வெள்ளி, 24 ஏப்ரல், 2009

கவிதைக்குப் பொய் அழகு! அரசியலுக்கு நேர்மை அழகு!!

-வே. மீனாட்சிசுந்தரம்

“கவிதைக்குப் பொய் அழகு” என்றது வைரமுத்துவின் வெள்ளித்திரை பாட்டு வரிகள். இப்பொழுது அரசியலுக் கும் அதனைப் பொருத்த தி.மு.க. தலை வரின் கவிதைகள் முயற்சிக்கின்றன. இன்றைய மெய்களை மறைக்க அக்கவி தைகள் பழங்கதைகளில் கற்பனையைக் கலக்கின்றன; அவதூறுகளையும், முத் திரை குத்தல்களையும் தாண்டி வளரும் கம்யூனிச இயக்கத்தின் முன்னோடிகள் மீது களங்கம் கற்பிக்க அக்கவிதைகள் வரலாற்றை திரித்து சரடு விடுகின்றன.

பிரிட்டனுக்கு அடிமைப்பட்ட காலத் தில் விடுதலைப் போரில் ஈடுபட்டும், பின்னர் நிலப்பிரபுத்துவ உடமையை தகர்க்க பாடுபடுகிறபொழுது ஜோடிக்கப் படும் சதி வழக்குகளை சந்திக்காதவர் களுக்கு வரலாற்றின் துடிப்புக்களை உணர இயலாது. பிறரை இம்சிக்கும் நிலப் பிரபுத்துவ காலத்து பண்பாட்டை சக வாச தோஷத்தால் சுவீகரித்து புளகாங் கிதம் அடையும் ஒருவருக்கு பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பிரசவ வேதனை களை உணரவே இயலாது. திரும்பிப் பார்த்தால் இரும்புக்கரமும், ரத்தக் கறை களும், ஆயிரம் உண்மைகளை பிட்டு வைக்கும்.

நெய்வேலியில் உடன் பிறப்பையே குண்டால் துளைத்தது முதல், தாமிர பரணி ஆற்றுப் படுகொலைகள், அணைக்கட்டில் கூலி கேட்ட கிழவி மீது குண்டு வீச ஏவியது, கடைசியாக கை யில் கேஸ் கட்டுடன் வந்த வழக்கறிஞர் களை 5000 போலீசை வைத்து துவைத் ததை வீடியோவில் பார்த்து மகிழ்ந்தது, அவைகளை எல்லாம் அவ்வப் பொழுதே கண்டித்த கம்யூனிச இயக்கம் எங்கே! அண்ணா காலத்து காங்கிரஸ் எதிர்ப்பில் மலர்ந்த பேரியக்கமான தி.மு.கவை சுருக்கி, சுருக்கி ஊழல் பெருச்சாளியாக்கிய அர சியல் சாமர்த்தியம் எங்கே! இப்பொழுது பெரிய ஜி.எம். (ஜெனிட்டிக்கலி மாடிபைடு அல்லது காந்தி மாடிபைடு) பெருச்சாளி யாகிவிட்ட காங்கிரசை நம்பி நிற்கும் நிலைக்கு இயக்கத்தை தாழ்த்திக் கொண்ட ஒருவருக்கு பொய்களே ஆயத்த அணிகலன்களாகும். தோழமைப் பூர்வ மான விமர்சனங்களை பொருட்படுத் தாமல் வெகு மக்களை தவிக்க விடும் அர சியல் நடைமுறைக்கு பழகிப்போன தி.மு.க. தலைமையோடு முரண்பட்டு அ.தி.மு.க.வோடு உடன்பாடு கொண்டு நிற்கும் இடதுசாரிகள் மீது “வசவு கவி தைகள்”, “முக்காடு கவிதைகள்” என தாக்குதல்கள் ஏன்?

வசன கவிதை, வெண்பா, கலிப்பா என கவிதைகளில் பல வகைகள் உண்டு. அதென்ன முக்காடு வகை? அவரது நெடுங்கதை ஒன்றில் வருகிற கதாநாயகன் தனது கோரமுகத்தை மறைக்க முக்காடு போட்டு அலைவான். அது போல் இந்த கவிதைகளிலும் கோர மான பொய்கள் மெய்யெனும் முக்காடு போட்டு வருவதால் முக்காடு கவிதை என பெயர் பெறுகிறது. அந்த பொய்களும் பொருத்தமாக இல்லை. 1971ல் தி.மு.க. வோடு கூட்டணி வைத்து தேர்தலில் நின்ற குமாரமங்கலம் விநியோகித்த “கரன்சி காகிதங்களில் காந்தியடிகள் உருவம் படமாக திகழ்ந்து” இவரைப் பார்த்து சிரித்தது என்கிறது கவிதை. ஆனால் அன்று காந்தி சிரிக்கிற மாதிரி கரன்சி வரவே இல்லை. 1969ல் காந்தி அமர்ந்து படிக்கிற மாதிரியான உருவம் பொறித்த கரன்சியே நூற்றாண்டு நினை வாக வெளிவந்தது. 1997க்குப் பிறகுதான் காந்தி சிரிக்கிற கரன்சி வந்தது. திருமங்க லத்தில் இடைத்தேர்தலில்தான் இலைக் கடியிலும், வீட்டுக்கு வீடு வெற்றிலை சுரு ளாகவும் காந்தி சிரித்தார். சிங்கப்பூர் மற்றும் தீவு நாடுகளின் வங்கிகளில் புரளும் வாஷிங்டன் முத்திரை பெற்ற கரன் சியையும், கமுக்க பட்டியல் முதலீட்டு தாளையும் (பி-நோட் முதலீடு) பார்த்து, பார்த்து மகிழும் கூட்டத்தில் சேர்ந்து விட்ட ஒருவருக்கு இந்திய கரன்சியில் காந்தி எப்போது சிரித்தார் என்பது மறந்து விடும். இப்பொழுது தூக்கம் கெட்டதால் தோற்றம் வருகிறது. தான் செய்வதை பிற ரும் செய்வதாக தோன்றுகிறது. இதனைத் தான் இடமாறு தோற்றப் பிழை என்பர்.

ஆக இத்தகைய இடமாறு தோற்றப் பிழைகளை கொண்ட கவிதைகள் பிறக்க காரணம் என்ன? “இம்மாம் பணம் எப்படி வந்தது? பேரன் தயவால் இடைத்தரகர் கள் சுருட்டிய ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளி வந்த மாதிரி சொத்து விவரம் வெளிவரும் வாய்ப்பையும் இழந்து விட்டோமே” என்று திருமங்கல மக்கள் போல் தமிழ கமே சிந்திக்க தொடங்கி விடக்கூடாதே என்பதாலா? அல்ல! அல்ல!! நம்மக்கள் தமிழ்ப் பற்றால் அவர் குடும்பத்தையும் இவருக்கு குடையாக நிற்கும் அவாள், இவாள் என குடுமி கொண்டை பேத மின்றி பெருமுதலாளி பட்டியலிலே சேர்ந்துவிட்ட வட்டார முதலாளிகள் கூட்டத்தையும் சொத்து சேர்க்கட்டுமே! என்று பெருந்தன்மை காட்டுவதை உணர்ந் தவர். அதனால் அரசியல் பிழைப்பு நடத்த முடிகிறது என்பதையும் நன்றாகவே அறி வர். ஆனால் இவர்களோ பணவீக்கத் தை மட்டுமே பெருக்கும் ரியல் எஸ்டேட் பிசினஸ் மற்றும் பங்கு, சரக்கு பத்திர முத லீடுகள் பின்னால் ஓடி பணத்தை மலை போல் குவிக்கின்றனர். இதனால் தொழில் மற்றும் விவசாயம் கெட்டது. கோடானு கோடி குறு-சிறு விவசாயிகளை ஓட் டாண்டி ஆக்கியது. உழைப்போர் வாழ் வை நிச்சயமற்றதாக்கி விட்டது. கிரிமி னல்களை அரசியலிலே புகுத்தியது; மறு பக்கம், ஒற்றர்களின் ரகசிய கோப்பு, பட்டா மற்றும் நிலம் கேட்கும் இடதுசாரிகளின் போராட்டங்கள் மக்களை சிந்திக்க வைத்துவிட்டது என்ற தகவல்களை தருவதால் கொதிப்பு ஏற்படுகிறது .

இடதுசாரிகளின் விமர்சனத்திற்கு பதில் கூறும் நேர்மை இல்லாததால் ஆத் திரத்தில் கோரவடிவில் கவிதைகள் பிறக் கின்றன. இடதுசாரிகள் அப்படி யென்ன “பெரிய கேள்விகளை கேட்டுவிட்ட னர்?” என வினவலாம்.

மின்வெட்டு

முதல் கேள்வி, மின் உற்பத்தியை சீர் குலைத்தது நீங்கள் பங்குபெற்ற பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்த தனி யார்மய சட்டம் தானே? அதன்மூலம் மின்சார உற்பத்தி, மொத்த விநியோகம், சில்லறை விநியோகம் இவைகளை பிரித்து பெருமுதலாளிகள், இடைத்தரகர் கள் கையிலே கொடுக்கிற இச்சட்டத்தை அப்பொழுதே திருத்துவோம் என்று கூறி மக்களை ஏமாற்றியதும் நீங்கள்தானே? அதன் பின்னர் அதனை திருத்த வாக் குறுதி தந்த காங்கிரஸ் கூட்டணியிலும் பங்கு பெற்றதும் நீங்கள் தானே? இப் பொழுது சட்டத்தை ஜூலை மாதத்தில் சந்தடி இல்லாமல் அமல்படுத்தப்போவ தும் நீங்கள் தானே?

மாநில சுயாட்சி

மூச்சுக்கு மூச்சு ‘மாநில சுயாட்சி’ பற்றி பேசுகிற உங்களது கூட்டணி ஆட் சியில்தானே கல்வி மாநில பட்டியலி லிருந்து இடம்மாறி பொதுப்பட்டியலுக்குப் போனது. அதை மறைத்து இப்பொழுது தேர்தல் வாக்குறுதியாக மாநிலப் பட்டிய லுக்கு கொண்டுவர தி.மு.க. பாடுபடும் என்று யாரை ஏமாற்ற எழுதி வைக்கப் படுகிறது? இந்த கூட்டணிதானே சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் மாநில அரசின் உரிமையை பறித்தது? நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் ஓர வஞ்சனையை தடுக்க சட்டமன்றத் திலே தீர்மானம் போடுவது; அங்கே மத்தி யில் ஆட்சியில் அமர்ந்தவுடன் சட்டம் கொண்டுவர மறுப்பது என்று இரட்டை வேடம் போடுவது தி.மு.க. தலைமை தானே?

இட ஒதுக்கீடு

சில உயர் பதவிகளுக்கு இட ஒதுக் கீடு கிடையாது என்று இப்பொழுது திருத் தியது உங்களது அரசுதானே. யாரை ஏமாற்ற, இட ஒதுக்கீடு எங்களது உயிர் மூச்சு என்று கதைக்கீறீர்கள்? பா.ஜ.க. கூட்டணியிலும் பின்னர் காங்கிரஸ் கூட்டணியிலும் இருந்து நீங்கள் சாதித் தது ஊழல் தவிர வேறு ஏதேனும் உண்டா? இல்லை! எனவே விநயமாக கேட்போர் மீது கோபம் வருகிறது! பொய்யர் தம் மெய்க்கு மக்கள் பலியாகும் காலம் மலையேறிவிட்டது.

கருத்துகள் இல்லை: