செவ்வாய், 21 ஏப்ரல், 2009

தமக்கான பங்கை கேட்பதும் பெறுவதும் உரிமை

நிதிப்பொறுப்பு மற்றும் பட் ஜெட் நிர்வகிப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக் கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசின் நிதிப்பற்றாக் குறையை ஆண்டுதோறும் 0.3 சதவீத அளவுக்கும் வருவாய்ப் பற்றாக் குறையை 0.5 சதவீத அளவுக்கும் குறைப்பதற்கு வகை செய்வது இந்தச் சட்டம்.

2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி காங்கிரஸ் தலைமை யிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இந்தச் சட்டம் அமலாக்கப்பட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இருப்பினும் இது அதற்கு முந்தைய பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசால் நிறைவேற்றப்பட்டு விட்டது.

இந்தச் சட்டம் கூட இவர்களின் சுய சிந்தனையில் உருவானதல்ல. வெளிநாடுகளிலிருந்து கடன் வாங் கப்பட்டதுதான். அதிலும் குறிப் பாக இந்திய ஆட்சியாளர்களுக்கு `நெருக்கமான’ அமெரிக்கா உள் ளிட்ட நாடுகளிலிருந்து காப்பியடிக் கப்பட்டது.

க்ராம்-ரூட்மேன்-ஹாலிங்ஸ் சட்டம் என்று அமெரிக்காவால் நாமகரணம் சூட்டப்பட்டுள்ளதன் மறுபதிப்புதான் நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வகிப்புச் சட்டம். இதே போன்று “வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை சட்டம்” என்று ஐரோப்பிய நாடுகள் ஒன் றியத்தில் இயற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டங்கள் எல்லாம் இந்த நாடுகளிலேயே கூட பெரும் பயனை விளைவிக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். நிலைமை இப்படி இருக்க இந்தியாவில் இந்தச் சட் டத்தை நிறைவேற்றியதோடு நில் லாமல் மாநில அரசுகளும் இத னைப் பின்பற்ற வேண்டும் என் கிறது மத்திய அரசு.

இந்தச் சட்டத்தின் மோசமான அம்சம் என்னவென்றால் இதில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் நிதிப் பற்றாக்குறையையும் வருவாய்ப் பற்றாக்குறையையும் குறைக்க முடி யாமல் போனால் அதனை ஈடுகட்ட வேலைவாய்ப்பு உறுதி உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களின் நிதி குறைக்கப்படும் என்பதுதான்.

வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட மிகப்பெரிய காரணம் வரி ஏய்ப்பு தான். ஏழை, எளிய நடுத்தரப்பிரிவு மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் மறைமுகவரிகள் பெரும்பாலும் இலக்கை எட்டிவிடும். ஆனால் நேர் முகவரிகள் இலக்கை எட்டுவது அவ்வளவு எளிதல்ல; செல்வந்தர் கள் செய்யும் வரி ஏய்ப்பால் வரு வாய்ப்பற்றாக்குறையின் அளவைக் குறைக்க இயலாமல் போனால் அதற்கு ஏழை எளிய மக்களுக்கான நலத் திட்டங்களை வெட்டிச் சுருக்கு வது என்ன நியாயம்? என்பதுதான் இங்குள்ள கேள்வி.

இதனால்தான் சட்டைக்கு ஏற்ப உடலை வெட்டச் சொல்லும் இந்த சட்டம் ரத்து செய்யப்படும் என்று சிபிஎம் தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. சிபிஎம் தலைமையி லான மேற்குவங்க இடது முன்னணி அரசின் நிதியமைச்சர் அசிம்தாஸ் குப்தா 2008-2009 பட்ஜெட் கூட்டத் தின் போது கூட மத்திய அரசின் சட்டம் பின்பற்றப்படமாட்டாது என்று உறுதியாகக் கூறினார். அது மட்டுமல்ல, சிறுசேமிப்பு நிதிக்கு ஈடாக ஆயிரம் கோடி ரூபாயையும் பல்வேறு இனங்களில் தரவேண்டிய ராயல்டி தொகை 7 ஆயிரம் கோடி ரூபாயையும் மத்திய அரசு கொடுத் தால் இதுபற்றி பேசலாம் என்று அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

நிதிக்கும் வரிவருவாய்க்கும் ஏரா ளமான வழிகளைத் திறந்துவைத் துள்ள மத்திய அரசு மாநில அரசு களுக்குக் கட்டுப்பாடுகளை போதிப் பதை நிறுத்த வேண்டும் என்பதன் வெளிப்பாடுதான் நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வகிப்பு சட்டம் ரத்து செய்யப்படும் என்ற வாக் குறுதியாகும்.

பொதுமக்கள் நலனுக்காகப் பல திட்டங்களை நிறைவேற்ற வேண் டிய நேரடி பொறுப்பு மாநில அரசு களுக்குத்தான் இருக்கிறது. எனவே இதற்குத் தேவையான நிதியைத் திரட்ட கடன் வாங்கிக்கொள்ளும் அளவை அதிகரித்தல், என்பதோடு மாநில அரசுகளின் கடன் நிலுவைத் தொகை கழுத்தை நெறிக்காமல் முழுமையான நிவாரணம் வழங்கு தல் என்ற வாக்குறுதிகளாகும்.

நாடு முழுவதும் திரட்டப்படும் மத்திய அரசின் வருவாயில் பாதியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் சரியான அணுகுமுறையாகும். ஆனால் இந்த அணுகுமுறை இதுவரையிலான மத்திய அரசுகளால் பின்பற்றப்பட வில்லை. இதுவும் பின்பற்றப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் வெளிச்சந்தையில் திரட்டப் படும் கடன் தொகையில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்பதும், கூட்டாட்சித் தத்துவத் திற்கு வலுசேர்ப்பதாகும்.

மத்திய அரசின் நிதி உதவியோடு பல திட்டங்கள் மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந் திரா வீட்டு வசதித் திட்டம், ஜவ ஹர்லால் நேரு சாலைகள் மேம் பாட்டுத் திட்டம் போன்ற பழைய திட்டங்களும் கிராமப்புற வேலை உறுதித் திட்டம் போன்ற புதிய திட்டங்களும் இவற்றில் அடங்கும். இந்தத் திட்டங்களைச் செயல்படுத் துவது மாநில அரசின் விஷயமாக மாற்றப்படும்; இதற்கான நிதியும் மாநில அரசுகளிடமே வழங்கப் படும் என்ற வாக்குறுதியும் மாநில அரசுகளை மக்களோடு மேலும் நெருக்கமாக்கும். அதுதவிர மத்திய அரசின் தயவில்தான் பல திட்டங் கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலைமையிலும் மாற்றம் வரும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி கள் மாநில அரசுகளின் சுயாட்சி கோட்பாட்டை நிறைவேற்றும் நோக்கம் கொண்டவை என்பது தெளிவு.

கருத்துகள் இல்லை: