வியாழன், 2 ஏப்ரல், 2009

நாட்டு நலனில் இடதுசாரி கட்சிகள்

நெல்லை ஆறுமுகம்

கடந்த காலத்தில் மத்திய அரசில் சரண்சிங் தலைமையிலான ஜனதா ஆட்சி அமைக்க, இடதுசாரி எம்.பிக் களின் ஆதரவு தேவைப்பட்டது. இதற்கு இடதுசாரிகள் நிபந்தனை விதித்தனர். ஆட்சியில் மந்திரி பதவி கேட்டு அல்ல. இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ரயில்வே ஊழியர் வேலை நிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர் கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். வழங்கப் பட்ட போனஸ் ரத்து செய்யப்பட்டது. சரண்சிங் அரசு, டிஸ்மிஸ் ஆன ஊழியர் களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண் டும். போனஸ் திரும்ப வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தனர். சரண் சிங் அரசு இதற்கு ஒத்துக் கொண்டு மீண்டும் வேலை வழங்கியது. போனஸ் கொடுத்தது. இடதுசாரிகளும் புதிய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தனர்.

இதேபோல் குஜ்ரால் தலைமையி லான ஐக்கிய முன்னணி அரசு, மத்தியில் ஆட்சியில் அமர மார்க்சிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதிய மத்திய அரசில் பங்குபெற்று ஆதரவு கொடுத்தது. இந்த ஆட்சிக்காலத்தில் ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான 5வது மத்திய அரசு ஊழியர் ஊதியக்குழு, 40 சத வீத ஊதிய உயர்வு வழங்க சிபாரிசு செய் தது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 20 சதவீதத்திற்கும் மேல் ஊதிய உயர்வு வழங்க முடியாது என நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். இதற்கு இடது சாரிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப் பும், ஆட்சிக்கான ஆதரவை திரும்பப் பெறுவோம் என்றும் கூறியதால், மத்திய அரசு, இடதுசாரி எம்.பியும் மத்திய அமைச்சருமான இந்திரஜித்குப்தா தலைமையில் அமைச்சரவை குழு அமைத்தது. இந்த குழுவின் முடிவுப்படி ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்த பின், முதல் முறையாக 40 சதவீத ஊதிய உயர்வை இடதுசாரிகள் ஆதரவுடன் அமைந்த மத்திய ஆட்சியில்தான் பெற முடிந்தது.

மன்மோகன் சிங் தலைமையிலான தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், இடதுசாரிகள் வெளியே இருந்து கடந்த 4 ஆண்டு களுக்கு ஆதரவு கொடுத்தனர். முதன் முறையாக குறைந்தபட்ச திட்டம் வகுத்து செயல்பட, அரசை கூற முடிந்தது. இதன் மூலம் பொதுத்துறையை தனியார்மய மாக்குவதையும், இதில் அந்நிய முதலீடு அதிக அளவில் நுழைவதையும் தடுக்க முடிந்தது. வங்கியை தனியார்மயமாக்கு வதை நிறுத்த முடிந்தது. இதன்மூலம் உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி பொருளாதார மந்தம், இந்தியாவில் பெரும் அளவில் ஏற்படாமல் தடுக்க முடிந்தது. புதிய பென்சன் திட்டத்தில் குவியும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம், ஊழியர்களின் நலனுக்கு எதிராக, தனியார் நிர்வகிக்கும் அரசு திட்டத்தை கைவிட வைத்து, பொதுத் துறை நிர்வகிக்க உத்தரவிட முடிந்தது. கிராமப்புற 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி வரி கூடுதல் 2 சதவீதத்தை, துவக்க கல்விக்கு மட்டும் செலவிட தனி அமைப்பு ஏற்படுத்த முடிந்தது.

இதுவரை 61 இடதுசாரி எம்.பிக்களை வைத்துக் கொண்டு மத்திய அரசின் கொள்கைகளில் சில மாற்றங்கள் கொண்டுவர முடிந்தது என்றால், இந்த தேர்தலில் இடதுசாரிகளின் பலத்தை மேலும் அதிகப்படுத்தினால், மக்கள் நலன் காக்கும் பொருளாதார கொள்கை களை வகுக்க முடியும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய முடியும். வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். பொதுத்துறையை வலுப்படுத்த முடியும். பறிக்கப்பட்ட தொழிலாளர் நலச்சட்டத் தை கொண்டுவரமுடியும். நிலச்சீர்திருத் தம் செய்ய முடியும். மாநிலங்கள் கூடுதல் நிதி பெறவும், அதிகாரப் பகிர்வு அளிக்க வும் முடியும். பெட்ரோல்-டீசல் விலை களை குறைத்திட முடியும். வருங்கால வைப்பு நிதி வட்டியை குறைக்காமல் இருக்க முடியும். தற்போது நடைபெறவுள்ள தேர்தல் அகில இந்திய அளவில் உள்ள கொள்கைகளை தீர்மானிக்கும் தேர்தலாகும்.

எனவே கடந்தகால அனுபவத்தை கருத்தில் கொண்டு, சரியான கொள்கை யுடன் புதிய மத்திய அரசு அமைய வேண் டியதுள்ளது. இதில் மக்கள் நலனில், ஊழியர் நலனில் அக்கறையுள்ள இடது சாரிகளின் பலத்தை அதிகமாக்க வேண் டும். அதனால் இந்த நாடாளுமன்ற தேர் தலில் இடதுசாரிகள் மற்றும் அதனுடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சி களின் பக்கம் மக்களும் உழைக்கும் வர்க் கமும் நிற்க வேண்டும்.

3 கருத்துகள்:

அருணாச்சலா சொன்னது…

\\நாட்டு நலனில் இடதுசாரி கட்சிகள்//

எந்த நாட்டு நலனில்.. சீனாவின் நலனிலா..

பெயரில்லா சொன்னது…

நெல்லை ஆறுமுகம் சார், நீங்க ஒன்னு, இடது சாரிகளை வைத்து காமெடி கிமெடி பண்ணலையே.. ஆனாலும் நீங்க ரொம்ப தமாஷ் பண்ணறீங்க

விடுதலை சொன்னது…

அய்யா அருனாசலம் நீங்க என்ன அமெரிக்காவை சேர்ந்தவரா இல்லை ஆப்பரிக்காவை சேர்ந்தவரா தெரியவில்லை என்றால் பக்கத்தில பா.சியும் , மண்மோகனும் இருந்த கேட்டு சொல்லுங்க