* நாடு முழுவதும் சுமார் ஒருகோடியே முப்பது லட்சம் சில்லரை விற்பனை கடைகள்..
* அதனால் நேரடியாகவும் மறைமுக மாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ள 8 கோடி மக்கள்.
* தேசத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி யில் (ஜிடிபி) 11 சதவீதம் அளவிற்கு, அதா வது சுமார் 8 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நடை பெறும் வர்த்தகம்.
* நமது நாட்டில் விவசாயத்திற்கு அடுத்ததாக அதிகமான மக்கள் தங்கள் குடும்பத்தோடு ஈடுபட்டுள்ள ஒரு தொழில்.
கோடிக்கணக்கான மக்கள் ஈடுபட் டுள்ள இப்படிப்பட்ட துறையில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் அரசு சாதிக்க போவது என்ன? வர்த்தக சமூகத்துடன் எவ்வித உரையாடலையும் நடத்தாமல் தானடித்த மூப்பாக நடந்து கொள்வதன் காரணம் என்ன... இதனால் விளையப்போகும் ஆபத்துகள் என்ன.. கேள்விகள் தொடர்ந்து கொண்டிருக் கிறது. ஆனால் அரசு ஒருபோதும் பதில் சொல்லப்போவதில்லை. காரணம் இந்திய தேசத்தின் நூறு கோடி மக்களின் நல்வாழ்வைவிட, ஒருசில பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்டவர்கள் இவர்கள்...
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறு வனங்களின் நுழைவு என்பது பேராபத் தை விளைவிக்கும் ஒரு செயலா கும். ஆம் உலக அனுபவங்கள் நமக்கு அதைத் தான் சொல்லிக்கொண்டிருக் கிறது.
* சில்லரை வர்த்தகத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்த 80ம் ஆண்டுகளில்,இங்கிலாந்தில் இத் துறையில் ஈடுபட்டிருந்த சுமார் 4 லட்சம் பேர் ஒருசில மாதங்களில் வேலையி ழந்து வீதிக்கு வந்தனர். இந்த நாட்டில் இருந்த 58,862 சில்லரை வர்த்தகக் கடைகளில் 25,800 கடைகள் குறுகிய காலத் திற்குள்ளேயே இழுத்து மூடப்பட்டன.
* அந்நிய நுழைவை அனுமதித்த தாய்லாந்தில் மிகப்பெரிய நிறுவனங்கள் சுமார் 40 சதவீதம் அளவிலான அந் நாட்டின் வர்த்தகத்தை பிடித்துக் கொண் டன. சுமார் 60 ஆயிரம் கடைகள் அடைக் கப்பட்டன. ஒரு சில்லரை வியாபாரி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கடைக்குள் சென்று தீக்குளித்த சம்பவமும் தாய் லாந்தில் நடைபெற்றது. முடிவில் சில் லரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங் களை அனுமதித்தது தவறு என அந் நாட்டு பிரதமரே ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
* உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன் றாகக் கருதப்படும் ஜப்பானில் தற்போது நகர எல்லைகளுக்குள் எந்த புதிய அந் நிய நிறுவன கடைகளையும் அனுமதிப் பதில்லை என அந்நாட்டு அரசு கொள் கை முடிவை எடுத்துள்ளது. அந்நிய நிறு வனங்கள் தங்கள் கடைகளை ஊருக்கு வெளியேதான் திறந்து வைத்து வியா பாரம் செய்ய வேண்டும் என்ற நிலை அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
* வால்மார்ட் நிறுவனத்தின் தலை மையகமான அமெரிக்காவில் கூட கலி போர்னியா, சிகாகோ போன்ற நகரங் களில் அதன் புதிய கிளைகள் திறக்கப் படுவது அந்நகரங்களின் மேயர்களால் தடை செய்யப்பட்டுள்ளது.
இப்படியாக உலக நாடுகளை கபளீ கரம் செய்து, அந்நாடுகளின் வர்த்தகர் களை வீதிக்கு கொண்டு வந்த அந்நிய நிறுவனங்களைத்தான் இந்தியாவிலும் அனுமதிக்க துடியாய்த் துடிக்கிறது நமது மத்திய அரசு. வாணிபம் செய்ய வந்த அந் நிய நிறுவனங்களை எதிர்த்துப்போராடிய மகாத்மாவின் சீடர்கள் நாங்கள்தான் என்று சற்றும் கூச்சமில்லாமல் மார் தட்டிக் கொள்கிறார்கள்.
இந்தியாவில் சில்லரை வர்த்தகத் தில் அந்நிய நிறுவனங்கள் நுழைந்து விட்டால் ஏற்படப்போகும் ஆபத்துக் களின் பட்டியல் மிகப்பெரியது.
* தங்கள் குடும்பங்களோடு சில் லரை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 8 கோடிப்பேர் வேலையிழந்து வீதிக்கு வரும் நிலை ஏற்படும். ஏற்கெ னவே வேலையில்லாத கூட்டத்தின ரோடு இந்திய வர்த்தகர்களும் இணைந்து கொள்ளும் காட்சியை இந்த தேசம் பார்க்க நேரிடும்.
* அந்நிய நிறுவனங்கள் தங்கள் கடை களின் கொள்முதலுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி வீரிய விதை களையும், விஷத்தன்மையுள்ள மருந்து களையும் தெளித்து, நமது நிலங்களை பாழ்படுத்தும் நிலை ஏற்படும்.
* இந்திய நகரங்களின் மையப்பகுதிக ளில் உள்ள மிகப்பெரிய வர்த்தக வளாகங் களை கையகப்படுத்தி, அவர்களின் கட் டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதுதான் அவர்களின் முதன்மையான இலக்காக இருக்கும்.
* அதிக லாபம் பெறுவதற்காக வெளி நாடுகளிலிருந்து மூலப்பொருட்களை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்வது, தாங்கள் கையகப்படுத்தும் விவசாய நிலங்களிலிருந்து விளை பொருட்களை தாங்களே நேரடியாக சந்தைக்கு கொண்டு வருவது போன்ற செயல்களால் விநியோகஸ்தர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லுதல் ஆகிய தொழில் களில் பெருமளவு ஈடுபட்டிருப்போர் வேலையிழக்கும் நிலை ஏற்படும்.
* அதையெல்லாம் விட மிக அதிக லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும். அதற்காகத்தான் இந்திய தெருக்களில் கடை விரிக்க ஓடி வருகின்றனஅந்நிய நிறுவனங்கள்... இதனால் நுகர்வோர் களான இந்திய மக்கள் மிக மிக கடு மையாக பாதிக்கப்படுவார்கள்.
* ரிசர்வ் வங்கி தான் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிவித்தபடி, இந்திய சில் லரை வியாபாரிகள் மிகக்குறைந்த லாபத்திலேயே தங்கள் பொருட்களை விற்பனை செய்கின்றனர் என்ற செய்தி யையும் அந்நிய நிறுவனங்களின் நுழைவோடு பொருத்திப்பார்க்க வேண்டி யுள்ளது.
இப்படிப்பட்ட துயரங்களை ஏற்ப டுத்தி இந்திய மக்களையும், உள்நாட்டு சில்லரை வியாபாரிகளையும் வஞ்சிக்கும் அரசின் திட்டத்தினை எதிர்த்து பெருங் குரல் எழுப்ப வேண்டிய தேவை நம்முன் னால் உள்ளது. இந்தியாவில் மிக அதிக மான குடும்பங்கள் ஈடுபட்டுள்ள விவசா யத்தை பாழாக்கி, அவர்களை தற்கொலை பாதைக்கு தள்ளிவிட்டுள்ள மத்திய அரசு, தற்போது அதற்கடுத்து அதிகமான குடும் பங்கள் ஈடுபட்டுள்ள சில்லரை வர்த் தகத்தையும், காவு கொடுக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்கு எதிராக நாம் நடத்தும் போராட்டங்கள் என்பது வர்த்தகர்களை காக்கிற போராட்டம் மட்டுமல்ல.. இதுவும் கூட தேசத்தை காக்கிற போராட்டங் களில் ஒன்றே..
ஆர்.பத்ரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக