாரத்தில் நுழைந்து லட்சக்கணக் கான குடும்பங்களின் குறைந்த வருவாயையும் விழுங்கப்பார்க்கின்றன.

இவற்றில் வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக் கப்படவே கூடாது. உள் நாட்டுப் பெருநிறுவனங் கள் உரிமம் பெற்று எந் தெந்த வியாபாரத்தில் ஈடு படலாம் என்பதை முறைப் படுத்துவது அவசியம்.

இதையெல்லாம் செய்யாதவர்கள் தேர்தலுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏமாற் றுப்பேர்வழிகளை அம்ப லப்படுத்த சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை பிரச் சாரப் போர்வாளாகப் பயன்படும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

yes... informative ))