வெள்ளி, 3 ஏப்ரல், 2009

மூன்றாவது அணி முக்கியத்துவம் பெறும்: சரத் பவார் காங்கிரசுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சி என்ற சகாப்தம் முடிந்து, கூட்டணி ஆட்சி என்ற சகாப்தம் நிலை கொண்டுள்ளது என்றும், 15-வது மக்களவைத் தேர்த லின் முடிவில் மூன்றாவது அணி மிகுந்த முக்கியத் துவம் பெறும் என்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் (என்சிபி) தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

15-வது மக்களவைத் தேர்தலில் நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இடது சாரிகள், முக்கிய மாநிலக் கட்சிகள் அடங்கிய மூன்றா வது மாற்று அணி என மும்முனைப் போட்டி ஏற் பட்டுள்ளது.

இதில், காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி கள் ஒவ்வொன்றாக வெளி யேறிய நிலையில், காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியில் உள்ளது. இந்த நிலை மையில், காங்கிரஸ் அணி யில் தற்போது நீடிக்கும் முக் கிய கட்சிகளில் ஒன்று சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி).

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரசுக்கும், என்சிபிக்கும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், மேகாலயாவில் என்சிபி தலைமையில் நடைபெற்று வந்த மாநில அரசு, சமீபத்தில் மேகாலயா சட்ட மன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற போதிலும், அதை ஏற்றுக் கொள்ள முடியாத காங்கிரஸ் தலைமை, அராஜகமான முறையில் தலையிட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது.

இதனால், என்சிபிக்கும், காங்கிரசுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற் பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய முற் போக்கு கூட்டணியின் பிர தமர் வேட்பாளர் மன் மோகன் சிங்தான் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னிச் சையாக அறிவித்தார். இத னால், என்சிபி தலைவர் சரத் பவார் ஆத்திரம் அடைந் துள்ளார். இந்த முறை பிரதமர் பதவி மகாராஷ் டிராவைச் சேர்ந்த ஒருவ ருக்கே வழங்கப்பட வேண்டுமென்று அவர் கருத்துக் கூறி வரும் நிலை யில், மன்மோகன் சிங் பிரத மர் என்பதை ஏற்றுக் கொள் வதில் என்சிபி தயக்கம் காட்டுகிறது.

இத்தகைய பின்னணி யில், என்சிபி, தேர்தல் முடிந்த பின்னர் மூன்றாவது மாற்று அணியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதத்தில், சரத் பவார் கருத்து வெளி யிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மாதா தொகுதியில் போட்டி யிடும் சரத் பவார், கடந்த மார்ச் 31-ம்தேதி சோலாப் பூரில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வையொட்டி `இந்து’ ஏட்டின் செய்தியா ளர் மீனா மேனனுக்கு அவர் அளித்த பேட்டியில், மூன் றாவது அணியின் முக்கி யத்துவம் பற்றி வெளிப் படையாக தெரிவித்துள் ளார்.

மக்களிடையே நிலவும் உண்மையான நிலவரத்தை எங்களது கட்சி ஊழி யர்களிடமிருந்து புரிந்து கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்ட சரத் பவார், கள நிலவரத்தை கணக்கில் கொண்டே செயல்படுவதா கவும், தேர்தல் முடிந்த பின் னர் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் அள விற்கு போதிய எண் ணிக்கை கிடைக்காவிட் டால் மூன்றாவது அணி மிகவும் முக்கியத்துவம் பெறும் என்றும் குறிப்பிட் டார்.

அப்போது காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று, பெரும் சக்தி யாக எழும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று குறிப்பிட்ட சரத் பவார், எனினும் தேர்தலுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்பதை இப்போதே சொல்வது பொருத்தமான தாக இருக்காது என்றும் குறிப்பிட்டார். சரத் பவா ரின் இந்த கருத்துக்களால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

மேலும் ஒரு அதிர்ச்சி

இந்த அதிர்ச்சியோடு காங்கிரஸ் தலைமைக்கு மேலும் ஒரு அதிர்ச்சி யையும் சரத் பவார் அளித் துள்ளார். ஒரிசா மாநிலத் தில் பிஜூ ஜனதா தளம் தலைமையில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றாவது மாற்று அணி கட்சிகள் தொகுதி உடன்பாடு கண்டுள்ளன.

இந்தக் கட்சிகளுடன் சரத் பவாரின் என்சிபியும் இணைந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதி உடன்பாட்டில் என்சிபிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள் ளது.

இந்நிலையில், ஒரிசா மாநிலத்தில் தேர்தல் பிரச் சாரத்தை துவக்கும் விதத்தில், ஏப்ரல் 3 அன்று (வெள்ளி ) புவனேஸ்வரத்தில் பிரம் மாண்டமான பேர ணிக்கு பிஜூ ஜனதா தளம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் பேரணியில் அக்கட்சியின் தலைவரும், ஒரிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, சிபிஐ பொதுச்செயலாளர் ஏ.பி. பரதன், டி.ராஜா ஆகிய தலைவர்கள் பங்கேற்கின் றனர்.

இவர்களோடு என்சிபி தலைவர் சரத் பவாரும் இப்பேரணியில் பங்கேற்று பேசுவதாக அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் மட் டும் காங்கிரசுடன் கூட்டணி போதும் என்ற நிலை பாட்டை சரத்பவார் அதிரடியாக மேற்கொண் டுள்ளது குறித்து காங்கிரஸ் தலைமை ஏமாற்றமும், வருத்தமும் தெரிவித்துள் ளது.

கருத்துகள் இல்லை: