வெள்ளி, 3 ஏப்ரல், 2009

வித்தியாசமான கட்சியின் வித்தியாசமான வேட்பாளர்கள்

வித்தியாசமான கட்சி என்று கூறிக் கொள்ளும் பாஜக, அதை அடிக்கடி நிரூபித்து வருகிறது. நாடா ளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம், ஆயுத பேரம் முடிக்க கட்சித் தலை வரே லஞ்சம் வாங்கி கேமிரா முன்பு கையும் கள வுமாக சிக்கியது போன்ற பெருமை மிக்க வரலாறு அக்கட்சிக்கு உண்டு. இந்த மக்களவைத் தேர்தல் முடி வடைவதற்குள் மேலும் பல பெருமைகள் அக்கட் சிக்கு கிடைக்கலாம்.

டில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சுதன் ஷூ மிட்டலுக்கு, கட்சியில் வட கிழக்கு மாநில கூடுதல் பொறுப்பாளர் பதவி அளித்ததால் அந்த பதவியை கவனித்துவந்த அருண் ஜேட்லி கோபமடைந்தார். இந்த விஷயத்தில் ராஜ்நாத் சிங் யாரிடமும் ஆலோ சனை கலக்காமல் தன்னிச் சையாக நடந்து கொள்வ தாக பாஜக தலைவர்கள் சிலர் புலம்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ராஜ் நாத் சிங் சொல்லும் ஒரே பதில் இதுதான். “பல தொழில் அதிபர்களுடன் மிட்டலுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் கட்சிக்கு தேர்தல் நிதியை வசூலிக்க அவரே சரியான ஆள்” என்கிறார்.

ஒரிசாவில் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஒரிசாவில் லட்சு மணானந்த சரஸ்வதி கொல் லப்பட்ட பின்னர் நடை பெற்ற மதக் கலவரத்தின் போது காந்தமால் பகுதியில் 40 கிறிஸ்தவர்கள் உயி ரோடு எரித்துக்கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்ற வாளியும் முன்னாள் ரவுடி யுமான மனோஜ் பிரதானுக்கு சட்டப் பேரவைத் தேர்த லில் போட்டியிட பாஜக டிக்கெட் வழங்கியுள்ளது. தற்போது சிறைக் கம்பி களை எண்ணிக்கொண்டி ருக்கும் அவன், காந்தமால் மாவட்டத்திற்கு உட்பட்ட உதயகிரி தொகுதியில் போட்டியிடுகிறான்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் அம்மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடிமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பாஜக தோற் றுப்போனது. எனவே மனோஜ் பிரதான் மூலமாக மக்களை மதரீதியாக பிளவு படுத்தி தேர்தலில் ஆதாயம் அடையலாம் என பாஜக கணக்குபோடுகிறது.

இதுமட்டுமல்ல உத்தரப் பிரதேச மாநிலத்தில் அஸம் கார் தொகுதியில் போட்டி யிடும் பாஜக வேட்பாளர் ராமாகாந்த் யாதவ் மீது குண்டர் தடுப்புச்சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம், ரவுடிக்கும்பல் ஒழிப்புச் சட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 17 வழக்குகள் உள்ளன. இவ ருக்கு டிக்கெட் அளிக்கக் கூடாது என்று அந்த தொகு தியைச் சேர்ந்த பாஜகவி னரே கட்சியின் தலை மைக்கு கோரிக்கை விடுத் தனர். ஆனால் தலைமையோ ராமாகாந்த் தான் வேட்பா ளர் என்று அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநி லம் மன்டலா (தனி) தொகு தியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஃபகன் சிங் குல்ஸ்தே நாடாளுமன்றத் தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்.

இதுமட்டுமல்ல, மதக்க லவரத்தை தூண்டியவர்கள் மற்றும் குற்ற பின்னணி கொண்ட பலரும் பாஜக வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டுள்ளனர்.

பாஜக வேட்பாளர்க ளின் யோக்கியதை இப்படி இருக்கையில், நேர்மையான ஆட்சியை அமைப்போம் என்று அக்கட்சியும் கூறுவது தான் வேடிக்கையாக உள்ளது.

அ.விஜயகுமார்

2 கருத்துகள்:

அருணாச்சலா சொன்னது…

நம்ம கட்சியில் கேரளாவில் பினாரயி விஜயன் என்று ஒரு பிரகிருதி அடித்த ஊழல் பணம் பற்றி நம்மளுக்கு எதாச்சும் அறியுமோ.

அப்படியே கோவை குண்டு புகழ் மதானி கட்சியுடன் நம்ம கூட்டு பற்றி அறியுமோ.

விடுதலை சொன்னது…

நன்பர் அருனாசலம் உங்களுக்கு தெரியாது போல நினைக்கிறேன் பினாரயி விஜயன் மீது வழக்கு போட சொல்லிய காங்கிரஸ் கட்சியும், சிபிஐ சந்தி சிரிப்பதை பார்த்து உங்களுக்கு கஷ்டமா இருந்தா பிஜேபி காரங்கிட்ட பஞ்சி வாங்கி அடைத்துகொள்ளுங்கள் நன்பரே!

குண்டு வைப்பது, சாமியார்கள் முன்நின்று செய்துவது, தேர்தல் வந்தால் மதவாதையும் ராமரை கையில் எடுப்பது யார் என்பது தங்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொன்ன நபர் பற்றி தங்களுக்கு ஊடங்கள் சொன்ன தகவலை தவிரவேறு எதும் தெரியாது என்று புரிகிறது