திங்கள், 11 மே, 2009

ஹார்லிக்ஸ், காம்ப்ளான் பாட்டில்கள் உண்டு..ஆனால்...

` எங்கள் வீட்டிலும்
ஹார்லிக்ஸ்

காம்ப்ளான்

பாட்டில்கள் உள்ளன

ஆனால் 
ஒன்று

ஊறுகாய் போட

இன்னொன்று

உப்பு கொட்டி வைக்க’’

என்று ஒரு புதுக்கவிதை கூறும் நிலையில் தான் இன்று தமிழக மக்களின் வாழ்க்கை உள்ளது. தங்கள் அனுபவத்தின் மூலம் மக்கள் இதனை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். விலைவாசி உயர்வையும் மின்தடை பிரச்சனையையும் எடுத்துச் சொல் லும் போது மக்கள் எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள் என்கிறார் கோயம் புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் பி.ஆர்.நடராஜன். எளிமையோடும் அதே சமயம் சுறு சுறுப்போடும் வாக்கு சேகரித்து வரும் இவர்மக்க ளோடு எளிதாக ஒன்றிக் கலந்து விடும் இயல்புடையவராய் இருக்கிறார். கோயம்புத்தூர் தொகுதியில் அனை வருக்கும் வீடு; மனைப்பட்டா; போதிய குடிநீர் வசதி என்பதை உத்தரவாதப் படுத்துவதே முன்னு ரிமைப் பணி என்கிறார்.

இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றி வந்து எப்போதும் மக்களைச் சந் தித்து வந்த இவர் தமக்கு வாக்களிக்கு மாறு மக்களிடம் கேட்டுக் கொள்வது சிரமமாக இல்லை.

1500 உள்நோயாளிகளுக்கும் 6000 புறநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஸ்பெ ஷாலிட்டி மருத்துவமனையாகத் தரம் உயர்த்துவது...

பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட குழந்தைகளுக்கு குறிப்பாக -அருந்ததியர் குழந்தைகளுக்கு கல் வியை உறுதி செய்வது.... போன்ற வற்றை குறிக்கோளாகக் கொண்டிருக் கிறார் பி.ஆர்.நடராஜன்.

சிறு மற்றும் மிகச் சிறு தொழில் நிறுவனங்கள் மின் தடையால் பாதிக் கப்படுவதற்கு மாநில அரசின் திறமை யின்மையே காரணம் என்கிறார் அவர்.

வலுவானது மூன்றாவது அணி என்று மக்கள் நம்புவதால் இதற்கு மக்கள் அங்கீகாரம் அளிக்கிறார்கள் என்பதும் அவரது வலுவான கருத்து. 

-தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்

2 கருத்துகள்:

அப்பாவி அமுதா சொன்னது…

மின் தடையின் வீச்சு தேர்தல் முடிவில் தெரியும்....

விடுதலை சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி அமுதா